Wednesday, February 24, 2010

சச்சினுக்கு நிகர் யாராவது உண்டா?


சயீத் அன்வர் கடந்த 1997ம் ஆண்டு சென்னையில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை கடந்த ஆண்டு ஜிம்பாப்வே வீரர் கோவன்ட்ரி சமன் செய்தார்.

இந்த சாதனையை இன்று நம் தலைவர் சச்சின் உடைத்தார். அத்தோடு நில்லாமல் 200 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையையும் படைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார்.

"காட் ஆஃப் கிரிக்கெட்" என இவரைப் புகழ்வதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு மட்டை வீச்சாளனாக இது வரை எவரும் செய்யாத, இனிமேல் யாராவது செய்ய முடியுமா? எனக் கூடத் தேன்றுகிறது. அப்படிப் பட்ட பல சாதனைகளைப் புரிந்து 16 ஆண்டுகளைக் கடந்து இன்றும் துடிப்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இன்னும் 7 சதம் அடித்தால் சதத்தில் சதமடித்தப் பெருமையும் பெற்று விடுவார். அதோடு மட்டுமல்ல இன்னும் அவர் 150 ஐம்பதுகளைக் கடக்க வெறும் மூன்று 50கள் மட்டுமேத் தேவை.

இனி இவர் சாதனையை முறியடிக்க எவரும் இல்லை என மார்தட்டி சொல்லலாம். இதை செய்தவர் என் இந்தியன் என தம்பட்டமடிக்கலாம்.

கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சினுக்கு வாழ்த்து சொல்ல வாங்க. முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Tuesday, February 23, 2010

அஜீத் என்னத் தவறாக சொல்லி விட்டார்?


சமீபத்தில் திரையுலகினரின் கோபம் எல்லாம் தல அஜீத் மேல்தான். அப்படி என்ன தவறாக சொல்லி விட்டார்? "நடிகர்களை எந்த ஒரு கூட்டத்திற்கும், விழாவிற்கும் கட்டாயப் படுத்தி அழைக்கிறார்கள். அது தவறு". நடிகர்கள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் கட்டாயப் படுத்தி அழைபது தவறுதானே?

இதை சொன்னதற்கு ஏன் இந்த திரைப்புள்ளிகள் அவரை எதிர்க்கின்றனர். இந்த வி.சி.குகநாதன் ஏன் கொதிக்கிறார்? என்பதுத் தெரியவில்லை. "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்" அப்புடின்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க அது உண்மைதான் போல. அதனால் தான் அஜீத் சொன்ன வார்த்தைக்கு அவ்வளவு எதிர்ப்பு போல.

அப்புறம் தல அஜீத் பொதுவாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. மனதில் இருப்பதை எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசக் கூடிய நடிகர்கள் மிகச்சிலரே. அதில் இப்போதுள்ள நடிகர்களில் அஜீத் மட்டுமே எஞ்சியிருக்கிறார். இதற்காக நடிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தாலும் பெப்ஸி இயக்கம் தன் ஆளுமையைக் காட்ட இந்த எதிர்ப்பை காட்டி வருகிறது.


இது குறித்து நடிகர் விஜய் அஜீத்துக்கு ஆதரவாக

"அஜீத் ஒரு திறந்த புத்தகம் மாதிரி. அவர் மனதில் ஒன்றுமில்லை. நினைப்பதை உடனே கொட்டிவிடுவார். அதைப் பெரிதுபடுத்தி அவருக்கு மன உளைச்சல் தர வேண்டாம்..." என்று வி.சி. குகநாதனிடம் பேசியிருக்கிறார்.

அதைக் கேட்ட குகநாதன் அவரிடமும் எரிந்து விழுந்திருக்கிறார். அவருக்கு யாராவது பி.பீ மாத்திரை வாங்கிக் கொடுங்க. அப்புறம் இந்த ஜாக்குவார்த் தங்கம், இவரை யாருப்பா இங்க கூப்பிட்டா?

இவுர அஜீத் கல்வீசித் தாக்கினாராம். எந்த நடிகனும் அப்படி செய்ய மாட்டான். யார் செய்தார்கள் என ஆராயாமலே அஜீத் ரசிகர்கள் மீது மட்டுமல்லாமல் அஜீத் மீதும் புகார் கொடுத்திருக்கிறாராம் நடிகர் சங்கத்திடம். இதற்காக குயிலி, மும்தாஜ், சத்யராஜ் இவர்களோடு செயற்குழூ கூட்டி விவாதிக்கப் போறாங்களாம் (கொடுமைடா).

அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அறிக்கையெல்லாம் வேற உட்டுருக்காங்க. ஆனா 'தல' எப்பவும் போல நிமிர்ந்துதான் நிக்குது. பெரும்புள்ளிகள் சிலர் சும்மா ஒரு பேப்பர்ல "வருந்துகிறேன்" அப்புடின்னு எழுதிக் கொடுத்துட்டு வேலைய பாருங்கன்னு சொன்னதுக்கு நம்ம தல "நான் ஒன்றும் தவறாக பேசவில்லை. நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். வேண்டுமென்றால் சினிமாவை விட்டு விலகிக்கறேன்னு" தில்லா சொன்னாரு.

இதற்கு ஆதரவுத் தெரிவித்துக் கைத்தட்டியதற்கு "சூப்பர் ஸ்டாருக்கும்" எத்தனை எதிர்ப்புகள். இதே வார்த்தையை அவர் பேசியிருந்தால் கர்நாடகாவிற்கே திருப்பி அனுப்பிருப்பாங்க போல. திரையுலகமும் அரசியல் உலகமாகத்தானே மாறிப் போயிருக்கிறது. அங்கு எங்கே உண்மையைப் பேசுவது?

