
சயீத் அன்வர் கடந்த 1997ம் ஆண்டு சென்னையில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை கடந்த ஆண்டு ஜிம்பாப்வே வீரர் கோவன்ட்ரி சமன் செய்தார்.
இந்த சாதனையை இன்று நம் தலைவர் சச்சின் உடைத்தார். அத்தோடு நில்லாமல் 200 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையையும் படைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார்.
"காட் ஆஃப் கிரிக்கெட்" என இவரைப் புகழ்வதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு மட்டை வீச்சாளனாக இது வரை எவரும் செய்யாத, இனிமேல் யாராவது செய்ய முடியுமா? எனக் கூடத் தேன்றுகிறது. அப்படிப் பட்ட பல சாதனைகளைப் புரிந்து 16 ஆண்டுகளைக் கடந்து இன்றும் துடிப்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இன்னும் 7 சதம் அடித்தால் சதத்தில் சதமடித்தப் பெருமையும் பெற்று விடுவார். அதோடு மட்டுமல்ல இன்னும் அவர் 150 ஐம்பதுகளைக் கடக்க வெறும் மூன்று 50கள் மட்டுமேத் தேவை.
இனி இவர் சாதனையை முறியடிக்க எவரும் இல்லை என மார்தட்டி சொல்லலாம். இதை செய்தவர் என் இந்தியன் என தம்பட்டமடிக்கலாம்.
கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சினுக்கு வாழ்த்து சொல்ல வாங்க. முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
7 comments:
வாழ்த்துக்கள்.
சச்சினுக்கு... வாழ்த்துக்கள்.
நானும் பார்த்தேன்.... சிலிர்த்தேன்.
http://sshathiesh.blogspot.com/
சச்சினுக்கு வாழ்த்துக்கள். இதையும் கொஞ்சம் படிக்கலாமே.
உங்களோட இந்த ப்ளாக நான் படிச்சதே இல்லையே..தொடர்ந்திருவோம்..
சச்சினுக்கு வாழ்த்துகள்..
அப்புறம் ஏதோ ஒரு விட்ஜெட்னால நிறைய பாப்-அப் வருது. என்னன்னு பாருங்க. :)
சச்சினுக்கு வாழ்த்துக்கள்.
/*
இனி இவர் சாதனையை முறியடிக்க எவரும் இல்லை என மார்தட்டி சொல்லலாம். இதை செய்தவர் என் இந்தியன் என தம்பட்டமடிக்கலாம்.
*/
நல்ல பகிர்வு. நன்றி. முடிஞ்சா இதையும் பாருங்க..
சச்சின் 200 : சாதனைக் காணொளிகள்
சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம் - அரிய படங்களாக
இப்ப சொல்லுங்க புலவா, யாரை BOSS ன்னு சொல்லலாம்....
தம்பி.....
Post a Comment