முந்தைய பகுதிகள்
"அன்பே சிவம்" - ஒரு வரலாறு -1
"அன்பே சிவம்" - ஒரு வரலாறு-2
விளக்கம் - 4
திருமண மண்டபத்தில் கமலை பார்த்த நாசர் இழுத்து செல்வார்.
அப்போது கமல்
"நீங்க என்னைக்காவது க்யூல நின்னு சாமி கும்புட்டுருக்கீங்களா?
இருக்குற க்யூவல்லாம் நிக்க வசிட்டு தனியா பர்சனல் தரிசனம் பன்றவராச்சே நீங்க.
செய்யற தப்பெல்லாம் பன்னிபுட்டு உண்டியல்ல காச போட்டுருவீங்க. உங்க பாவத்தை எல்லாம் மன்னிச்சி கடவுள் காப்பாத்துவாரு இல்ல.
அப்புடி காப்பாத்துற கடவுள் கடவுளே இல்ல கூலி. ஏண்ணா அவரும் காசு வாங்கிட்டு தான வேல செய்யுறாரு"
என்பார். என்ன ஒரு அருமையான விளக்கம்.
விளக்கம் - 5
இறுதியில் சந்தானபாரதி அரிவாளுடன் கமலை கொலை செய்ய வந்து மனதை மாற்றி கொள்ளும் போது,
"எனக்கு கடவுள் நம்ம்பிக்கை இருக்கு தம்பி. உங்களூக்கு எப்புடியோ?" என்பார்.
அதற்கு கமல் "எனக்கும் இருக்கு" என்பார்.
"யார் அந்த கடவுள்?" என்றதும் சந்தான பாரதியை காட்டி "ஒருத்தர கொலை பன்ன வந்துட்டு மனச மாத்ஹ்டி கிட்டு மன்னிப்பு கேக்குற மனசு இருக்கு பாருங்க அதுதான் கடவுள்" என்பார்.
"மனச மாத்திக் கிட்டேன் அதுக்காக நான் கடவுள்லாம் இல்ல தம்பி" என்பார்.
"அப்புடில்லாம் நம்பிக்கை இல்லாம நாத்திகம் பேசதீங்க. இந்த மாதிரி கடவுள் உலகம் பூரா இருக்கு நாமதான் பாக்குறதில்ல" என்பார்.
என்னை மெய்சிலிர்க்க வைத்த காட்சி இது. என் விருப்ப படமான அன்பே சிவத்தை பற்றியும் அதனற்புத காட்சியை பற்றியும் விளக்கியதில் பெருமிதம் கொள்கிறேன். உங்களுக்கு பிடித்த காட்சியை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
பிடித்திருந்தால் அப்படியே தமிலிசிலும் தமிழ்மணத்திலும் வாக்களித்து செல்லுங்கள்.
Monday, January 11, 2010
அன்பே சிவமும் கடவுள் நம்பிக்கையும் (இறுதி)
Posted by சினிமா புலவன் at 7:53 AM
Labels: அன்பே சிவம்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
3-ம் வாசித்தேன். படம் பார்த்து நாளாகிவிட்டது. தொட்ட காட்சிகள் அனேகம். உங்களது பார்வை நன்றாக உள்ளது.
நண்பரே! நானும் இந்தப் படத்தின் ரசிகன். இப்படத்தை நான் இதுவரை 20 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். சிறந்த படம், ஆனால் பலருக்கும் படம் வந்து கொஞ்ச காலம் கழித்து தான் பிடிக்க ஆரம்பித்தது.
மூன்றும் அருமை நண்பா..தகுதியன திரைப்படத்திற்கு நல்ல விளக்கம்
நன்றி தருமி, அண்ணாமலை சுவாமி, புலவன் புலிகேசி
நல்ல காட்சிகள் நண்பா..
பலமுறை பார்த்திருகிறேன்...
ஒவ்வொரு முறையும் கண் கலங்குவதை மட்டும் நிறுத்த முடியவில்லை...
//அப்புடில்லாம் நம்பிக்கை இல்லாம நாத்திகம் பேசதீங்க. இந்த மாதிரி கடவுள் உலகம் பூரா இருக்கு நாமதான் பாக்குறதில்ல//
அட அட அருமையான வரி
அதுவும் கமல் அத சொல்லும் பொது தனி அழகு
Post a Comment