விண்ணைத்தாண்டி வருவாயா - ஆன்லைனில் புக் செய்ய


இப்போது திருப்பூர் மற்றும் இதர சென்னைத் திரையரங்கங்களிலும் புக்கிங் ஓபன் செய்யப் பட்டுள்ளது.

சென்னை உதயம்

Click Here

சென்னை காசி, ஐட்ரீம்ஸ்

Click Here

திருப்பூர் சிவன்

Click Here

மதுரை மற்றும் காரைக்குடி

Click Here

ஏ.ஆர்.ரகுமான் இசையில் நீண்ட நாட்களுக்குப் பின் வரும் இப்படம் மாபெரும் வெற்றியை பெரும் என்பதில் சந்தேகமே இல்லை.

விண்ணைத்தாண்டி வருவாயா - புக்கிங் செய்ய


கௌதம் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்து வரும் வெள்ளியன்று வெளிவரும் "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தின் புக்கிங் மதுரை, காரைக்குடி, சென்னையில் ஓபன் செய்யப் பட்டுள்ளது.

மதுரை குரு திரையரங்கில் ஆன்லைன் புக்கிங் செய்ய

http://www.limata.com/Booking/Ticket2.aspx?Lname=Madurai&Mid=678&Mname=Vinnaithaandi%20Varuvaayaa&Mlan=Tamil&sType=Movie

காரைக்குடி நடராஜா டாக்கீஸ் மற்றும் சென்னை ஐட்ரீம்ஸ் திரையரங்குகளில் ஆன்லைனில் புக் செய்ய

http://www.ticketnew.com/OnlineTheatre/Theatre/coming-soon/vinnaithandi_varuvaya1.html

மற்ற நகர்களில், சென்னையின் மற்ற திரையரங்க்குகளில் புக்கிங் இன்று இரவுத் தொடங்குகிறது.

Thursday, February 18, 2010

தமிழ் சினிமா உருவான வரலாறு - 4



1933ல் தமிழில் வெளிவந்த திரைப்படங்கள் மொத்தம் ஆறு. முதலில் "இம்பிரியல் ஃபிலிம்ஸ்" தயாரிப்பில் நாகேந்திர ராவ், ருக்மணி லீலா நடிப்பில் "கோவலன்" திரைப்படம் வெளிவந்தது.

அடுத்து கிருஷ்ண மூர்த்தி, மணி மற்றும் ராஜலெஷ்மி நடிப்பில் சத்யவான் சாவித்ரி வெளி வந்தது. நியூ தியேட்டர்ஸ் தயாரிப்பில் அங்கமுத்து , சுப்பையா தேவர் நடிப்பில் "நந்தனார்" என்ற படம் வெளி வந்தது. இந்தத் திரைப்படம் 1933, 35 மற்றும் 42 ம் ஆண்டுகளில் மூன்று முறை தயாரிக்கப் பட்டது. இத்திரிப்படத்தை .முத்துசாமி ஐயர் இயக்க எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார்.

இத்திரைப்படத்தை தயாரித்த நியூ தியேட்டர்ஸ் 10-பிப்ரவரி-1931ம் ஆண்டு பி.என்.சிகார் அவர்களால் கல்கத்தாவில் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் முதன் முதல் "டேனா பவோனா" என்ற பெங்காலி படத்தை 1931ல் தயாரித்து வெளியிட்டது.

பின்னனி பாடும் முறையை தமிழுக்கு அறிமுகப் படுத்தியது .வி.எம் என்றால், அதை முதன் முதல் நம் இந்தியத் திரை உலகத்துக்கு அறீமுகப் படுத்தியது இந்த "நியூ தியேட்டர்ஸ்" தான்.

"பாக்ய சக்ரா" என்ற பெங்காலி திரைப்படத்தில்தான் இந்த பின்னனி பாடும் முறை அறிமுகப் படுத்தப் பட்டது. முதல் பின்னனி பாடியவர்கள் கே.சி.தேய், பரூல் கோஸ் மற்றும் சுப்ரபா சங்கர் இந்தத் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதனால் இந்தித் திரைப்பட உலகிற்கும் பின்னனி பாடும் முறையை அறிமுகம் செய்த பெருமை "நியூ தியேட்டர்ஸையே" சாரும்.

1933ல் அடுத்ததாக வெளிவந்தத் தமிழ்த் திரைப்படம் "ப்ரஹலாதா". இதைத் தயாரித்ததும் "நியூ தியேட்டர்ஸ்" தான். ஐந்தாவதாக "நேஷனல் மூவிடோன்" தயாரிப்பில் பி.வி.ராவ் இயக்கத்தில் வள்ளி என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் டி.எஸ்.சந்தானம் மற்றும் பங்கஜம் நடித்திருந்தனர்.

1933ன் இறுதியில் வெளிவந்தத் திரைப்படம் "வள்ளி திருமணம்". இப்படத்தை "பயோனீர் ஃபில்ம்ஸ்" தயாரிக்க பி.வி.ராவ் இயக்கினார். இதில் துரைசாமி, சுந்தரம் மற்றும் டி.பி. ராஜலெஷ்மி நடிகர்களாக நடித்திருந்தனர்.

