Saturday, January 16, 2010

ஆயிரத்தில் ஒருவன் - புது முயற்சியின் ஆரம்பம்

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம். இது தமிழ்படம்தானா என அனைவரையும் வியக்க வைக்கும் திரைப்படம். இந்த படத்தின் நாயகன் கார்த்தி என நினைத்து பார்க்க போனால் அனைத்தும் ரீமாசென் தான். கலக்கியிருக்கிறார். அனால் அதிகப்படியான ஆபாசங்கள் குடும்பத்துடம் பார்க்க முடியாத சூழலுக்கு தள்ளிவிடுகிறது.

சோழர் பாண்டியர் பிரச்சினையை எடுத்து கொண்டு ஒரு கற்பனை கதையை ஆங்கில படத்துக்கு நிகராக சொல்லியிருக்கிறார் செல்வா. என்ன ஒரு குறை என்றால் பாண்டியர்களை ஏன் இவ்வளவு கேவலமானவர்களாக காட்ட வேண்டும் என்பதுதான் புரியவில்லை. இருந்தாலும் படம் எடுத்திருக்கும் விதை அந்த லாஜிக்கை எல்லாம் மறக்கடித்து விடுகிறது.

ரீமா ஒரு ராணுவ அதிகாரி, நம்ம ஆண்ட்ரியா ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர். அவர் தந்தை காணாமற்போக அவரை தேடி காட்டுக்குள் ரீமாவுடன் இராணுவத்தை அழைத்து கொண்டு செல்லும் பொது, கார்த்தி ஒரு கூலியாக உடன் வருகிறார். இவ்வாறாக தொடங்கும் கதை அந்த சோழர் கிராமம் சென்றடைய ௭ ஆபத்துக்களை கடக்க வேண்டும் என்பதாக சென்று, ஒரு சோழர் கூட்டம் ஆதிவாசியாக பஞ்சத்தில் கிடந்து அவர்களின் இடத்தை பாதுகாப்பதாக சென்று அவர்கள் அனைவரும் ரீமாவால் ஏமாற்றப்பட்டு கொல்லப்படுகின்றனர்.

ரீமாவின் பிளாஸ்பேக் எதிர்பாராத ஒன்று. அதை தியேட்டரில் சென்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த கதையில் இரண்டு நாயகிகள் ஒரு நாயகன் என்றாலும் ரீமா பெயரை தட்டி செல்கிறார். ஒரு வருந்த தக்க விடயம் என்னவென்றால் இந்த படம் உயர் ரக ரசிகர்களை மட்டுமே திருப்தி படுத்தும். ௪௦ கூடி சித செலவை எடுக்க முடியுமா என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த படம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.

பி.கு:படத்தின் பின்பாதி ஈழத்தமிழர் படுகொலையை நினைவுபடுத்துகிறது.

வாழ்த்துக்கள் செல்வா...

2 comments:

Paleo God said...

நன்றி புலவரே..:)

திவ்யாஹரி said...

"௪௦ கூடி சித செலவை எடுக்க முடியுமா என்பது சந்தேகமே" இது மட்டும் அல்ல.. நிறைய எழுத்து பிழை உள்ளது நண்பா. ஒரு முறை படித்து விட்டு வெளியிடவும்.. நண்பர் புலிகேசியிடம் இவைகளை திருத்த ஆலோசனை கேளுங்கள்.. நன்றி..