Sunday, January 31, 2010

கலைவாணர் என்.எஸ்.கே - நகைச்சுவை நாயகன் (1)


நவம்பர் 29 1908 நமக்காக என்.எஸ்.கே என்பவரை அவரின் தாயார் பெற்றெடுத்த நாள். தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகின் நாயகனாக ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனோடு இந்த தொடரை துவக்குகிறேன்.

முதலில் வில்லுப்பாட்டுகாரனாக தனது கலைப்பயணத்தை தொடங்கிய இவர் பின்னர் சில நாடகங்களில் நடித்து நாடகக் கலைஞராக திகழ்ந்தார்.பின்னர் சொந்தமாக ஒரு நாடக கம்பெனியை துவக்கினார். தென்னிந்தியாவில் சினிமா புகழ் பெற துவங்கியபின் இவருக்கும் அதில் ஆர்வம் வரவே சினிமாதுரையில் நுழைந்தார்.

இவர் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். இரண்டு மூத்த சகோதரிகள் செல்லம்மாள், பாஞ்சாலி மற்றும் மூன்று இளைய சகோதரிகள் மகாலெஷ்மி, சுப்பம்மாள், மின்னம்மாள். மேலும் ஒரு இளைய சகோதரன் திரவியம். இவர் 5ம் வகுப்பு வரை மளையாளத்தை தாய்மொழியாக கொண்ட பள்ளியில் படித்து வந்தார்.

அவரின் குடும்ப வறுமை அவரது படிப்பை அத்துடன் நிறுத்தி விட்டது.பின்னர் ஒரு கடையில் மாதம் 5ரூ சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார்.பின்னர் கடயின் முதலாளி இவர் கடைக்கு தாமதமாக வருவதால் இவரை திட்டி சம்பளத்தை குறைத்து 4 ரூ மட்டும் கொடுத்து வேலையை விட்டு நீக்கினார்.

அதன் பின் நாடகத்துரையில் ஆர்வம் கொண்டு வீட்டிலேயே நடித்து பழகினார்.பின்னர் இவர் தந்தை இவரை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டார். அதுவே அவரின் கலையுலகின் தொடக்கமாக அமைந்தது. 1924ல் இவரது பெயர் கிருஷ்ணனில் இருந்து என்.எஸ்.கிருஷ்ணனாக மாற்றப்பட்டது.

என்.எஸ்.கிருஷ்ணன் என்றால் "நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன்". தனது ஊர் பேரான நாகர் கோவிலையும் தனது தந்தை பெயரையும் இணைத்தே இவர் இப்பெயரில் வழங்கப் பெற்றார்.

சில காலங்களுக்கு பின்னர் டி.கே.எஸ் நாடக குழுமத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதன் பின்னர் இவரின் திரைவாழ்க்கை தொடங்கியது. அது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

(தொடரும்)

Saturday, January 30, 2010

படச்சுருள் - 30-01-2010

--> இந்த வாரம் 5 படங்கள் வெளிவந்திருக்கு தைரியம், கதை, கோவா, ஜக்குபாய், தமிழ்படம். பொங்கல் பட வரவால் திரையரங்குகள் குறவாகத்தான் கிடைத்திருக்கிறது போலும். அனைத்தும் குறந்த அளவு திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.


--> முக்கியமான விடயம் நம்ம தல அஜீத்தோட அசல் படம் வரும் வெள்ளிக்கிழமை 5ம் தேதி வெளிவருகிறது. இதற்கான முன்பதிவு மதுரையில் உள்ள திரையரங்குகளில் துவங்கி விட்டதாம். என்னை போன்ற தல ரசிகர்கள் உட்டுராதீங்க. நம்ம தல அஜீத்தோட படம் நிச்சயம் வெற்றி படமா அமையும்னு நம்புவோம். நம்ம தல படத்தோட ட்ரைலர் உங்களுக்காக




மற்ற ஊர்களில் நாளை முன்பதிவு துவக்கம். தமிழகத்தில் வெளியாகும் திரையரங்குகளின் விபரம்: http://www.starajit h.com/media_ display.php? id=1691
--> இன்னொரு செய்தி தல பத்திதான். நம்ம தல நடிச்சி வெளிவரப்போற இந்த அசல் படதுல கதை-திரைக்கதை-வசனம் டைடீல் கார்டுல 3 பேரோட பேர் வருதாம். அதுல நம்ம தலயோட பேரும் ஒன்னு. இப்படத்திற்கு யு/ஏ சர்டிஃபிக்கேட் கிடைத்துள்ளது.