(தொடரும்)

Friday, February 12, 2010

இசைத்தமிழ் - ஏ.ஆர். ரகுமான்(2)


இசைப்புயலின் இரண்டாவது தமிழ்ப்படம் "புதிய முகம்" (1993). இப்படத்தின் பாடல்களிலும் தனது முத்திரையை பதித்தார் ஏ.ஆர்.ரகுமான். இதில் சிறப்பு மிக்க விடயம் என்னவென்றால் வைரமுத்துவின் வரிகளில் இடம்பெற்ற "கண்ணுக்கு மை அழகு" பாடல் மலேசியாவில் உள்ள ஒரு பள்ளியில் பாடமாக வைக்கப்பட்டுள்ளதாம்.

* நேற்று இல்லாத மாற்றம் - சுஜாதா

* கண்ணுக்கு மை அழகு - பி.சுசீலா மற்றும் உன்னிமேனன்

* ஜூலை மாதம் வந்தால் - எஸ்.பி.பி, அனுபமா

* இதுதான் வாழ்க்கை என்பதா - சுஜாதா, உன்னிமேனன்

* சம்போ சம்போ - மால்குடி சுபா, மின்மினி

1993 ல் இவரின் அடுத்தப் படம் "ஜென்டில் மேன்". ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் இசைப்புயலின் இசை உலகெங்கும் மின்னியது. இத்திரைப்படத்தின் பாடல்களுக்காக ரகுமானுக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது.



1) சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசு விருது

2) சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம் ஃபேர் விருது

இப்படத்தின் ஒட்டகத்தை கட்டிக்கோ பாடல் .பி.பி.சி யின் ஃபேசன் சோவில் ஒலித்தது.

* என் வீட்டுத் தோட்டத்தில் - எஸ்.பி.பி, சுஜாதா

* உசிலம்பட்டி - சாகுல் ஹமீது, ஸ்வர்ணலதா

* சிக்கு புக்கு ரயிலு - சுரேஷ் பீட்டர்ஸ், ஜி.வீ. பிரகாஷ் குமார்(ரகுமானின் சகோதரி மகன், தற்போதைய இசையமைப்பாளர்)

* பார்க்காதே பார்க்காதே - மின்மிணி, நியோல் ஜேம்ஸ்

* ஒட்டகத்தை கட்டிக்கோ - எஸ்.பி.பி, ஜானகி

1993ல் இவர் ஒரு முழு நீள கிராமிய படத்திற்கு இசையமைத்து, பல போட்டியாளர்களின் கேள்விகளுக்கு பதிலடி கொடுத்தார். தன்னால் கிராமிய படங்களுக்கும் சிறப்பாக இசையமைக்க முடியும் என நிரூபித்தார். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த உணர்வுகளின் வெளிப்பாடான கிழக்கு சீமையிலே படத்தில் இவர் இசைத்த "ஆத்தங்கர மரமே" பாடலும் உணர்வுகளின் வெளிப்பாடுதான்.


இன்றும் பலரால் ரசிக்கப்பட்டு நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது இப்படத்தின் பாடல்கள். வைரமுத்துவின் வைரவரிகளில், இசைப்புயலின் இசையில் இப்படத்தின் பாடல்கள்.

* மானூத்து மந்தையிலே - எஸ்.பி.பி

* ஆத்தங்கர மரமே - மனோ, சுஜாதா

* கத்தால காட்டு வழி - ஜெயச்சந்திரன், ஜானகி

* எதுக்கு பொண்டாட்டி - சாகுல் ஹமீது, டி.கே.கலா, சுனந்தா

* தென்கிழக்கு சீமையிலே - சித்ரா, மலேசியா வாசுதேவன்

(தொடரும்)

Thursday, February 11, 2010

தமிழ் சினிமா உருவான வரலாறு - 3




.வி.எம் என்பதன் பொருள் .வி.மெய்யப்ப செட்டியார். 1907ல் காரைக்குடியில் பிறந்த இவர்தான் .வி.எம் நிறுவனத்தின் நிறுவனர். இந்த நிறுவனம் தமிழ்சினிமாவின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வருகிறது என சொன்னால் மிகையாகாது.

1932ம் ஆண்டு சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற இசைத்தட்டு தயாரிக்கும் நிறுவனமே இந்த .வி.எம்மின் தொடக்கம் என சொல்லலாம். அதன்பின் திரைப்படங்கள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கிய இவர் 1935 முதல் 1938 வரை அல்லி அர்ஜீனா, ரத்னாவளி, நந்தகுமார் ஆகிய படங்களை கல்கத்தாவில் எடுத்து தோல்வியைக் கண்டார்.

பின் 1940ல் சென்னையில் பிரகதி ஸ்டுடியோ என்ற நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து தொடங்கி சபாபதி போன்ற வெற்றிப் படங்களை எடுத்தார். கன்னடத்தில் எடுக்கப்பட்ட "ஹரிச்சந்திரா" என்ற படத்தை தமிழில் மொழிபெயர்த்தது இந்த நிறுவனம். தமிழில் வெளிவந்த முதல் மொழிபெயர்ப்பு(டப்பிங்) படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தக்குமார் படத்தில்தான் முதன் முதலில் பின்னணி பாடும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இன்று இருக்கும் பல பின்னனி பாடகர்களின் மூலம் இந்த நிறுவனத்தால் உருவாக்கப் பட்டதே. 1960ல் சென்னையில் ஒரு வீட்டில் .வி.எம் புரொடக்சன்ஸ் ஆரம்பிக்கப் பட்டது.

சென்னையில் மின்சார வசதி கிடைக்காத காலம் அது. அதனால் கரைக்குடியில் குடிசைப் போட்டு 1946ல் .வி.எம் நிறுவனம் துவக்கப்பட்டது. 1948 வரை அங்கிருந்தே படங்கள் தயாரிக்கப்பட்டன. பின்னர் மீண்டும் 1948ம் ஆண்டு .வி.எம் நிறுவனம் சென்னைக்கு மாற்றப்பட்டது.

