Thursday, January 7, 2010

தமிழில் 3idiots மாதவன், சூர்யா, கணேஷ் வெங்கட்ராமன்


3idiots ஒரு நல்ல கருத்தை நகைச்சுவையாகவும் ஆழமாகவும் பதிவு செய்திருக்கும் ஒரு அருமையான படம். ஹிந்தி தெரியலைன்னாலும் ஆங்கில sub title இருக்கு தவறாம பாருங்க. அமீர்கான் இந்த வயதிலும் கல்லூரி மாணவன் வேடத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்.

All is Well என்ற வாக்கியம் மனிதனின் தன்னம்பிக்கையின் ஊன்றுகோலாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இதை அமீர்கான் உபயோகிக்கும் போதெல்லாம் கைத்தட்டல் பெறுகிறார். அதிலும் ஒரு பெண்ணிற்கு ஆண்லைனில் பிரசவம் பார்த்து குழந்தையை காப்பாற்றும் காட்சியில் மெய் சிலிர்க்க வைத்துள்ளனர்.

பாடத்திட்ட முறையை எதிர்த்து பேசும் காட்சிகளில் நகைச்சுவையாக இருந்தாலும் ரசிகர்கள் அதன் கருத்தாழம் புரிந்து கைத்தட்டுகிறார்கள்.மொழி பாரபட்சமின்றி அனைவரும் பார்த்து பாரட்ட வேண்டிய ஒரு திரைப்படம் இந்த 3idiots. தலைமறைவான ஒரு நண்பனைத் தேடி இரண்டு நண்பர்கள் அலைவதில் தொடங்கி அவர்களின் நினைவலைகளுக்குள் நம்மை அழைத்து சென்று ஒரு அற்புதமான கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

நடிகர்கள் அமீர்கான், மாதவன் மற்றும் ஜோசி மூவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். பிள்ளைகளின் ஆசை என்ன என்று தெரியாமல் தங்கள் விருப்பத்திற்கு பிள்ளைகளின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பெற்றோர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல பாடம்.

அது மட்டுமல்ல நம் கல்விமுறையின் குறைபாடுகளும் ஆசிரியர்களும், மாணவர்களும் அதற்கு அடிமையாகியிருப்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார். இந்த படம் நிச்சயம் தமிழில் மறுபதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் நம் தமிழ் சினிமாவில் மூன்று நடிகர்கள் ஒரே படத்தில் நடிப்ப்தென்பது கடினமான விடயமாக உள்ளது.


இந்த படம் தமிழில் எடுக்கப் பட்டால் இந்த மூன்று நாயகர்களும் பொருத்தமாக இருப்பார்கள்:

சூர்யா - அமீர்கான் பாத்திரம்
மாதவன் - மாதவன் பாத்திரம்
கணேஷ் வெங்கட்ராமன் - ஜோசி பாத்திரம்

கரீனாவுக்கு அந்த அளவு முக்கியத்துவமில்லாததால் ஏதாவது ஒரு நடிகையை கதாநாயகியாக்கி படம் எடுக்கலாம். இந்த மூன்று நடிகர்களும் தங்களின் நடிப்புத் திறமைய நிரூபித்தவர்கள். இந்த 3idiots ஐ தமிழில் மறுபதிவு செய்து வெளிவரும் நாளுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்.

6 comments:

புலவன் புலிகேசி said...

நானும் பார்த்தேன் நண்பா. அருமையான படம். நீங்கள் சொன்ன மூவரும் பொருத்தம்தான். எடுப்பார்களா?

திவ்யாஹரி said...

"இந்த 3idiots ஐ தமிழில் மறுபதிவு செய்து வெளிவரும் நாளுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்."

இன்னும் பார்க்கவில்லை நண்பா.. ஆனால் உங்கள் பதிவை படித்ததும் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.. நானும் காத்திருக்கிறேன்..

Anonymous said...

enntha sitela full subtitle kidaikum

goma said...

வேண்டாம் விஷப் பரிட்சை.தமிழில் எடுத்த பிறகு புரியும் என் எச்சரிக்கை.

Sri said...

Nalla Think pannurinka Boss........Anyway good thought

வசந்தமுல்லை said...

good idea, muthal nal mutha show muthal ticket vangi padam parppen