ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு சிட்டி சிவில் கோர்ட் விதித்த இடைக்காலத் தடை விலக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் செலம் சந்திரசேகர் தொடுத்திருந்த வழக்கை அவரது தரப்பில்வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதி கிருபாநிதி வழக்கை தள்ளுபடி செய்து இடைக்கால தடையையும் நீக்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் திட்டமிட்டப்படி பொங்கலுக்கு ரிலீசாகிறது.
தயாரிப்பாளர் சங்கப் பஞ்சாயத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் மனு விலக்கிக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஒரு பிரச்சினை:
இந்தப் படத்தில் நடித்த துணை நடிகர்கள், தங்களது சம்பள பாக்கி ரூ 7 லட்சத்தை பெற்றுத் தருமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தந்துள்ளனர்.
புகார் விபரம்:
"ஆயிரத்தில் ஒருவன் படத்தில் துணை நடிகர்-நடிகைகள் 100 பேர் நடித்தோம். ஐதராபாத், புதுச்சேரி, குற்றாலம், கோவூர் ஆகிய இடங்களுக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். ஆனால் எங்களுக்கு சேரவேண்டிய ரூ.7 லட்சம் சம்பள பாக்கி இதுவரை கிடைக்கவில்லை. அந்த சம்பள பாக்கியை வசூலித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்", என்று கூறியிருந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் ராஜேந்திரன், துணை நடிகர்களிடம் தெரிவித்தார். பிறகுதான் அனைவரும் கலைந்து சென்றனர்.
செல்வா படம்னாலே பிரச்சினைதானா?
5 comments:
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்துக்கள்::))
துணை நடிகர், நடிகை சம்பளம் விரைவில் கிடைக்கட்டும், இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
waiting for ouy
உங்களுக்கு எப்டி இந்த நியூஸ்லாம் கிடைக்குது நண்பா..
Post a Comment