இந்நிறுவனத்திற்காக பணியாற்றிஅறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் என்.டி.ஆர் ஆகியோர் பின்னாளில் முதலமைச்சரானது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 70ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முக்கிய பங்காற்றி வரும் இந்த .வி.எம் நிறுவனம் இப்போது அவர்கள் வம்சத்தை சேர்ந்த எம்.சரவணன் மற்றும் எம்.எஸ்.குகன் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகிறது.

.வி.மெய்யப்ப செட்டியாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய அரசாங்கம் 2006ம் ஆண்டு தபால் தலை வெளியிட்டு அவரை கவுரவித்திருக்கிறது. இந்நிறுவனத்தின் தமிழ்த் தயாரிப்புகள் நாம் இருவரில் தொடங்கி தற்போதைய வேட்டைக்காரனில் வந்து நிற்கிறது.

(தொடரும்)


Wednesday, February 10, 2010

16 வயதினிலே - திரைத்திரும்பல்(3)


1977ல் வெளிவந்த இத்திரைப்படம் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் திரையுலக வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இதுதான் ரஜினிகாந்த் நடித்த முதல் கலர்த் திரைப்படம். முழுக்க முழுக்க கிராமப்புரத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் இயக்குனர் "பாரதிராஜா".

நடிகர்கள்:

ரஜினி, கமல், ஸ்ரீதேவி, கே.பாக்யராஜ், கவுண்டமணி, சத்யராஜ், காந்திமதி

கதைச்சுருக்கம்:

ஒரு 16 வயது பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் யதார்த்தப் பிரதிபலிப்புதான் இத்திரைப்படம். ஆசிரியையாவதை லட்சியமாக கொண்டவள் கிராமத்திற்கு வரும் மருத்துவனைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஆனால் அவன் இவளை ஏமாற்றி விடுகிறாள். அந்த ஏமாற்றத்தின் போது தன் தாயையும் இழப்பவளுக்கு உறுதுணையாக இருப்பது அவள் தாயால் வளர்க்கப்பட்ட சப்பானி. சப்பானி என்றாலே மயிலுக்குப் பிடிக்காது.

சப்பானிக்கு மயில் என்றால் உயிர். தாயின் மறைவுக்குப் பின் சப்பானி காட்டும் உண்மையான அன்பை புரிந்தவள் சப்பானியை ஒரு மதிப்பு மிக்கவனாக மாற்ற முயல்கிறாள். இவர்களுக்கிடையில் பரட்டை என்ற ரவுடி ஒருவனும் மயில் மீது ஆசைப் படுகிறான். சப்பானி எப்படி அந்த ரவுடியிடமிருந்து மயிலைக் காப்பாற்றுகிறான் என்பதுதான் படத்தின் முடிவு.

இத்திரைப்படம் திரையுலகில் மாபெரும் வசூலை அள்ளிக்குவித்தது. மேலும் தெலுகு, கன்னடம் போன்ற மொழிகளின் ரீமேக் உரிமையையும் விற்று காசாக்கினார் தயாரிப்பாளர்.

விருது:

எஸ்.ஜானகி சிறந்த பின்னனி பாடகிக்கான "சில்வர் லோட்டஸ் விருதை" இப்படத்தின் மூலம் பெற்றார்.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் ரஜினிகாந்த் வரும் காட்சிகள் வெறும் மூன்றே நாட்களில் எடுக்கப் பட்டது. இளையராஜாவின் இன்னிசையில் கிராமத்து பின்னனியும், பாடல்களும் சிறப்பு. குறிப்பாக "செந்தூரப்பூவே" மற்றும் "ஆட்டுக்குட்டி" பாடல்கள் அருமை.

தமிழ்த் த்ரை ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த இத்திரைப்படம் இன்றும் என்னுடன் குறுந்தகடு வடிவில்.


Tuesday, February 9, 2010

அஜீத் - மின்னும் நட்சத்திரம்(2)


தன்னம்பிக்கை மனிதர் என அனைத்து ரசிகர்களாலும் போற்றப்படக்கூடிய மனிதர் நம் அஜீத். இவரை பற்றி மின்னும் நட்சத்திரம் பகுதியில் எழுதுவதில் மகிழ்ச்சி.

திரைத்துறைக்கு அறிமுகமில்லாத குடும்பத்திலிருந்து வந்து இன்று திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கும் திறமையும் பர்ஸ்னாலிட்டியும் கொண்டவர்.

சமீபத்தில் நடைபெற்ற முதல்வருக்கான பாராட்டு விழாவில் தைரியமாக தனது கருத்தைத் தெரிவித்து சக நடிகர் நடிகையிடம் பாராட்டுகள் பெற்றவர்.

இவர் குறித்த 50 விடயங்களை முன்னரே எழுதியிருப்பதால் அதன் இணைப்பு உங்களுக்காக

அஜீத் - 50 (1)

அஜீத் - 50 (2)

Sunday, February 7, 2010

அசல் - ஒரு நேர்மை விமர்சனம்

ஏகன் தோல்விக்கு பின்னர் அஜீத் மற்றும் அவரின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம் அசல். இப்படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இரண்டு வேடங்கள் வைக்கப்பட்டதன் காரணம் இதற்கு முன் அவர் இரட்டை வேடமிட்டப் படங்கள் வெற்றி பெற்றதுதான். மற்றபடி இரண்டு வேடங்களில் எந்த ஒரு சிறப்பும் இல்லை.



