Wednesday, February 10, 2010

16 வயதினிலே - திரைத்திரும்பல்(3)


1977ல் வெளிவந்த இத்திரைப்படம் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் திரையுலக வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இதுதான் ரஜினிகாந்த் நடித்த முதல் கலர்த் திரைப்படம். முழுக்க முழுக்க கிராமப்புரத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் இயக்குனர் "பாரதிராஜா".

நடிகர்கள்:

ரஜினி, கமல், ஸ்ரீதேவி, கே.பாக்யராஜ், கவுண்டமணி, சத்யராஜ், காந்திமதி

கதைச்சுருக்கம்:

ஒரு 16 வயது பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் யதார்த்தப் பிரதிபலிப்புதான் இத்திரைப்படம். ஆசிரியையாவதை லட்சியமாக கொண்டவள் கிராமத்திற்கு வரும் மருத்துவனைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஆனால் அவன் இவளை ஏமாற்றி விடுகிறாள். அந்த ஏமாற்றத்தின் போது தன் தாயையும் இழப்பவளுக்கு உறுதுணையாக இருப்பது அவள் தாயால் வளர்க்கப்பட்ட சப்பானி. சப்பானி என்றாலே மயிலுக்குப் பிடிக்காது.

சப்பானிக்கு மயில் என்றால் உயிர். தாயின் மறைவுக்குப் பின் சப்பானி காட்டும் உண்மையான அன்பை புரிந்தவள் சப்பானியை ஒரு மதிப்பு மிக்கவனாக மாற்ற முயல்கிறாள். இவர்களுக்கிடையில் பரட்டை என்ற ரவுடி ஒருவனும் மயில் மீது ஆசைப் படுகிறான். சப்பானி எப்படி அந்த ரவுடியிடமிருந்து மயிலைக் காப்பாற்றுகிறான் என்பதுதான் படத்தின் முடிவு.

இத்திரைப்படம் திரையுலகில் மாபெரும் வசூலை அள்ளிக்குவித்தது. மேலும் தெலுகு, கன்னடம் போன்ற மொழிகளின் ரீமேக் உரிமையையும் விற்று காசாக்கினார் தயாரிப்பாளர்.

விருது:

எஸ்.ஜானகி சிறந்த பின்னனி பாடகிக்கான "சில்வர் லோட்டஸ் விருதை" இப்படத்தின் மூலம் பெற்றார்.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் ரஜினிகாந்த் வரும் காட்சிகள் வெறும் மூன்றே நாட்களில் எடுக்கப் பட்டது. இளையராஜாவின் இன்னிசையில் கிராமத்து பின்னனியும், பாடல்களும் சிறப்பு. குறிப்பாக "செந்தூரப்பூவே" மற்றும் "ஆட்டுக்குட்டி" பாடல்கள் அருமை.

தமிழ்த் த்ரை ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த இத்திரைப்படம் இன்றும் என்னுடன் குறுந்தகடு வடிவில்.


0 comments: