Wednesday, February 3, 2010

ரோஜா - திரைத்திரும்பல்


1992ல் மணிரத்ணம் இயக்கத்தில் தமிழில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஹிந்தி, மளையாளம் உட்பட பல மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்ட்து. இந்தப் படத்தின் மூலம்தான் ஏ.ஆர்.ரகுமான் திரை இசைக்கு அறிமுகமானார்.

இயக்கம்: மணிரத்னம்

அரவிந்த் சாமி - ரிஷிக் குமார்

மதுபாலா - ரோஜா

பங்கஜ் கபூர் - லியாகத்

நாசர் - ராயப்பா

ஜனகராஜ் - சஜோ மகாராஜா

வைஷ்னவி - ரோஜாவின் சகோதரி

ரோஜா ஒரு கிராமத்துப் பெண். ரிஷி ஒரு மென்பொருள் பொறியாளன். கிராமத்திற்கு ரோஜாவின் அக்காவை பெண் பார்க்க வரும் அவர் ரோஜாவின் அக்கா வேறு ஒருவனை விரும்புவது அறிந்து "எனக்கு ரோஜாவ புடிச்சிருக்கு. கல்யாணம் பன்னிக்க ஆசப்படுறேன்" என்று சொல்லி பின் ரோஜாவை திருமணம் செய்கிறார். அக்காவின் விடயம் ரோஜாவுக்குத் தெரியாததால் அர்விந்த் சாமியை வெறுக்கிறாள்.



பின்னர் உண்மைத் தெரிந்து இருவரும் சமாதானமானப் பின் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. பணி நிமித்தம் கஷ்மீர் செல்ல நேர்கிறது. அங்கு தீவிரவாதிகளால் அர்விந்த் சாமி கடத்தப் படுகிறார். துடிதுடித்து போகிறாள் ரோஜா. அதன் பின் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் அர்விந்த சாமி படும் கஷ்டங்களையும், அவரைத் தேடி அலையும் ரோஜாவின் நிலையையும் அதே சமயம் தீவிரவாதிகளின் நிலையையும் மிக நேர்த்தியாக எடுத்தியம்பிருக்கிறார் மணி.

விருதுகள்:


1) இப்படம் சிறந்த இசையமைப்பார், சிறந்த பாடலாசிரியர், சிறந்த நேசனல் இன்டகரேசன் படம் ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் தன் முதல் படமான இப்படத்தின் மூலம் தன் முதல் தேசிய விருதை பெற்றார்.

2) மாஸ்கோவில் நடைபெற்ற உலகலாவிய திரைப்படத் திருவிழாவில் சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்டது.

3) சிறந்த இசை, இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் பிரிவுகளில் மூன்று ஃபில்ம் ஃபேர் விடுதுகளையும் தட்டியது.

பாடல்கள்: ரோஜா

இந்த திரைப்படத்தின் பாடல்கள் "டைம்ஸ் பத்திரிகையின் எப்போது கேட்டாலும் இனிக்கும் பத்து பாடல்களில்" தெரிவு செய்யப்பட்டது(2005).

1 comments:

இனியாள் said...

ரோஜா வெளிவரும் போது நான் ஆறாவது படித்திருப்பேன் என்று நினைக்கிறேன் அந்த வயதிலேயே அந்த படத்தை ரொம்ப பிடித்தது, மணியின் அற்புதமான படம் அது, புது வெள்ளை மழை, காதல் ரோஜாவே இரண்டும் இன்றும் ஏக்கத்தை வரவழைக்கும் பாடல்கள் அதே போல தமிழா தமிழா பாடலை கேட்டல் புல்லரிக்குமே.