Thursday, February 18, 2010

தமிழ் சினிமா உருவான வரலாறு - 4



1933ல் தமிழில் வெளிவந்த திரைப்படங்கள் மொத்தம் ஆறு. முதலில் "இம்பிரியல் ஃபிலிம்ஸ்" தயாரிப்பில் நாகேந்திர ராவ், ருக்மணி லீலா நடிப்பில் "கோவலன்" திரைப்படம் வெளிவந்தது.

அடுத்து கிருஷ்ண மூர்த்தி, மணி மற்றும் ராஜலெஷ்மி நடிப்பில் சத்யவான் சாவித்ரி வெளி வந்தது. நியூ தியேட்டர்ஸ் தயாரிப்பில் அங்கமுத்து , சுப்பையா தேவர் நடிப்பில் "நந்தனார்" என்ற படம் வெளி வந்தது. இந்தத் திரைப்படம் 1933, 35 மற்றும் 42 ம் ஆண்டுகளில் மூன்று முறை தயாரிக்கப் பட்டது. இத்திரிப்படத்தை .முத்துசாமி ஐயர் இயக்க எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார்.

இத்திரைப்படத்தை தயாரித்த நியூ தியேட்டர்ஸ் 10-பிப்ரவரி-1931ம் ஆண்டு பி.என்.சிகார் அவர்களால் கல்கத்தாவில் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் முதன் முதல் "டேனா பவோனா" என்ற பெங்காலி படத்தை 1931ல் தயாரித்து வெளியிட்டது.

பின்னனி பாடும் முறையை தமிழுக்கு அறிமுகப் படுத்தியது .வி.எம் என்றால், அதை முதன் முதல் நம் இந்தியத் திரை உலகத்துக்கு அறீமுகப் படுத்தியது இந்த "நியூ தியேட்டர்ஸ்" தான்.

"பாக்ய சக்ரா" என்ற பெங்காலி திரைப்படத்தில்தான் இந்த பின்னனி பாடும் முறை அறிமுகப் படுத்தப் பட்டது. முதல் பின்னனி பாடியவர்கள் கே.சி.தேய், பரூல் கோஸ் மற்றும் சுப்ரபா சங்கர் இந்தத் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதனால் இந்தித் திரைப்பட உலகிற்கும் பின்னனி பாடும் முறையை அறிமுகம் செய்த பெருமை "நியூ தியேட்டர்ஸையே" சாரும்.

1933ல் அடுத்ததாக வெளிவந்தத் தமிழ்த் திரைப்படம் "ப்ரஹலாதா". இதைத் தயாரித்ததும் "நியூ தியேட்டர்ஸ்" தான். ஐந்தாவதாக "நேஷனல் மூவிடோன்" தயாரிப்பில் பி.வி.ராவ் இயக்கத்தில் வள்ளி என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் டி.எஸ்.சந்தானம் மற்றும் பங்கஜம் நடித்திருந்தனர்.

1933ன் இறுதியில் வெளிவந்தத் திரைப்படம் "வள்ளி திருமணம்". இப்படத்தை "பயோனீர் ஃபில்ம்ஸ்" தயாரிக்க பி.வி.ராவ் இயக்கினார். இதில் துரைசாமி, சுந்தரம் மற்றும் டி.பி. ராஜலெஷ்மி நடிகர்களாக நடித்திருந்தனர்.

(தொடரும்)

2 comments:

திவ்யாஹரி said...

தெரியாத விஷயங்கள்..

பனித்துளி சங்கர் said...

ஆஹா அருமை !
இதுவரை அறியாத பல விசயங்கள் அறிந்துகொண்டேன் .