--> ஜக்குபய் படத்தோட பிரீமியர் ஷோவுக்கு திரையுலக பிரபலங்கள் ரஜினி, கமல் உட்பட பெரிய பட்டாளமே சென்றிருக்கிறது. இது தயாரிப்பிலிருக்கும் போதே நெட்டிலும் ட்.வி.டி யிலும் வந்தது. அப்பவே பாக்க ஆளில்ல. தியேட்டர்ல?

--> தனுஷ் கௌரவ வேடத்தில் நடிக்கப் போகிறார். ஆமாம் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் எடுக்கப்படப் போகும் சீடன் படத்தில் இவர் ஒரு சிவ பக்தராக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்த படத்தில் இவர் ஹீரோ இல்லை. தனது பங்கு 20% மட்டும்தான் என பகிரங்கமாக அறிவித்து சுப்ரமணிய சிவாவுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.

-->ஆயிரத்தில் ஒருவன் படத்தின் திருட்டு வீ.சி.டி தெருத்த்ருவாக விற்பதாக நடிகர் கார்த்தி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அது பற்றிய விபரம்:

"எங்களின் இரண்டரை ஆண்டு கடும் உழைப்பு ஆயிரத்தில் ஒருவன். தமிழ் மக்கள் இந்தப் படத்தை 100 ரூபாய் செலவழித்து தியேட்டரில் போய் பார்க்க வேண்டும். 15 ரூபாய் செலவழித்து திருட்டு விசிடியில் பார்த்து விடாதீர்கள். திருட்டு வி.சி.டி.யில் பார்த்தால் கோடிக்கணக்கில் செலவழித்து படம் எடுத்துள்ள தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும்.." என்றார்.

Friday, January 29, 2010

இசைத்தமிழ் - ஏ.ஆர். ரகுமான்(1)


இசைத்தமிழில் நம் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் பற்றியும் அவர்களின் தமிழ் திரைப் பாடல்கள் பற்றியும் விவரிக்கப் போகிறோம். இதன் ஆரம்பமாக உலக மக்கள் அனைவருக்கும் பிடித்த மற்றும் இந்திய இசையை உலக அளவு எடுத்து சென்று இந்தியாவிற்காக இரண்டு ஆஸ்கர்கள் பெற்று தந்த முதல் இந்தியன் குறிப்பாக தமிழனான இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பற்றியே துவக்குகிறோம்.

ஜனவரி 6, 1966ல் பிறந்த இவரின் பெயர் A.S.திலீப்குமார். பின்னர் இவர் பெயரை அல்லா ரக்கா ரகுமான்(ஏ.ஆர்.ரகுமான்) என மாற்றி கொண்டார்.இவர் தந்தை சேகரின் இசையார்வத்தால் இவருக்கும் அந்த இசை மீது அலாதி பிரியம் ஏற்பட்டது. அதன் விளைவுதான் இன்று நம்மில் பலரை இசைப்பிரியர்களாகவும் இசை ஆர்வளர்களாலும் மாற்றியிருக்கிறது.

இவரது இசைவாழ்க்கை 1985ல் தொடங்கியது. இவரை ஒரு இசையமைப்பாளராக இயக்குனர் மணிரத்னம் 1992ல் வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். தன் முதல் படத்திலேயே தமிழ் மற்றும் இந்திய ரசிகர்களின் இதயத்தை இசையால் சுண்டியிழுத்த பெருமை இந்த இசைப்புயலையே சாரும்.

இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் இன்று கேட்டால் கூட நெஞ்சை அள்ளிச் செல்லும் அக்கால இளைஞர்கள் முதல் இக்கால இளைஞர்கள் வரை அனைவர் மனதிலும் இப்படத்தின் பாடல்கள் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

தன் முதல் படத்திலேயே இசைக்காக இத்தனை விருதுகள் பெற்ற பெருமை இவரைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.

1) புது வெள்ளை மழை - நல்ல காதல் மெலடி

பாடகர்கள்: உன்னிமேனன், சுஜாதா

2) தமிழா தமிழா - தேச மற்றும் தமிழ் உணர்வை பிரதிபலிக்கும் பாடல்

பாடகர்: ஹரிகரன்

3) காதல் ரோஜாவே - காதலின் சோகப் பிரதிபலிப்பு

பாடகர்: எஸ்.பி. பாலசுப்ரமணியன்

4) சின்ன சின்ன ஆசை - கிராமத்துப் பெண்ணின் ஆசைகள்

பாடகி: மின்மினி

5) ருக்குமணியே - திருமணப் பாடல்

பாடகர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியன், பாபா சீகல், ஸ்வேதா

இப்படத்தின் விருதுகள்:

1) சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது

2) சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசு விருது

3) சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம்ஃபேர் விருது

4) 2005ல் டைம்ஸின் நெஞ்சில் நீங்கா 10 சிறந்த பாடல்களில் இடம் பெற்றது

முதல் படத்திலேயே இவரது திறமை இந்திய திரையுலகத்திற்கு தெரிந்து விட்டது.

(தொடரும்)

உங்களுக்கு தோன்றும் கருத்துகளையும் பிடித்திருந்தால் வாக்குகளையும் இட்டு செல்லுங்கள். இது உங்கள் இடம்.


Thursday, January 28, 2010

தமிழ் சினிமா உருவான வரலாறு - 1

தமிழ் சினிமா, இன்றைய தமிழ் மக்களின் முக்கிய பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் சில படங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவும் விளங்கி வருகிறது. இந்த தமிழ் சினிமாவின் ஆரம்பம் முதல் இன்று வரையிலான வளர்ச்சியின் வரலாறு இன்று முதல் ஒரு தொடராக வாரந்தோரும் வியாழக் கிழமையில் உங்களுக்காக. 75 வருடங்களை கடந்திருக்கும் இந்த தமிழ் சினிமாவின் வரலாற்றை பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

தமிழ்சினிமா கோலிவுட் என அழைக்கப்படுவதன் காரணம் என்னவென்றால், தமிழ் சினிமாவின் புகலிடமாக விளங்கும் சென்னை கோடம்பாக்கத்தையும் ஹாலிவுட் என்ற ஆங்கில வார்த்தையையும் இணைத்துதான் கோலிவுட் என வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் திரைப்படங்களின் தயாரிப்பு 1916களிலேயே துவக்கப் பட்டுவிட்டது. அப்போது தயாரிக்கப்பட்டப் படங்கள் அனைத்தும் ஊமைப்படங்களாக(Silent Movies) அமைந்தன. 1931ம் வருடம் முதன் முதலில் ஒரு பேசும் திரைப்படத்தில் தமிழ் மொழி உபயோகிக்கப்பட்டது. இதுவே தமிழின் பேசும் படங்களின் ஆரம்பமாக அமைந்தது. அந்த படம்தான் "காளிதாஸ்".

இந்த படம் ஒரு பன்மொழிப்படமாக அமைந்திருந்தது. இதில் தெலுகு, இந்தி உட்பட பல மொழிகளுடன் தமிழும் இடம் பெற்றது. இத்திரைப்படத்தின் ஒலி அமைப்பு ஜெர்மன் தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியில் "விட்டாஃபோன்" முறைப்படி அமைக்கப் பட்டது. விட்டாஃபோன் முறையில் ஒலி மற்றும் ஒளி அமைப்புகள் இணைத்து வழங்கப்படவில்லை.

