Saturday, January 9, 2010

"அன்பே சிவம்" - ஒரு வரலாறு-2


யார் கடவுள்? என்ற வினாவிற்கு தெளிவாக பல இடங்களில் பதில் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம். அந்த விளக்கங்களை இப்போது பார்க்கலாம்.

விளக்கம்-1

கமல் பேருந்து விபத்திலிருந்து மீட்கப்பட்டு மருத்துவ்சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வந்து மலை மீது இருக்கும் ஒரு பெட்டிக் கடையில் அமர்ந்திருக்கும் பொழுது அக்கடையின் உரிமையாளரான ஒரு பெண் சொல்லுவார்

"இப்புடி பொழச்சி வந்தவங்களை நாங்க கடவுளுக்கு சமானம்னு சொல்லுவோம். நீங்க கடவுள்" என கமலைப் பார்த்து சொல்லுவாள்.

அதற்கு கமல்

"நீங்களும்தான் கடவுள்தான். இப்புடி அன்பு காட்டுறவங்கள நாங்க கடவுள்னு சொல்லுவோம்னு சொல்லுவாரு"

விளக்கம்- 2

புகைவண்டி விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒரு சிறுவ்னுக்கு மாதவன் ரத்தம் கொடுத்து காப்பற்றுவார். ஆனால் அவசர ஊர்தியில் செல்லும் வழியில் அந்த சிறுவன் இறந்து போவான். அப்போது நடக்கும் உரையாடல்

மாதவன்: "என்ன மாதிரி கடவுள் இது. இந்த மாதிரி சமயத்துலதான் கடவுள் இருக்காராங்கற ந்ம்பிக்கையே போய்டுது. இல்ல எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு. நான் உங்கள மாதிரி இல்ல"

கமல்: "எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லன்னு யார் சொன்னா?"

மாதவன்: "ஓ திடீர்னு உங்களுக்கு கடவுள் நம்பிக்கை வந்துருச்சா? யார் அந்த கடவுள்?"

அதற்கு பதிலாய் கமல் மாதவனை கைகாட்டி சொல்லுவார் "யாருன்னே தெரியாத ஒருத்தனுக்காக வருத்தப் படுற மனசு இருக்கு பாருங்க அதுதான் உண்மையான கடவுள்" என்பார்.

விளக்கம்- 3

மாதவன் கமலை தன்னுடன் அழைக்கும் போது கமல் வர மறுக்கும் போது, கமலின் நாய் சங்கு தவ்வி வாகனத்தில் ஏற மாதவன் கேட்பார் "அந்த dog க்கு புரிஞ்சது கூட உங்களுக்கு புரியலையா?" என்பார்.அதற்கு கமல் dog அ திருப்பி போட்டா god வருதே என்பார். நகைச்சுவையாக இருந்தலும் அந்த நாயின் குணத்திலும் கடவுள் வெளிப் பட்டிருக்கிறார். கடவுள் என்ற குணம் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உள்ளது.

விளக்கங்கள் தொடரும்.....

4 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

//"யாருன்னே தெரியாத ஒருத்தனுக்காக வருத்தப் படுற மனசு இருக்கு பாருங்க அதுதான் உண்மையான கடவுள்" என்பார்.//

நான் ரசித்த காட்சி இது, இது மற்றும் எல்லோரிடமும் இருந்தால் பாதி பிரச்சினைகள் தீரும்.
அருமை நண்பா.

புலவன் புலிகேசி said...

எனக்கு பிடித்த காட்சிகளை சுட்டியிருக்கிறீர்கள். நன்றி

திவ்யாஹரி said...

"யாருன்னே தெரியாத ஒருத்தனுக்காக வருத்தப் படுற மனசு இருக்கு பாருங்க அதுதான் உண்மையான கடவுள்"

கண் கலங்க வைக்கும் காட்சி.. எனக்கு ரொம்ப பிடிச்ச காட்சிகள்.. நன்று நண்பா..

Joe said...

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அருமையான படம்!