Thursday, January 28, 2010

தமிழ் சினிமா உருவான வரலாறு - 1

தமிழ் சினிமா, இன்றைய தமிழ் மக்களின் முக்கிய பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் சில படங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவும் விளங்கி வருகிறது. இந்த தமிழ் சினிமாவின் ஆரம்பம் முதல் இன்று வரையிலான வளர்ச்சியின் வரலாறு இன்று முதல் ஒரு தொடராக வாரந்தோரும் வியாழக் கிழமையில் உங்களுக்காக. 75 வருடங்களை கடந்திருக்கும் இந்த தமிழ் சினிமாவின் வரலாற்றை பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

தமிழ்சினிமா கோலிவுட் என அழைக்கப்படுவதன் காரணம் என்னவென்றால், தமிழ் சினிமாவின் புகலிடமாக விளங்கும் சென்னை கோடம்பாக்கத்தையும் ஹாலிவுட் என்ற ஆங்கில வார்த்தையையும் இணைத்துதான் கோலிவுட் என வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் திரைப்படங்களின் தயாரிப்பு 1916களிலேயே துவக்கப் பட்டுவிட்டது. அப்போது தயாரிக்கப்பட்டப் படங்கள் அனைத்தும் ஊமைப்படங்களாக(Silent Movies) அமைந்தன. 1931ம் வருடம் முதன் முதலில் ஒரு பேசும் திரைப்படத்தில் தமிழ் மொழி உபயோகிக்கப்பட்டது. இதுவே தமிழின் பேசும் படங்களின் ஆரம்பமாக அமைந்தது. அந்த படம்தான் "காளிதாஸ்".

இந்த படம் ஒரு பன்மொழிப்படமாக அமைந்திருந்தது. இதில் தெலுகு, இந்தி உட்பட பல மொழிகளுடன் தமிழும் இடம் பெற்றது. இத்திரைப்படத்தின் ஒலி அமைப்பு ஜெர்மன் தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியில் "விட்டாஃபோன்" முறைப்படி அமைக்கப் பட்டது. விட்டாஃபோன் முறையில் ஒலி மற்றும் ஒளி அமைப்புகள் இணைத்து வழங்கப்படவில்லை.

மாற்றாக இரண்டும் தனித்தனியே வழங்கப்பட்டன. திரையரங்கில் படம் ஒளிபரப்பும் போது அந்த ஆபரேட்டர் ஓளிக்கருவியோடு சேர்த்து ஒலிக்க்ருவியையும் இயக்கும் போது இரண்டும் ரசிகர்களுக்கு இணைந்து கேட்கும். இதுதான் விட்டாஃபோன் முறை ஒலி அமைப்பு. காளிதாஸ் திரைப்படத்தில் இந்த முறை பயன்படுத்தப்பட்டு ஒலியமைக்கப் பட்டது.

இந்த காளிதாஸ் திரைப்படம் "Imperial Movie-Tone" என்ற நிறுவனத்தால் வெறும் 8 நாட்களில் தயாரிக்கப் பட்டது. இத்திரைப்படம் 4ம் நூற்றாண்டை சேர்ந்த காளிதாஸ் என்ற புலவரின் வரலாற்றை பரைசாற்றும் படமாக எடுக்கப் பட்டது. இந்த திரைப்படத்தில் 50 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

இத்திரைப்படம் சென்னையில் "கினீமா சென்ட்ரல்" என்ற திரையரங்கில் 1931ல் வெளியிடப்பட்டது. 8,000 ரூபாயில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் 75,000 ரூ வரை வசூலை அள்ளிக் குவித்தது. இத்திரைப்படத்தில் நடித்த டி.பி. ராஜலெஷ்மி "சினிமா ராணி" என அழைக்கப்பட்டார். இத்திரைப்படத்தில் இவர் ஒரு மகாராணியாக நடித்திருப்பார்.

சுதேசமித்ரனில் வெளிவந்த விளம்பரம்



(தொடரும்)


2 comments:

வெற்றி said...

அரிய தகவல்கள் !

Aaqil Muzammil said...

nalla tagaval