அப்பா அஜீத் (அதே மீசை கிறுதாவில் வெள்ளை மை பூசி அப்பாவாக்கியிருக்கிறார்கள்) தன் மனைவிக்குப் பிறந்த இரண்டு மகன்களை விட தன் சிறு வயதில் செய்த தவறுக்கு பிறந்த மகன் மீது அளவு கடந்த பாசமும் நம்பிக்கையும் வைத்து அனைத்து சொத்துகளையும் அவர் மீதே எழுதி வைக்கிறார்.

படம் ப்ரான்ஸில் தொடங்குகிறது. அஜீத்தை ஸ்டைலாக காட்டுவதற்காகத்தான் வெளிநாட்டு படப்பிடிப்பு என தோன்றுகிறது. மற்றபடி கதைக்கு தேவையில்லை. அந்த அப்பா அஜீத் எழுதி வைத்த உயிலில் ஓட்டையை கண்டறிந்து தம்பிகள் இருவரும் அஜீத்தை சுட்டு விடுகிறார்கள். பின்னர் வழக்கமான ஹீரோ போல் அவர் பிழைத்து வந்து தம்பிகளை பழிவாங்கத் தொடங்குகிறார். இதில் வெற்றி பெற்றாரா? என்பதுதான் படத்தின் கதை.


படம் முழுக்க அஜீத்தை தவிற வேறு யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை (நடிப்புக்கு கூடத்தான்). அஜீத் அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்தாலும் படம் முழுக்க "தல" புராணம். அஜீத் ரசிகர்களுக்கே சில இடங்களில் அந்த புராணம் அதிகப்படி எனத் தோன்றுகிறது. படத்தின் மிகப்பெரிய (ஏன் முழுமைன்னும் சொல்லலாம்) ப்ளஸ் அஜீத் மட்டுமே.

நல்ல ஒரு ஸ்டைல், வாயில் சிகரெட் வைத்திருப்பதும் சரி, சண்டைக் காட்சிகளிலும் சரி அவரது ஸ்டைல் அவர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. படத்தில் அஜீத்துக்கு வசனங்கள் குறைவு. தன் உடல் அசைவுகளால் தன் நடிப்பைநிரூபிக்க வேண்டிய கட்டாயம். அதை செவ்வனே செய்து வெற்றி பெற்றிருக்கிறார்.

அஜீத் வரும் ஒவ்வொரு காட்சியிலும் கரகோசங்கள் (அடிக்கடி பில்லா நினைவு வருகிறது). படத்தின் இரு நாயகிகள் சமீரா மற்றும் பாவனா. இருவருக்குமே படத்தில் அதிகம் வேலை இல்லை(ஏன் அஜீத் தவிர யாருக்குமே). சமீரா அஜீத்தின் உதவியாளராக, பாவனா பிரபுவின் உதவியாளர். இருவரும் அஜீத்தை காதலிக்கிறார்கள்.


இறுதியில் ஏன் இருவரில் ஒரு நாயகியை தேர்ந்தெடுக்கிறார் என்பதற்கு எந்த ஒரு காட்சியும் விளக்கம் அளிக்கவில்லை. பிரபுவுக்கும் ஒன்றும் பெரிய கதா பாத்திரம் இல்லை. க்ளைமேக்ஸில் அவரை கட்டி வைத்து அடிக்கும் போது அவர் கதறுவது அனைவருக்கும் சிரிப்பையே வர வைத்தது.

பாடல் காட்சிகள் வெறுப்பைத் தருகின்றன. தேவையற்ற இடங்களில் அவற்றை செருகி சொதப்பியிருக்கிறார்கள். வில்லன்களுக்கு அதிக பில்டப் கொடுத்து கடைசியில் சப்பையாக்கி கொன்றிருக்கிறார்கள். சுரேஷ் வரும் காட்சிகள் கடுப்பேற்றுகின்றன(கடுப்பேத்துறார் மைலாட்). அவர் சட்டென திருந்துவதெல்லாம் ரொம்ப ஓவர்.

படத்தின் க்ளைமேக்ஸ் தமிழ்சினிமா உருவானது முதல் தொடர்ந்து பல படங்களில் இடம் பெற்றதுதான் (ஒன்னும் புதுசில்ல). முழுக்க முழுக்க அஜீத்தை மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார்கள்.

இப்பொழுதும் தன் திறமைக்கேற்ற கதையை தேர்வு செய்வதில் நம்ம "தல" கோட்டை விட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. தன் ரசிகர்களுக்காக மட்டுமல்லாமல் அனைத்து திரை ரசிகர்களுக்காகவும் ஒரு நல்ல கதையை அடுத்தப் படத்திலாவது தேர்ந்தெடுப்பார் என்ற நம்பிக்கையில்(வழக்கம் போல) காத்திருக்கும் ரசிகனாய் நாங்கள்.

அசல் -பழைய படங்களின் நகல்

கலைவாணர் என்.எஸ்.கே - நகைச்சுவை நாயகன் (2)

முதல் பகுதியை படிக்க கலைவாணர் என்.எஸ்.கே - நகைச்சுவை நாயகன் (1)




திரைத்துரையில் தடம் பதித்த இவர் நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். தனக்கான திரைக்கதை, வசனங்களை தானே எழுதினார். நகைச்சுவையோடு மட்டுமில்லாமல் இவர் ஒரு சிறந்த பாடகராகவும் விளங்கினார்.

1935ல் மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துரையில் நுழைந்தார் நம் கலைவாணர். இப்படத்தில் அவர் டி.கே.சண்முகத்துடன் இணைந்திருந்தார்.

