Sunday, January 31, 2010

கலைவாணர் என்.எஸ்.கே - நகைச்சுவை நாயகன் (1)


நவம்பர் 29 1908 நமக்காக என்.எஸ்.கே என்பவரை அவரின் தாயார் பெற்றெடுத்த நாள். தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகின் நாயகனாக ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனோடு இந்த தொடரை துவக்குகிறேன்.

முதலில் வில்லுப்பாட்டுகாரனாக தனது கலைப்பயணத்தை தொடங்கிய இவர் பின்னர் சில நாடகங்களில் நடித்து நாடகக் கலைஞராக திகழ்ந்தார்.பின்னர் சொந்தமாக ஒரு நாடக கம்பெனியை துவக்கினார். தென்னிந்தியாவில் சினிமா புகழ் பெற துவங்கியபின் இவருக்கும் அதில் ஆர்வம் வரவே சினிமாதுரையில் நுழைந்தார்.

இவர் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். இரண்டு மூத்த சகோதரிகள் செல்லம்மாள், பாஞ்சாலி மற்றும் மூன்று இளைய சகோதரிகள் மகாலெஷ்மி, சுப்பம்மாள், மின்னம்மாள். மேலும் ஒரு இளைய சகோதரன் திரவியம். இவர் 5ம் வகுப்பு வரை மளையாளத்தை தாய்மொழியாக கொண்ட பள்ளியில் படித்து வந்தார்.

அவரின் குடும்ப வறுமை அவரது படிப்பை அத்துடன் நிறுத்தி விட்டது.பின்னர் ஒரு கடையில் மாதம் 5ரூ சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார்.பின்னர் கடயின் முதலாளி இவர் கடைக்கு தாமதமாக வருவதால் இவரை திட்டி சம்பளத்தை குறைத்து 4 ரூ மட்டும் கொடுத்து வேலையை விட்டு நீக்கினார்.

அதன் பின் நாடகத்துரையில் ஆர்வம் கொண்டு வீட்டிலேயே நடித்து பழகினார்.பின்னர் இவர் தந்தை இவரை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டார். அதுவே அவரின் கலையுலகின் தொடக்கமாக அமைந்தது. 1924ல் இவரது பெயர் கிருஷ்ணனில் இருந்து என்.எஸ்.கிருஷ்ணனாக மாற்றப்பட்டது.

என்.எஸ்.கிருஷ்ணன் என்றால் "நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன்". தனது ஊர் பேரான நாகர் கோவிலையும் தனது தந்தை பெயரையும் இணைத்தே இவர் இப்பெயரில் வழங்கப் பெற்றார்.

சில காலங்களுக்கு பின்னர் டி.கே.எஸ் நாடக குழுமத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதன் பின்னர் இவரின் திரைவாழ்க்கை தொடங்கியது. அது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

(தொடரும்)

2 comments:

திவ்யாஹரி said...

N .S.K. எனக்கு ரொம்ப பிடிக்கும்.. தொடர்ந்து எழுதுங்கள்.. ஆவலாய் இருக்கிறேன்..

சகாதேவன் said...

என்.எஸ்.கே ஒருமுறை தன் மனைவியுடன் நண்பர் வீடு சென்றபோது, என்ன சாப்பிடுகிறீர்கள்? டீயா, காபியா என்று கேட்டார்களாம். அதற்கு அவர்
"டீயே மதுரம்"
என்றாராம். கலைவாணர் பற்றி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதை சொல்லி விடுவேன்.