Friday, January 29, 2010

இசைத்தமிழ் - ஏ.ஆர். ரகுமான்(1)


இசைத்தமிழில் நம் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் பற்றியும் அவர்களின் தமிழ் திரைப் பாடல்கள் பற்றியும் விவரிக்கப் போகிறோம். இதன் ஆரம்பமாக உலக மக்கள் அனைவருக்கும் பிடித்த மற்றும் இந்திய இசையை உலக அளவு எடுத்து சென்று இந்தியாவிற்காக இரண்டு ஆஸ்கர்கள் பெற்று தந்த முதல் இந்தியன் குறிப்பாக தமிழனான இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பற்றியே துவக்குகிறோம்.

ஜனவரி 6, 1966ல் பிறந்த இவரின் பெயர் A.S.திலீப்குமார். பின்னர் இவர் பெயரை அல்லா ரக்கா ரகுமான்(ஏ.ஆர்.ரகுமான்) என மாற்றி கொண்டார்.இவர் தந்தை சேகரின் இசையார்வத்தால் இவருக்கும் அந்த இசை மீது அலாதி பிரியம் ஏற்பட்டது. அதன் விளைவுதான் இன்று நம்மில் பலரை இசைப்பிரியர்களாகவும் இசை ஆர்வளர்களாலும் மாற்றியிருக்கிறது.

இவரது இசைவாழ்க்கை 1985ல் தொடங்கியது. இவரை ஒரு இசையமைப்பாளராக இயக்குனர் மணிரத்னம் 1992ல் வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். தன் முதல் படத்திலேயே தமிழ் மற்றும் இந்திய ரசிகர்களின் இதயத்தை இசையால் சுண்டியிழுத்த பெருமை இந்த இசைப்புயலையே சாரும்.

இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் இன்று கேட்டால் கூட நெஞ்சை அள்ளிச் செல்லும் அக்கால இளைஞர்கள் முதல் இக்கால இளைஞர்கள் வரை அனைவர் மனதிலும் இப்படத்தின் பாடல்கள் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

தன் முதல் படத்திலேயே இசைக்காக இத்தனை விருதுகள் பெற்ற பெருமை இவரைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.

1) புது வெள்ளை மழை - நல்ல காதல் மெலடி

பாடகர்கள்: உன்னிமேனன், சுஜாதா

2) தமிழா தமிழா - தேச மற்றும் தமிழ் உணர்வை பிரதிபலிக்கும் பாடல்

பாடகர்: ஹரிகரன்

3) காதல் ரோஜாவே - காதலின் சோகப் பிரதிபலிப்பு

பாடகர்: எஸ்.பி. பாலசுப்ரமணியன்

4) சின்ன சின்ன ஆசை - கிராமத்துப் பெண்ணின் ஆசைகள்

பாடகி: மின்மினி

5) ருக்குமணியே - திருமணப் பாடல்

பாடகர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியன், பாபா சீகல், ஸ்வேதா

இப்படத்தின் விருதுகள்:

1) சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது

2) சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசு விருது

3) சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம்ஃபேர் விருது

4) 2005ல் டைம்ஸின் நெஞ்சில் நீங்கா 10 சிறந்த பாடல்களில் இடம் பெற்றது

முதல் படத்திலேயே இவரது திறமை இந்திய திரையுலகத்திற்கு தெரிந்து விட்டது.

(தொடரும்)

உங்களுக்கு தோன்றும் கருத்துகளையும் பிடித்திருந்தால் வாக்குகளையும் இட்டு செல்லுங்கள். இது உங்கள் இடம்.


4 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

இசைப்புயலின் இளம்வயது படங்கள் அசத்தல், நன்றி புலவரே.

வெற்றி said...

//இசைப்புயலின் இளம்வயது படங்கள் அசத்தல், நன்றி புலவரே.//

அதே அதே !

RJ Dyena said...

//இசைப்புயலின் இளம்வயது படங்கள் அசத்தல், நன்றி புலவரே.//

very rare pictures....thanks a lot

Unknown said...

தகவலுக்கு நன்றி,

ரஹ்மானை பற்றி இன்னும் அதிகமாக வெளியுடவும்.

படம் ரெம்ப நல்லாருக்கு :D