திரையுலகில் கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்து மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர். ஆம் இவரது நகைச்சுவைகள் சிரிக்க மட்டுமல்ல சிந்தனையைத் தூண்டவும்தான். மேலும் இவர் 1950களில் சில படங்களின் இயக்குனராகவும் விளங்கினார்.

டி.ஏ. மதுரத்துடன் இணைந்து திரையுலகை கலக்கத் தொடங்கினார் என்.எஸ்.கே. இவரது தனித்துவம், கொள்கை மற்றும் திறமையை கண்டு மதுரம் இவரைக் காதலிக்கத் தொடங்கினார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் மதுரம் முழு சுதந்திரத்துடன் வாழ்ந்தார்.

மதுரம் ஒரு நல்ல பாடகி. இவரும் என்.எஸ்.கே வும் இணைந்து பாடிய பாடல்கள் இன்றும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்றால் மிகையாகாது. இப்படி ஆனந்தம் பொங்க நகைச்சுவையோடு கலந்த இவர்களின் வாழ்வில் 1940ம் ஆண்டு "லக்ஷ்மி காந்தன்" கொலைவழக்கு பெரும் சோகத்தை உண்டு பண்ணியது.

ஆம் இந்த லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கில் நமது என்.எஸ்.கே வும் எம்.கே.டி யும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். நாடகம் மற்றும் திரைத்துரையில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இந்த இருவருக்கும் இந்த கொலைவழக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த லக்ஷ்மி காந்தன் கொலைவழக்கு பற்றிய விபரங்களை அடுத்த வாரம் விபரமாகப் பார்க்கலாம்.

(தொடரும்)

Thursday, February 4, 2010

தமிழ் சினிமா உருவான வரலாறு - 2

தமிழ் சினிமா துவங்கிய முதல் வருடமான 1931-ல் காளிதாஸ் மட்டுமே வெளிவந்தது. அதன் பின் 1932ம் ஆண்டு தமிழில் எடுக்கப்பட்ட படங்கள் மொத்தம் 5.

1932ல் சர்வோட்டம் பதாமி, வடிவேலு நாயக்கர் இயக்கத்தில் சாகர் மூவிடோன்ஸ் தயாரித்த படம் "கலவா". இப்படத்தில் பி.வி.ரங்காச்சாரி, வி.எஸ்.சுந்தரேச ஐயர் மற்றும் டி.ஆர். முத்துலெஷ்மி ஆகியோர் நடித்திருந்தனர்.

1932ன் அடுத்தப் படம் "பாரிஜாத புஷ்பஹாரம்". இப்படத்தை பி.கே ராஜா சேன்டோ இயக்க "இம்பீரியல் ஃபிலிம்" நிறுவனம் தயாரித்தது. இப்படத்தில் நாகேந்திர ராவ், ருக்மணி, லீலா மற்றும் நரசிம்ம ராவ் நடித்திருந்தனர்.
( ராஜா சேண்டோ)

ராஜா சேண்டோ 1894ல் பிறந்தார். 1922ல் தனது திரைத்துரை வாழ்க்கையை ஒரு நடிகனாக "காமா" என்ற ஊமைப்படத்தின் மூலம் தொடங்கினார். ஹிந்தி, தெலுகு, தமிழ் என பல மொழிகளில் நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக இருந்த இவர், தமிழில் முதன் முதல் இயக்கிய படம்தான் இந்த "பாரிஜாத புஷ்பஹாரம்".

இவரது நினைவாக தமிழ்சினிமாவில் சிறந்த பணியற்றுபவர்களுக்கு தமிழக அரசு "ராஜா சாண்டோ நினைவு விருது" வழங்கியதுடன் தபால் தலையும் வெளீயிட்டது.இவர் 1943ல் காலமானார்.

1932ல் அடுத்து "ஈஸ்ட் இந்தியன் ஃபிலிம்" தயாரிப்பில் டி.பி.ராஜலெஷ்மி, டி.எஸ். மணீ நடிப்பில் "ராமாயணம்" வெளிவந்தது.
(டி.பி.ராஜலெஷ்மி)

1932ல் மீண்டும் சர்வோட்டம் பதாமி, வடிவேலு நாயக்கர் இயக்கத்தில் சாகர் ஃபிலிம் நிறுவனம் தயாரிப்பில் "அரிச்சந்திரா" திரைப்படம் வெளிவந்தது. இதில் வி.எஸ்.சுந்தரேச ஐயர் மற்றும் டி.ஆர். முத்துலெஷ்மி நடித்திருந்தனர்.

1932ல்கடைசியாக எடுக்கப்பட்ட திரைப்படம் "தர்மா".

1932ல் வெளீவந்த இந்த படங்கள் தமிழ் சினிமாவின் துவக்கங்களாய் அமைந்ததுடன் அக்கால ரசிகர்கள் மனதிலும் நிறைந்திருந்தது. இந்த கால கட்டத்தில்தான் ஏ.வி.எம் தனது ஸ்டுடியோவை காரைக்குடியில் நிறுவியது.

இந்த ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆரம்பகால வரலாற்றை பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

Wednesday, February 3, 2010

அசல் - இலங்கை திரையரங்கங்கள்


இலங்கையில் தல அஜீத் நடித்த "அசல் திரைப்படம் வெளியாகிறது. திரையரங்குகளின் விபரம் கீழே. அனைத்து இடங்களிலும் முன்பதிவு தொடங்கியிருக்கிறது.

