Tuesday, February 2, 2010

கமலஹாசன் -மின்னும் நட்சத்திரம் (1)


நவம்பர் 7, 1954 ல் பரமகுடியில் பிறநதவர் நம் கமல். 1960ல் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். "விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என ஒரு பழமொழி உண்டு. அதற்கு உதாரணம் இப்படத்தில் கமலஹாசனின் நடிப்பு. இப்படத்தில் அவரின் வசனப் பேச்சைக் கண்டு அனைவரும் வியந்திருக்கிறோம். இதன் பின் பல திரையுலக நட்சத்திரங்களுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்தார்.

தனது முதல் தேசிய விருதை தன் 4ம் அகவையில் களத்தூர் கண்ணம்மா என்ற முதல் படத்தில் பெற்றார் (சிறந்த குழந்தை நட்சத்திரம்).அதன் பின் பல படங்களில் துணை நடிகராக நடித்த இவர் 1975ல் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் நாயகனாக மாற்றம் பெற்றார். 1977ல் "அவர்கள்" படத்திற்காக தனது முதல் ஃபிலிம் ஃபேர் விருதை தன் நடிப்பிற்காக பெற்றார்.


பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1982ல் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த "மூன்றம் பிறை" படத்திற்காக ஒரு சிறந்த நடிகருக்கான தனது முதல் தேசிய விருதை பெற்றார். தனது 100வது படமான "ராஜபார்வை" மூலம் தயாரிப்பாளராகவும் தடம் பதிக்கத் தொடங்கினார்.

1987 ல் மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த "நாயகன்" படம் இரண்டாவது தேசிய விருதை பெற்று தந்தது. மேலும் இப்படம் நினைவில் நீங்கா 100படங்களில் டைம்ஸ் பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது(1988). மேலும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியப்படமும் இதுதான்.

இதன்பின் 1996ல் இவர் நடித்த "இந்தியன்" திரைப்படம் இவருக்கு மூன்றாவது தேசிய விருதை பெற்றுத் தந்தது. இப்படம் இது போன்ற சமுதாய சிந்தனைகள் நிறைந்த படங்கள் வர துவக்கமாய் அமைந்தது. குழந்தையாக ஒன்று, நடிகனாக மூன்று என மொத்தம் நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற பெருமை கமலையே சாரும்.



தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்து இப்போதும் தன் திறமையை நிரூபித்துக் கொண்டு திரைத்துரையின் எதிர்காலத்திற்கு முன்னோடியாய் திகழ்கிறார். திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்திருக்கும் இந்த நாயகனை இங்கு முதல் மின்னும் நட்சத்திரமாக எழுதியதில் பெருமை கொள்கிறேன்.

உங்களுக்கு தோன்றும் கருத்துகளையும் பிடித்திருந்தால் வாக்குகளையும் இட்டு செல்லுங்கள். இது உங்கள் இடம்.


0 comments: