இது வரை நான் பார்த்த படங்களில் என் மனதிலிருந்து நீங்காத இடம் பிடித்த திரைப்படம் "அன்பே சிவம்". இந்த படம் வெளியான முதல் நாள் முதல் கட்சி எங்கள் ஊர் ரெத்னா திரையரங்கில் பார்த்தேன். நாங்கள் மொத்தம் 10பேர் போயிருந்தோம். ஆனால் இத்திரைப்படம் பிடித்தது எங்களில் இருவருக்கு மட்டும்தான்.
மற்றவர்களுக்கு பிடிக்கலவில்லை என்று சொல்வதை விட புரியவில்லை என்று சொல்வதுதான் உண்மை. ஆனால் அன்று பிடிக்கவில்லை என்று சொன்ன அவர்களுக்கு இன்று பிடித்த படம் அதே அன்பே சிவம் தான். என்ன செய்வது நல்ல படங்கள் வெற்றியடைய எத்தனை வருடம் தேவைப் படுகிறது.
இப்படி பட்ட சிறந்த படத்தின் கதையில் கடவுள் பற்றிய விளக்கங்கள் கொண்ட காட்சிகளை ஒரு வரலாறாக சொல்லலாம். அதன் ஆரம்பம் தான் இந்த பதிவு. மொத்தம் மூன்று பதிவுகள். இந்த முதல் பதிவில் கதை சுருக்கத்தையும் ஆரம்பக் காட்சியையும் விவரிக்க போகிறேன்.
ஒரு வரியில் சொன்னால் "கடவுள் என்றால் என்ன?" இதுதான் படத்தின் கதை. அதற்கான விள்க்கம் தான் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பதிய பட்டிருக்கிறது. புவனேஷ்வர் ரயில் நிலையத்தில் ஆஅரம்பமாகும் கதையில் மாதவன் ஒரு பணக்கார வீட்டு பையன் மட்டுமல்லாது விளம்பரப் படம் எடுப்பவர்.
தன் திருமணத்திற்கு சென்னை செல்ல வந்தவர் மழைக்காரணமாக புவனேஷ்வரில் மாட்டி கொண்டிருக்கும் போது கமலின் விகார முகத்தை பார்த்து அவரை தீவிரவாதி என நினைத்ஹ்டு கவல் துறைக்கு தகவல் கொடுத்து பின் கமலிடம் இது என் தப்பில்லை உங்களை பார்த்தா அப்புடி தெரியுது அதான்னு சொன்னதும் கமல் "ஒரு தீவிரவாதி என்னை மாதிரி அசிங்கமா இருக்கனும்னு இல்ல. கோட் சூட்லாம் போட்டு உங்கள மாதிரி கூட இருக்கலாம்னு சொல்வார்".
இப்படி இருவருக்குமான வாக்குவாதத்தில் தொடங்கும் கதையில் கமலின் இந்த வாக்குவாதங்கள் மாதவனுக்கு பிடிக்காமல் போக கமலையும் பிடிக்காமல் போகிறது. கமலின் ஒவ்வொரு செயலும் மாதவனை ஏதாவது ஒரு விதத்தில் பாதித்து விடும். கண்ணில் மிளகாய் பொடி, லாட்ஜில் கதவு திறப்பது என்று.
கடவுள் காட்சிகள் அடுத்த பதிவிலிருந்து.
அன்பே சிவம் படம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் இங்கே தெரிவியுங்கள். விருப்பமிருந்தால் வாக்களித்து செல்லுங்கள்.
17 comments:
இதுபோல் படமெடுக்கும் திறமை கொண்ட சுந்தர்.சி.ஏன் நடிக்க ஆரம்பித்தார்.
எனக்கு பிடித்த கமல் படங்களில் இதுவும் ஒன்று. யதார்த்தமான திரை.
(உங்கள் கருத்துக்கும் ,ஊக்கத்திற்கும் நன்றி நண்பரே.)
Good movie.
One of My Fav Line in the movie :
Neenga Ennikkaavadhu Queue la ninnu saamy Kumbitrukkeengala?? Irukkara Queue valaam Nikka vechuttu Thaniya Special Dharisanam Panravaraache!!
Seyyara Thappellaam Pannittu Undiyalla Kaasa Pottutta Saamy Mannichuruvaaraa??
Appdi Mannikkaravar saamy ye illa..Kooli..
Yenna Avarum Kaasu vaangittu thaane Nalladhu panraaar!!!
the same experience i got it...i love lot of scenes/dialogs in this movies.
once kamal told that,
dever magan oru vetri petra guna, guna dholvi petra dever magan..
kamal thinking ahead others, so everybody thinking as he selfish/fool
it's always happens whoever tries first time like the earth are not flat!.
அடுத்தவன் காசில் மெகா பட்ஜெட்டில் படமெடுத்து அவர்களை போண்டியாக்கி விட்டுவிட்டு, நலிந்து பெண்களின் வாழ்க்கையை கல்யாணம்? செய்தோ செய்யாமலோ பாழாக்கி தொலைத்து ஆனால் ஊருக்கு மட்டும் அன்பே சிவம் படம் எடுப்பார்.
அடுத்தவன் காசில் மெகா பட்ஜெட்டில் படமெடுத்து அவர்களை போண்டியாக்கி விட்டுவிட்டு, நாலைந்து பெண்களின் வாழ்க்கையை கல்யாணம்? செய்தோ செய்யாமலோ பாழாக்கி தொலைத்து ஆனால் ஊருக்கு மட்டும் அன்பே சிவம் படம் எடுப்பார்.
அடுத்தவன் காசில் மெகா பட்ஜெட்டில் படமெடுத்து அவர்களை போண்டியாக்கி விட்டுவிட்டு, நாலைந்து பெண்களின் வாழ்க்கையை கல்யாணம்? செய்தோ செய்யாமலோ பாழாக்கி தொலைத்து ஆனால் ஊருக்கு மட்டும் அன்பே சிவம் படம் எடுப்பார்.
ANBE SIVAM is one of the best movie in Film Industry...
Idhu Marukka mudiyadha UNMAI.
அதுவே ஆங்கில பட தழுவல்தான்.. இருந்தாலும், அதை எடுத்த விதம் அருமை!!
எனக்கும் பிடித்த படம்தான் அது..தொடருங்கள்
நான் பார்க்கவேண்டும் என்ற லிஸ்டில் வைத்திருக்கும் படம்... கூடிய விரைவில் பார்த்துவிடுவேன்.
sudar.c. than padam eduthara? namba mudiyale
Noway it can be sundar.c movie...In every scence you can feel kamal's touch. Sumbody said it's copy of english movie .. Can u tell me which movie it was and on what basis you are telling its taken from english movie ??? Dnt try to be over smart man
எனக்கு பிடித்த படம் அன்பே சிவம்.. கமலின் சொந்த வாழ்கையை பார்க்காமல் சொல்ல வந்த கருத்தை புரிந்து கொண்டால் நல்லது.. எல்லாருமே நல்லவங்கன்னு சொல்ல முடியாது.. எங்கள் ஊரில் கமல் படம் என்றாலே பெண்களை பார்க்க அழைத்து செல்வது இல்லை.. அன்பே சிவம் மாதிரியான படங்கள் விதிவிலக்கு..
Many folks told that it was a copy of "Planes, Trains & Automobiles" but it wasn't.
Story and screenplay by kamal ji.. sundar directed it.
Post a Comment