Arena - Kadugastota
Contact : 081-2499205

Cine City - Maradana
Contact : 0115355055, 0773 101080

Concord - Dehiwala
Contact : 0115544125, 07394466

Manokara - Jaffna
Contact : 0779770037

Sellam - Chenkalady
Contact : 065-7911616

மற்ற வெளிநாட்டு திரையரங்க விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை க்ளிக்கவும்

அசல்

ரோஜா - திரைத்திரும்பல்


1992ல் மணிரத்ணம் இயக்கத்தில் தமிழில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஹிந்தி, மளையாளம் உட்பட பல மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்ட்து. இந்தப் படத்தின் மூலம்தான் ஏ.ஆர்.ரகுமான் திரை இசைக்கு அறிமுகமானார்.

இயக்கம்: மணிரத்னம்

அரவிந்த் சாமி - ரிஷிக் குமார்

மதுபாலா - ரோஜா

பங்கஜ் கபூர் - லியாகத்

நாசர் - ராயப்பா

ஜனகராஜ் - சஜோ மகாராஜா

வைஷ்னவி - ரோஜாவின் சகோதரி

ரோஜா ஒரு கிராமத்துப் பெண். ரிஷி ஒரு மென்பொருள் பொறியாளன். கிராமத்திற்கு ரோஜாவின் அக்காவை பெண் பார்க்க வரும் அவர் ரோஜாவின் அக்கா வேறு ஒருவனை விரும்புவது அறிந்து "எனக்கு ரோஜாவ புடிச்சிருக்கு. கல்யாணம் பன்னிக்க ஆசப்படுறேன்" என்று சொல்லி பின் ரோஜாவை திருமணம் செய்கிறார். அக்காவின் விடயம் ரோஜாவுக்குத் தெரியாததால் அர்விந்த் சாமியை வெறுக்கிறாள்.



பின்னர் உண்மைத் தெரிந்து இருவரும் சமாதானமானப் பின் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. பணி நிமித்தம் கஷ்மீர் செல்ல நேர்கிறது. அங்கு தீவிரவாதிகளால் அர்விந்த் சாமி கடத்தப் படுகிறார். துடிதுடித்து போகிறாள் ரோஜா. அதன் பின் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் அர்விந்த சாமி படும் கஷ்டங்களையும், அவரைத் தேடி அலையும் ரோஜாவின் நிலையையும் அதே சமயம் தீவிரவாதிகளின் நிலையையும் மிக நேர்த்தியாக எடுத்தியம்பிருக்கிறார் மணி.

விருதுகள்:


1) இப்படம் சிறந்த இசையமைப்பார், சிறந்த பாடலாசிரியர், சிறந்த நேசனல் இன்டகரேசன் படம் ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் தன் முதல் படமான இப்படத்தின் மூலம் தன் முதல் தேசிய விருதை பெற்றார்.

2) மாஸ்கோவில் நடைபெற்ற உலகலாவிய திரைப்படத் திருவிழாவில் சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்டது.

3) சிறந்த இசை, இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் பிரிவுகளில் மூன்று ஃபில்ம் ஃபேர் விடுதுகளையும் தட்டியது.

பாடல்கள்: ரோஜா

இந்த திரைப்படத்தின் பாடல்கள் "டைம்ஸ் பத்திரிகையின் எப்போது கேட்டாலும் இனிக்கும் பத்து பாடல்களில்" தெரிவு செய்யப்பட்டது(2005).

Tuesday, February 2, 2010

கமலஹாசன் -மின்னும் நட்சத்திரம் (1)


நவம்பர் 7, 1954 ல் பரமகுடியில் பிறநதவர் நம் கமல். 1960ல் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். "விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என ஒரு பழமொழி உண்டு. அதற்கு உதாரணம் இப்படத்தில் கமலஹாசனின் நடிப்பு. இப்படத்தில் அவரின் வசனப் பேச்சைக் கண்டு அனைவரும் வியந்திருக்கிறோம். இதன் பின் பல திரையுலக நட்சத்திரங்களுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்தார்.

தனது முதல் தேசிய விருதை தன் 4ம் அகவையில் களத்தூர் கண்ணம்மா என்ற முதல் படத்தில் பெற்றார் (சிறந்த குழந்தை நட்சத்திரம்).அதன் பின் பல படங்களில் துணை நடிகராக நடித்த இவர் 1975ல் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் நாயகனாக மாற்றம் பெற்றார். 1977ல் "அவர்கள்" படத்திற்காக தனது முதல் ஃபிலிம் ஃபேர் விருதை தன் நடிப்பிற்காக பெற்றார்.


பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1982ல் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த "மூன்றம் பிறை" படத்திற்காக ஒரு சிறந்த நடிகருக்கான தனது முதல் தேசிய விருதை பெற்றார். தனது 100வது படமான "ராஜபார்வை" மூலம் தயாரிப்பாளராகவும் தடம் பதிக்கத் தொடங்கினார்.

1987 ல் மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த "நாயகன்" படம் இரண்டாவது தேசிய விருதை பெற்று தந்தது. மேலும் இப்படம் நினைவில் நீங்கா 100படங்களில் டைம்ஸ் பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது(1988). மேலும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியப்படமும் இதுதான்.

இதன்பின் 1996ல் இவர் நடித்த "இந்தியன்" திரைப்படம் இவருக்கு மூன்றாவது தேசிய விருதை பெற்றுத் தந்தது. இப்படம் இது போன்ற சமுதாய சிந்தனைகள் நிறைந்த படங்கள் வர துவக்கமாய் அமைந்தது. குழந்தையாக ஒன்று, நடிகனாக மூன்று என மொத்தம் நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற பெருமை கமலையே சாரும்.



தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்து இப்போதும் தன் திறமையை நிரூபித்துக் கொண்டு திரைத்துரையின் எதிர்காலத்திற்கு முன்னோடியாய் திகழ்கிறார். திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்திருக்கும் இந்த நாயகனை இங்கு முதல் மின்னும் நட்சத்திரமாக எழுதியதில் பெருமை கொள்கிறேன்.

உங்களுக்கு தோன்றும் கருத்துகளையும் பிடித்திருந்தால் வாக்குகளையும் இட்டு செல்லுங்கள். இது உங்கள் இடம்.


Monday, February 1, 2010

அட்டு கோவாவும் ஹிட்டு தமிழ்ப்படமும்

இது இரண்டு படங்கள் பற்றிய விமர்சணம்.


கோவா:

ஏண்டா இந்த படத்துக்கு வந்தோமுன்னு? தியேட்டர்ல இருக்குற அனைத்து ரசிகர்களையும் வருத்தப்பட வைத்திருக்கும் ஒரு மொக்கைப் படம். இரண்டு என்டர்டெய்னர் படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக இருந்த வெங்கட் பிரபு தன் குடும்பப் பெருமைக்காகவும் தம்பிக்காகவும் ஐஸ்வர்யா பணத்தை வீணடித்திருக்கிறார்.

மூன்று இளைஞர்கள் ஊர்க் கட்டுப்பாட்டை மீறி மதுரைக்கு செல்கின்றனர். அங்கு அதில் ஒருவனின் நண்பனுக்கு வெள்ளைக்காரப் பெண்ணுடன் திருமணம் நடப்பதைப் பார்த்து வயிற்றெரிச்சலுடன் விபரம் கேட்க, அவன் கோவாவில் கைடு வேலை பாத்துட்டிருந்தப்ப பிக்கப் பன்னதா சொல்ல, இவனுங்களும் வெள்ளைக்காரிகளை பிக்கப் பன்ன கோவா போறானுங்க.

போன இடத்துல சம்பத்தும் அரவிந்தும் இவனுங்களுக்கு உதவி செய்யுறாங்க. இந்த இரண்டு பேரின் கதா பாத்திரம் அனைத்து ரசிகர்களையும் முகம் சுழிக்க வச்சிருச்சி. இந்த இரண்டு ஆண்களும் ஒருத்தனை ஒருத்தன் காதலிக்கிறானுங்க (தோஸ்த்தனாங்க... )இவர்கள் இருவரின் சென்டிமென்ட் காட்சிகளில் ரசிகர்கள் வெறுப்படைந்து "டேய் படத்த ஆஃப் பன்னுங்கடான்னு" கத்த ஆரம்பிச்சிட்டாங்க.

இடைவேளைக்கு பிறகு சிறிது நேரம் கழித்து திரும்பிப் பாத்தா படம் பாத்துட்டிருந்த பாதி பேரக் காணும். குடுத்த காசுக்கு தலைவலிதான் மிச்சமாச்சு. இவனுங்க பன்னிருக்குற நகைச்சுவையிலயும் ஒன்னும் தேறல. எல்லாம் பழைய தேஞ்சி போன ரிக்கார்டு.

என்ன கொடும சரவணன் இது?

தமிழ்ப்படம்

தமிழில் முழு நீல ஸ்பூஃப் திரைப்படம். சக நடிகர்களை இமிட்டேட் செய்து நகைச்சுவை காண்பிப்பது. சினிமாப்பட்டி என்ற கிராமத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு கள்ளிபால் கொடுத்து கொலை செய்ய வேண்டும் என்பது நாட்டாமையின் தீர்ப்பு. அங்கு பிறக்கும் சிவாவுக்கு பாட்டி கள்ளிப்பால் கொடுக்க போகும் போது துவங்குகிறது படம்.

கள்ளிபால் பிராண்ட் நேமோட வருது பி.எஸ்.கே கள்ளிப்பால் சுத்தமானது சுகாதாரமானது என அட்டைப்பெட்டியை காட்டும் போது ரசிகர்களின் சிரிப்பொலி பெருகத் தொடங்குகிறது.அதன் பின் பறவை முனியம்மாவால் சென்னை எடுத்து சென்று வளர்க்கப்படும் சிவாதான் நாயகன்.

தமிழகத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரையும் இமிடேட் செய்கிறார். நடிகர்கள் மட்டுமல்லாது தமிழ்ப்படங்களின் வழக்கமான காட்சிகளையும் நகைச்சுவையாக கலாய்த்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்கள்.வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்னு ஒர் பழமொழி இருக்கு. அந்த சிரிப்புக்கு இந்தப் படம் 100% உத்திரவாதம்.

தளபதி மம்முட்டி, சிவாஜி ரஜினி, அந்நியன் படக்காட்சி இவற்றை மிஸ் பன்னாம பாருங்க. பக்கத்து சீட்டுப் பொண்ணு சிரிச்சு சிரிச்சு சீட்டிலிருந்து கீழ விழுந்துருச்சு. படத்தின் காட்சிகளை சொன்னால் சுவாரஸ்யம் குறைந்து போகலாம். அதனால் தான் விமர்சணத்தை இத்துடன் முடித்திருக்கிறேன்.

போய் பாருங்க வயத்து வலி நிச்சயம். ஆங்காங்கே சிறு சிறு இழுவை இருந்தாலும் சுவாரஸ்யம் குறையாத நகைச்சுவை காட்சிகள். எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிறாடை மூர்த்தி மற்றும் மனோபாலா சரிவர உபயோகப் படுத்தப் படவில்லை.