Tuesday, February 23, 2010

அஜீத் என்னத் தவறாக சொல்லி விட்டார்?


சமீபத்தில் திரையுலகினரின் கோபம் எல்லாம் தல அஜீத் மேல்தான். அப்படி என்ன தவறாக சொல்லி விட்டார்? "நடிகர்களை எந்த ஒரு கூட்டத்திற்கும், விழாவிற்கும் கட்டாயப் படுத்தி அழைக்கிறார்கள். அது தவறு". நடிகர்கள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் கட்டாயப் படுத்தி அழைபது தவறுதானே?

இதை சொன்னதற்கு ஏன் இந்த திரைப்புள்ளிகள் அவரை எதிர்க்கின்றனர். இந்த வி.சி.குகநாதன் ஏன் கொதிக்கிறார்? என்பதுத் தெரியவில்லை. "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்" அப்புடின்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க அது உண்மைதான் போல. அதனால் தான் அஜீத் சொன்ன வார்த்தைக்கு அவ்வளவு எதிர்ப்பு போல.

அப்புறம் தல அஜீத் பொதுவாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. மனதில் இருப்பதை எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசக் கூடிய நடிகர்கள் மிகச்சிலரே. அதில் இப்போதுள்ள நடிகர்களில் அஜீத் மட்டுமே எஞ்சியிருக்கிறார். இதற்காக நடிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தாலும் பெப்ஸி இயக்கம் தன் ஆளுமையைக் காட்ட இந்த எதிர்ப்பை காட்டி வருகிறது.


இது குறித்து நடிகர் விஜய் அஜீத்துக்கு ஆதரவாக

"அஜீத் ஒரு திறந்த புத்தகம் மாதிரி. அவர் மனதில் ஒன்றுமில்லை. நினைப்பதை உடனே கொட்டிவிடுவார். அதைப் பெரிதுபடுத்தி அவருக்கு மன உளைச்சல் தர வேண்டாம்..." என்று வி.சி. குகநாதனிடம் பேசியிருக்கிறார்.

அதைக் கேட்ட குகநாதன் அவரிடமும் எரிந்து விழுந்திருக்கிறார். அவருக்கு யாராவது பி.பீ மாத்திரை வாங்கிக் கொடுங்க. அப்புறம் இந்த ஜாக்குவார்த் தங்கம், இவரை யாருப்பா இங்க கூப்பிட்டா?

இவுர அஜீத் கல்வீசித் தாக்கினாராம். எந்த நடிகனும் அப்படி செய்ய மாட்டான். யார் செய்தார்கள் என ஆராயாமலே அஜீத் ரசிகர்கள் மீது மட்டுமல்லாமல் அஜீத் மீதும் புகார் கொடுத்திருக்கிறாராம் நடிகர் சங்கத்திடம். இதற்காக குயிலி, மும்தாஜ், சத்யராஜ் இவர்களோடு செயற்குழூ கூட்டி விவாதிக்கப் போறாங்களாம் (கொடுமைடா).

அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அறிக்கையெல்லாம் வேற உட்டுருக்காங்க. ஆனா 'தல' எப்பவும் போல நிமிர்ந்துதான் நிக்குது. பெரும்புள்ளிகள் சிலர் சும்மா ஒரு பேப்பர்ல "வருந்துகிறேன்" அப்புடின்னு எழுதிக் கொடுத்துட்டு வேலைய பாருங்கன்னு சொன்னதுக்கு நம்ம தல "நான் ஒன்றும் தவறாக பேசவில்லை. நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். வேண்டுமென்றால் சினிமாவை விட்டு விலகிக்கறேன்னு" தில்லா சொன்னாரு.

இதற்கு ஆதரவுத் தெரிவித்துக் கைத்தட்டியதற்கு "சூப்பர் ஸ்டாருக்கும்" எத்தனை எதிர்ப்புகள். இதே வார்த்தையை அவர் பேசியிருந்தால் கர்நாடகாவிற்கே திருப்பி அனுப்பிருப்பாங்க போல. திரையுலகமும் அரசியல் உலகமாகத்தானே மாறிப் போயிருக்கிறது. அங்கு எங்கே உண்மையைப் பேசுவது?

4 comments:

vmsjerin said...

Ajith is always correct

vmsjerin said...

Ajith is always correct

bittupadam said...

yenga thala thalaivananga kudaathu
yeppavume, thala neenga yetha pathiyum kavalaye padaathinga,naanga unga pinnadi thaan irukkom,neenga politics vanthaa oruthankuda munnaala nikka mudiyaathu,yentha karanathukkagavum neenga mannippu ketkaathinga, samuthaayathula oru manusan pesakkuda vurimai illannaa appuram yennaiyaa jananayagam?
athanaala mannippu kekkathinga please please.

vijay said...

wwww.superstarvijay.blogspot.com இவ் வழைப்பூவிற்க்குள் உள் நுழைந்து விஜய் இது வரை நடித்த 49 திரைப்படங்களில் சிறந்த, உங்களை கவர்ந்த திரைப்படங்களிற்க்கு வாக்களிக்கவும், இவ் முடிவுகள் விஜய் நடித்து வரும் 50வது திரைப்படத்தை முன்னிட்டு விஜயின் நாளைய தீர்ப்பு முதல் இன்றைய தீர்ப்பு வரையிலான மேல் பார்வைக்கு உங்களின் வாக்குகள் மிக உறுதுனையாக இருக்கும்.

மேலதிக தகவல்களுக்கு: wwww.superstarvijay.blogspot.com

visit now to wwww.superstarvijay.blogspot.com for vote vijay's best 50 movies