Saturday, January 23, 2010

ஆயிரத்தில் ஒருவனும் பிரபல பதிவர்களும்

ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றி பெரும்பாலான விமர்சனங்கள் நம் வலைப்பதிவர்களிடமிருந்து எதிர்ப்பாகத்தான் வந்திருக்கிறது. ஏன் ஒரு புது முயற்சிக்கு இத்தனை எதிர்ப்புகள்? இது போன்று ஒரு படத்தை இது வரை தமிழில் யாரும் எடுத்ததில்லை. செல்வாவின் இந்த முயற்சிக்கு ஆரம்பம் முதல் எவ்வளவு எதிர்ப்புகள்.

நம் வலைப்பதிவர்களில் பலர் சொன்ன குற்றசாட்டு படத்தில் லாஜிக்கே இல்லை என்பதுதான். அவர்கள் சமீபத்தில் பாராட்டிய ஆங்கிலப் படங்களான "2012" மற்றும் "அவதார்" படங்களில் என்ன லாஜிக் இருக்கிறது. அதை பாராட்டி பதிவெழுதிய இவர்கள் ஏன் இந்த படத்தை எதிர்க்க வேண்டும். தமிழில் ஒரு படம் ஹாலிவுட் தரத்திற்கு முயற்சி செய்ய பட்டிருப்பதை இவர்கள் நிச்சயம் ஆதரித்திருக்க வேண்டும்.

தமிழன் எடுத்தால் லாஜிக் இருக்க வேண்டும். வெள்ளைக்காரன் எடுத்தால் அதெல்லாம் வேணாம். என்ன கொடுமை இது. இன்னொரு பதிவர் சொல்லியிருந்தார் "இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இயல்பாக இல்லை" என்று. ஏன் இல்லை? புதைகுழி காட்சிகள், நடராஜர் நிழல் இதெல்லாம் இயல்பாக இல்லை என்று சொன்னால் ஊரே சிரிக்கும். கிராபிக்ஸ் காட்சிகளில் சில தோற்றதுக்கு காரணம் இது 40 கோடி பட்ஜெட் படம். 1200 கோடி இல்லை.

40கோடியில் நம்மை ஹாலிவுட் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த முயற்சி என்னை பொருத்த வரை பாராட்டுக்குரியது. பலர் சொல்லியிருந்தனர், படத்தில் வக்கிர காட்சிகள் இருபதாக. அனைவராலும் மிக பிரம்மாண்ட படமாக ஏற்றுகொள்ளப்பட்ட "டைட்டானிக்கில்" இருந்ததை விட இதில் குறைவுதான். அந்த பதிவர்களால் பாராட்டப்பட்ட ஆங்கில ஹாலிவுட் படங்கள் வக்கிரமில்லாமல் வெளிவந்திருக்கிறதா?

பலர் சொல்லியிருந்தனர் படத்தின் பிற்பகுதி பிடிக்கவில்லை என்று. பிடிக்கவில்லை என்பதை விட அவர்களுக்கு புரியவில்லை என்பதுதான் உண்மை. காரணம் பிற்பகுதியில் பேசப்படும் அக்கால தமிழ். இது புரியவில்லை என சொல்வது தமிழனுக்குதான் அசிங்கம். ஆங்கிலத்தில் படம் பார்த்து பாராட்டுவோருக்கு தமிழ் புரியவில்லையாம்.

இது போன்ற முயற்சிகளுக்கு தடைக்கல்லாக எதிர்ப்பு தெரிவிப்பதை விடுத்து, இவற்றை ஆதரித்தால் தான் தமிழ்படங்கள் அடுத்த நிலைக்கு செல்லும். முளையிலேயே கிள்ளி எறிந்து விடாதீர்கள்.

16 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை நண்பா, நீங்கள் கூறுவதை பார்த்தால், பார்க்கலாம் என்று
தோன்றுகிறது.

பலா பட்டறை said...

ரைட்டு படம் பார்த்துடவேண்டியதுதான்...

V.A.S.SANGAR said...

ஐயா இததான் நானும் கேக்குறான் ஏன் ?

Sangkavi said...

சரி இன்றைக்கு படம் பார்த்துவிட வேண்டியது தான்...

வெண்ணிற இரவுகள்....! said...

இவர்களுக்கு மசாலா மட்டுமே பிடிக்கும் நண்பா ............
இரண்டாவது பாதி ஈழ பிரச்சனையின் புனைவு பல பருக்கு புரியவில்லை
படம் வெறும் பொழுதுப்போக்கிற்காக பார்க்கும் ஜனம் ......................
படம் பொழுதுப்போக்கை தாண்டி ஒரு கலை .........

MANI said...

excellent review and it is very good movie in tamil cinema

thileeban said...

I saw tha movie on first day. Excellent movie.Must watch

mahesh said...

me too saw dis movie on d first day. for people seeking masala n commercial.. sorry dis s not d apt movie for u.. if u can try to understand it den u ll njoy it..

Thinks Why Not said...

They like masala movies, where their hero comes and hit 30 or 40 persons at a time & wins.. Thats really logical for them....

Ofcourse truth is people dont understand the movie. May be Selva could have taken more effort to make it bit more simpler to make people understand... and the twist of saying Flashback of reema could have shown bit later while she escapes....

Anonymous said...

good view

Vetri Thirumalai said...

It is not true that we people do not know how to appreciate good films. We have always done so, but here the case is different. If selvaraghavan choose to make a fantasy film he is free to do that but not at the expense of portraying the cholas badly(though he puts a disclaimer that it is not history). I liked Selvaraghavan's previous films like Thulluvadho Ilamai, Kadhal Kondein and 7g. But his latest two films(in Tamil) puthu pettai & Ayirathil Oruvan it seems he went to shooting without having clear idea about the second half of the films. Any sane man would tell the flaws in characterisation. Even many hollywood movies are taken in this Budget(40crs) but they do proper home work(they also have worst films but those never comes outside) and have the entire script ready before starting the shooting. If you want to touch upon any historical characters then you need to do proper reasearch and if you cannot then dont touch it.

ச.செந்தில்வேலன் said...

நல்லா கேட்டிருக்கீங்க. என் கருத்தும் உங்கள் கருத்தே :)

Ram said...

super review. nalla kettirukinga.

குப்பன்.யாஹூ said...

till interval it is good we too appreciate, but after interval the screen play was very pathetic and poor.

The dialogues were pathetic, it is neither choza tamil nor pandiyan tamil. it is a mixture of srilankan & chennai tamil.

Anonymous said...

nice question

சிறில் அலெக்ஸ் said...

It is tought for us to note holes in hollywood movies. That is one main reason. It is one thing to set an expectation and entirely another to trash it.

I have not yet seen the movie though.