Monday, January 11, 2010

ஆயிரத்தில் ஒருவன் பொங்கலுக்கு இல்லை


கடும் பிரச்சினைகளுக்கு பின் பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் இப்போது வர்ப்போவதில்லை. செல்வராகவனால் ஏற்பட்ட தலைவலிதான் இது. ஆனால் திரையரங்குகளில் முன்பதிவு திறக்கப்பட்டு பதிவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத்தடை இரண்டு நட்களில் நீக்கப்படுமா? என்பது சந்தேகமே.

இந்த பிரச்சினை குறித்த விபரம் இதோ

சந்திரசேகரன் தயாரிப்பில் "காசிமேடு" என்ற படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் செல்வராகவன். 2கோடிசம்பளமும் பேசப்பட்டிருந்தது.2007ல் இதற்காக 90லட்சமும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்திற்கான எந்த முயற்சியும் செல்வா செய்யவில்லை. கடுப்பாகிப் போன சந்திரசேகரன் பிரச்சினையை தயாரிப்பாளர் சன்கத்திற்கு எடுத்து சென்றார்.

90 லட்சம் திருப்பி கொடுக்கப்பட்ட நிலையில் மீதத் தொகை 1.10 கோடியை ஆயிரத்தில் ஒருவன் வெளியீட்டுக்கு முன் தருவதாக கூறியவர் அதை கொடுக்காமலே ஏமாற்றி படத்தை வெளியிடும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில் தொடரப்பட்ட இவ்வழக்கில் 20ம் தேதி வரை இபடத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிது நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன் பதிவு செய்ய விழைவோர் யோசித்து செய்யவும்.

4 comments:

ஜெட்லி... said...

நண்பா...நான் நேத்து தான் முதல் நாள் சிறப்பு காட்சிக்கு
டிக்கெட் எடுத்தேன்.... அதெல்லாம் பேசி தீர்த்துப்பாங்க.
இது தான் காசு வாங்க கரெக்ட்ஆன டைம்...
சந்திரசேகர் இது போல் ஏற்கனவே ஹிந்தி கஜினி படத்துக்கும்
பண்ணினார்.....அவரை சொல்லி தப்பில்லை.......

புலவன் புலிகேசி said...

இதெல்லாம் ஒரு விளம்பரமப்பா..அப்புறம் மச்சி நேத்து தாமதமாதான் இதைப் பதிஞ்சேன். இனிமே எதாவது போஸ்ட் இணைக்க முடியலன்ன்னா சொல்லு இணைச்சிடலாம்.

சினிமா புலவன் said...

நன்றி ஜெட்லி, புலவன் புலிகேசி

நண்பா எனக்காக இணைத்தமைக்கு நன்றிகள்.

திவ்யாஹரி said...

இதெல்லாம் ஒரு விளம்பரமப்பா..

சரியாக சொன்னீர்கள் புலிகேசி