மாற்றாக இரண்டும் தனித்தனியே வழங்கப்பட்டன. திரையரங்கில் படம் ஒளிபரப்பும் போது அந்த ஆபரேட்டர் ஓளிக்கருவியோடு சேர்த்து ஒலிக்க்ருவியையும் இயக்கும் போது இரண்டும் ரசிகர்களுக்கு இணைந்து கேட்கும். இதுதான் விட்டாஃபோன் முறை ஒலி அமைப்பு. காளிதாஸ் திரைப்படத்தில் இந்த முறை பயன்படுத்தப்பட்டு ஒலியமைக்கப் பட்டது.

இந்த காளிதாஸ் திரைப்படம் "Imperial Movie-Tone" என்ற நிறுவனத்தால் வெறும் 8 நாட்களில் தயாரிக்கப் பட்டது. இத்திரைப்படம் 4ம் நூற்றாண்டை சேர்ந்த காளிதாஸ் என்ற புலவரின் வரலாற்றை பரைசாற்றும் படமாக எடுக்கப் பட்டது. இந்த திரைப்படத்தில் 50 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

இத்திரைப்படம் சென்னையில் "கினீமா சென்ட்ரல்" என்ற திரையரங்கில் 1931ல் வெளியிடப்பட்டது. 8,000 ரூபாயில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் 75,000 ரூ வரை வசூலை அள்ளிக் குவித்தது. இத்திரைப்படத்தில் நடித்த டி.பி. ராஜலெஷ்மி "சினிமா ராணி" என அழைக்கப்பட்டார். இத்திரைப்படத்தில் இவர் ஒரு மகாராணியாக நடித்திருப்பார்.

சுதேசமித்ரனில் வெளிவந்த விளம்பரம்



(தொடரும்)


Wednesday, January 27, 2010

வேதம் புதிது - திரைத்திரும்பல்


பார்ப்பனிய சமூகம் மற்றும் மக்களின் மூட நம்பிக்கைகளை அழகாக எடுத்தியம்பும் திரைப்படம். முற்போக்குவாதியின் மூடத்தனத்தையும் சுட்டிக்காட்டும் திரைப்படம்.

தயாரிப்பு, ஒளிப்பதிவு,இயக்கம் - P. பாரதிராஜா

கதாபாத்திரங்கள்:

சத்யராஜ் - பாலுத்தேவர்

சரிதா - பாலுத்தேவரின் மனைவி

ராஜா - சங்கரபாண்டி (பாலுத்தேவர் மகன்)

சாருஹாசன் - நீலகண்ட சாஸ்திரி

அமலா - வைதேகி (நீலகண்ட சாஸ்திரியின் மகள்)

ஜனகராஜ்ன் - வைத்தி

இசை: இளையராஜா

கதைச்சுருக்கம்:

கடவுள் நம்பிக்கையற்ற ஊர்ப்பெரியவரான பாலுத்தேவர் வீட்டு சீதனம் அந்த ஊரில் நடக்கும் அனைத்து திருமணத்திற்கும் உண்டு. மக்களுக்கு பாலுத்தேவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. மக்களின் மூடநம்பிக்கைகள் மீது நம்பிக்கையில்லாதவர் பாலுத்தேவர்.

இவரது மகன் சங்கரபாண்டி நீலகண்ட சாஸ்திரியிடம் சங்கீதம் கற்பதாக சொல்லிக் கொண்டு அவர் மகள் வைதேகியை காதலிக்கிறான். இந்த விடயம் சாஸ்திரிக்கு தெரியவர தான் ஒரு பார்ப்பனீயன் என்பதால் அதை எதிர்க்க காதலர்கள் இருவரும் எதிர்பாரா விதமாக கோவிலில் பேசிக் கொண்டிருந்து மாட்டி கொள்ள சங்கரபாண்டி எதிர்பாராவிதமாக இறந்து போகிறான். வைதேகி ஊரைவிட்டு வெளியேறினாள். மகள் ஓடிப்போய்விட்டாள் என நினைத்து சாஸ்திரிகளும் தற்கொலை செய்து கொள்கிறார்.

