Wednesday, January 27, 2010

வேதம் புதிது - திரைத்திரும்பல்


பார்ப்பனிய சமூகம் மற்றும் மக்களின் மூட நம்பிக்கைகளை அழகாக எடுத்தியம்பும் திரைப்படம். முற்போக்குவாதியின் மூடத்தனத்தையும் சுட்டிக்காட்டும் திரைப்படம்.

தயாரிப்பு, ஒளிப்பதிவு,இயக்கம் - P. பாரதிராஜா

கதாபாத்திரங்கள்:

சத்யராஜ் - பாலுத்தேவர்

சரிதா - பாலுத்தேவரின் மனைவி

ராஜா - சங்கரபாண்டி (பாலுத்தேவர் மகன்)

சாருஹாசன் - நீலகண்ட சாஸ்திரி

அமலா - வைதேகி (நீலகண்ட சாஸ்திரியின் மகள்)

ஜனகராஜ்ன் - வைத்தி

இசை: இளையராஜா

கதைச்சுருக்கம்:

கடவுள் நம்பிக்கையற்ற ஊர்ப்பெரியவரான பாலுத்தேவர் வீட்டு சீதனம் அந்த ஊரில் நடக்கும் அனைத்து திருமணத்திற்கும் உண்டு. மக்களுக்கு பாலுத்தேவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. மக்களின் மூடநம்பிக்கைகள் மீது நம்பிக்கையில்லாதவர் பாலுத்தேவர்.

இவரது மகன் சங்கரபாண்டி நீலகண்ட சாஸ்திரியிடம் சங்கீதம் கற்பதாக சொல்லிக் கொண்டு அவர் மகள் வைதேகியை காதலிக்கிறான். இந்த விடயம் சாஸ்திரிக்கு தெரியவர தான் ஒரு பார்ப்பனீயன் என்பதால் அதை எதிர்க்க காதலர்கள் இருவரும் எதிர்பாரா விதமாக கோவிலில் பேசிக் கொண்டிருந்து மாட்டி கொள்ள சங்கரபாண்டி எதிர்பாராவிதமாக இறந்து போகிறான். வைதேகி ஊரைவிட்டு வெளியேறினாள். மகள் ஓடிப்போய்விட்டாள் என நினைத்து சாஸ்திரிகளும் தற்கொலை செய்து கொள்கிறார்.

இதனால் வைதேகியின் தம்பி அனாதையாகிறான். அவன் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட போது பாலுத்தேவர் அவனை தன் வீட்டிற்கு அழைத்து சென்று வளர்க்கிறார். இதனால் அந்த குழந்த பார்ப்பனீய சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுவதும், பாலுத்தேவரை ஊர்க்காரர்கள் வெறுக்கவும் தொடங்குகின்றனர்.

இந்நிலையில் தம்பியைத் தேடி ஊர்த் திரும்பும் வைதேகி பாலுத்தேவர் வீட்டில் தஞ்சமடைகிறாள். இதையறிந்த வைத்தி வைதேகியை பழித் தீர்க்க எண்ணுகிறான் (வைதேகியால் முன்னர் ஒருமுறை அவமானப்படுத்தப்பட்டதால்). ஒரு வைக்கோல் பந்தலை தீயிட்டு கொளுத்தியவன் ஊரில் சென்று "வைதேகி ஊருக்குள்ள காலடி வச்ச நேரம் ஊர் பத்தி எரியுது" என சொல்ல, மூட நம்பிக்கையில் மூழ்கியிருந்த மக்களும் அதனை நம்பி பாலுத்தேவரை எதிர்க்கின்றனர். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் கிளைமேக்ஸ்.

இது பாரதிராஜாவின் வெற்றிப்பட வரிசையில் முக்கியமானது. சமூக அவலங்களை அப்பட்டமாக எடுத்தியம்பும் இந்த திரைப்படத்தை இயக்கிய பாரதிராஜாவுக்கு நன்றிகள். இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னனியும் அருமை. "கண்ணுக்குள் நூறு நிலவா" பாடல் இன்றைய இளைஞர்களின் மனதிலும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

சிறப்புக் காட்சி:
பார்ப்பனீய சிறுவன் முற்போக்குவாதியான பாலுத்தேவரிடம் "உங்க பேர் என்ன?" என்பான்.
அதற்கு அவர் " பாலுத்தேவர்" என கம்பீரமாக சொன்னதும்
"பாலுங்கறது உன்க பேரு தேவர்ங்கறது நீங்க படிச்சி வாங்குன பட்டமா" என சிறுவன் கேட்டதும் பளார் பளார் என கன்னத்தில் அறைந்தது போலிருக்கும் பாலுத்தேவருக்கு. இந்த காட்சி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.

2 comments:

director said...

Hello sir, indha padathukku camera man : b.kannan, musuic : devendran
please change that data.
thanks.

Ramakrishnan said...

2 corrections
1)music-Devendran
2)photography-B.Kannan