ஏ.வி.எம் என்பதன் பொருள் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். 1907ல் காரைக்குடியில் பிறந்த இவர்தான் ஏ.வி.எம் நிறுவனத்தின் நிறுவனர். இந்த நிறுவனம் தமிழ்சினிமாவின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வருகிறது என சொன்னால் மிகையாகாது.
1932ம் ஆண்டு சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற இசைத்தட்டு தயாரிக்கும் நிறுவனமே இந்த ஏ.வி.எம்மின் தொடக்கம் என சொல்லலாம். அதன்பின் திரைப்படங்கள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கிய இவர் 1935 முதல் 1938 வரை அல்லி அர்ஜீனா, ரத்னாவளி, நந்தகுமார் ஆகிய படங்களை கல்கத்தாவில் எடுத்து தோல்வியைக் கண்டார்.
பின் 1940ல் சென்னையில் பிரகதி ஸ்டுடியோ என்ற நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து தொடங்கி சபாபதி போன்ற வெற்றிப் படங்களை எடுத்தார். கன்னடத்தில் எடுக்கப்பட்ட "ஹரிச்சந்திரா" என்ற படத்தை தமிழில் மொழிபெயர்த்தது இந்த நிறுவனம். தமிழில் வெளிவந்த முதல் மொழிபெயர்ப்பு(டப்பிங்) படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
நந்தக்குமார் படத்தில்தான் முதன் முதலில் பின்னணி பாடும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இன்று இருக்கும் பல பின்னனி பாடகர்களின் மூலம் இந்த நிறுவனத்தால் உருவாக்கப் பட்டதே. 1960ல் சென்னையில் ஒரு வீட்டில் ஏ.வி.எம் புரொடக்சன்ஸ் ஆரம்பிக்கப் பட்டது.
சென்னையில் மின்சார வசதி கிடைக்காத காலம் அது. அதனால் கரைக்குடியில் குடிசைப் போட்டு 1946ல் ஏ.வி.எம் நிறுவனம் துவக்கப்பட்டது. 1948 வரை அங்கிருந்தே படங்கள் தயாரிக்கப்பட்டன. பின்னர் மீண்டும் 1948ம் ஆண்டு ஏ.வி.எம் நிறுவனம் சென்னைக்கு மாற்றப்பட்டது.
இந்நிறுவனத்திற்காக பணியாற்றிய அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் என்.டி.ஆர் ஆகியோர் பின்னாளில் முதலமைச்சரானது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 70ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முக்கிய பங்காற்றி வரும் இந்த ஏ.வி.எம் நிறுவனம் இப்போது அவர்கள் வம்சத்தை சேர்ந்த எம்.சரவணன் மற்றும் எம்.எஸ்.குகன் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகிறது.
ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய அரசாங்கம் 2006ம் ஆண்டு தபால் தலை வெளியிட்டு அவரை கவுரவித்திருக்கிறது. இந்நிறுவனத்தின் தமிழ்த் தயாரிப்புகள் நாம் இருவரில் தொடங்கி தற்போதைய வேட்டைக்காரனில் வந்து நிற்கிறது.
(தொடரும்)
1 comments:
அப்படியா, நன்றி.
Post a Comment