இதனால் வைதேகியின் தம்பி அனாதையாகிறான். அவன் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட போது பாலுத்தேவர் அவனை தன் வீட்டிற்கு அழைத்து சென்று வளர்க்கிறார். இதனால் அந்த குழந்த பார்ப்பனீய சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுவதும், பாலுத்தேவரை ஊர்க்காரர்கள் வெறுக்கவும் தொடங்குகின்றனர்.

இந்நிலையில் தம்பியைத் தேடி ஊர்த் திரும்பும் வைதேகி பாலுத்தேவர் வீட்டில் தஞ்சமடைகிறாள். இதையறிந்த வைத்தி வைதேகியை பழித் தீர்க்க எண்ணுகிறான் (வைதேகியால் முன்னர் ஒருமுறை அவமானப்படுத்தப்பட்டதால்). ஒரு வைக்கோல் பந்தலை தீயிட்டு கொளுத்தியவன் ஊரில் சென்று "வைதேகி ஊருக்குள்ள காலடி வச்ச நேரம் ஊர் பத்தி எரியுது" என சொல்ல, மூட நம்பிக்கையில் மூழ்கியிருந்த மக்களும் அதனை நம்பி பாலுத்தேவரை எதிர்க்கின்றனர். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் கிளைமேக்ஸ்.

இது பாரதிராஜாவின் வெற்றிப்பட வரிசையில் முக்கியமானது. சமூக அவலங்களை அப்பட்டமாக எடுத்தியம்பும் இந்த திரைப்படத்தை இயக்கிய பாரதிராஜாவுக்கு நன்றிகள். இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னனியும் அருமை. "கண்ணுக்குள் நூறு நிலவா" பாடல் இன்றைய இளைஞர்களின் மனதிலும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

சிறப்புக் காட்சி:
பார்ப்பனீய சிறுவன் முற்போக்குவாதியான பாலுத்தேவரிடம் "உங்க பேர் என்ன?" என்பான்.
அதற்கு அவர் " பாலுத்தேவர்" என கம்பீரமாக சொன்னதும்
"பாலுங்கறது உன்க பேரு தேவர்ங்கறது நீங்க படிச்சி வாங்குன பட்டமா" என சிறுவன் கேட்டதும் பளார் பளார் என கன்னத்தில் அறைந்தது போலிருக்கும் பாலுத்தேவருக்கு. இந்த காட்சி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.

Tuesday, January 26, 2010

நாளை முதல் சினிமா புலவன் - புதிய திரையுலக வலைப்பூவாக


இந்த ஆண்டு துவக்கப்பட்ட சினிமாப் புலவன் வலைப்பூ நாளை (27-01-10) முதல் ஒரு புதிய பரிமானத்துடனும் புதுப்பொலிவுடனும் வெளிவர உள்ளது. இதற்கான திட்டமிடல் முடிவடைந்த நிலையில், வாரத்தின் ஏழு நாட்களுக்கு ஏழு விதமான சுவை மிக்க அம்சங்களை பின் வரும் பிரிவுகளின் படி வெளியிட முடிவு செய்யப் பட்டுள்ளது.

திங்கள்: விமர்சனம்

இனி திங்கள் கிழமைகளில் புதிதாக வெளிவரும் திரைப்படங்கள் அல்லது பாடல்களின் விமர்சனம் பதியப்படும்.

செவ்வாய்: ஒளி வீசும் நட்சத்திரம்

இனி செவ்வாய் கிழமைகளில் திரையுலகின் சாதனையாளர்கள் பற்றிய வரலாறு வெளியிடப்படும். இதில் ஒவ்வொரு வாரமும் ஒரு நட்சத்திரம் பற்றிய வரலாறுகள் பதியப்படும்.

புதன்: திரைத்திரும்பல்

இதில் நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த படங்களை பற்றிய கருத்துக்கள் தொகுத்து வழங்கப்படும்

வியாழன்: தமிழ்சினிமா வரலாறு

இதில் தமிழ் சினிமா தொடங்கிய காலம் முதல் இன்று வரையிலான வரலாறு ஒரு தொடர் தொகுப்பாகப் பதிவிடப்படும்

வெள்ளி: இசைத்தமிழ்

இதில் தமிழ் சினிமாவில் இசை மூலம் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர்களின் பாடல்கள் குறித்தும் அவர்களின் இசை வாழ்க்கை குறித்தும் தொடராக வெளியிடப்படும்.

சனி: படச்சுருள்

இதில் ஒவ்வொரு வாரமும் தமிழ்திரையுலகின் அவ்வார நிகழ்வுகள் தொகுத்து வழங்கப்படும்

ஞாயிறு: நகைச்சுவை கலைஞன்

இதில் ஒவ்வொரு வாரமும் நம் தமிழ் சினிமாவின் நகைச்சுவையாளர்களின் திரைத்துரை வாழ்க்கையும் அவர்கள் பற்றிய குறிப்புகளும் இடம் பெறும்

நண்பர்களே உங்களின் கருத்து மற்றும் ஆதரவை எதிர்பார்த்து எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு உங்களின் ஆதரவையும் கருத்துக்களையும் நட்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

நன்றி

Monday, January 25, 2010

அஜீத் பற்றி 50 (முற்றும்)


முதல் 25ஐ படிக்க இங்கே சொடுக்கவும் அஜீத் பற்றி 50 (பகுதி-1)

26) 2001ல் ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படமான தீனா மாபெரும் வெற்றியை பெற்று தந்ததுடன் இவரை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியது.

27) இந்த தீனா படத்திற்கு பிறகுதான் அஜீத் "தல" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட துவங்கிய காலம்

28) இதன் பின் அதே ஆண்டில் அவர் நடித்த சிட்டிசன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் சுமாரான வெற்றியே கிட்டியது.

29) இந்த சிட்டிசனில் முதல் முறை 10 விதமான கெயப்களில் நடித்துள்ளார்.

30) இதே ஆண்டில் அவர் நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் அவருக்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதை பெற்று தந்தது

31) 2001ன் இறுதியில் இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ஷாருக் கானுடன் இணைந்து ஒரு ஹிந்தி படத்தில் வில்லனாக நடித்தார்.

32) 2002ல் இவர் நடித்த ரெட் மற்றும் ராஜா படங்கள் இவருக்கு வெற்றியை தரவில்லை.

33) அதே ஆண்டில் மீண்டும் இரட்டை வேடத்தில் இவர் நடித்த வில்லன் திரைப்படம் வெற்றி பெற்றதுடன், இவரது நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்தது.

34) இந்நிலையில்தான் அவருக்கு கார் ரேசின் மீதிருந்த மோகம் மீண்டும் தலைதூக்க தொடர் தோல்விப் படங்கள் வரத் தொடங்கின.


35) 2003ல் இவர் நடித்த என்னை தாலாட்ட வருவாளா மற்றும் ஆஞ்சனேயா படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தன.

36) ஆஞ்சனேயா படத்தில் ஒரு போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருப்பார்.

37) 2004ல் வெளிவந்த ஜனா படமும் தோல்வியையே சந்தித்தது

38) சரணுடன் இணைந்து மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்த அட்டகாசம் மிகப்பெரும் வெற்றியை மீண்டும் பெற்று தந்தது

39) வெற்றிப்பட இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்த ஜீ திரைப்படம் இவரை மீண்டும் தோல்விக்கு தள்ளியது

40) 2005ல் இவர் நடித்த ஒரே ஒரு திரைப்படம் ஜனா. ஆனால் அப்படமும் தோல்வியையே தழுவியது

41) 2006ல் இவர் மொத்தம் 3 படங்களில் நடித்தார். அதில் பரமசிவன் மற்றும் திருப்பதி படங்கள் படு தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்தது

42) கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் மூன்றாவது படமான வரலாறு ஒரு மாபெரும் வெற்றியை தந்தது. இதில் அஜீத் 3 வேடங்களில் நடித்துள்ளார்

43) 2007ன் துவக்கத்தில் புதுமுக இயக்குனர் செல்லாவின் இயக்கத்தில் இவர் நடித்த ஆழ்வார் படம் மீண்டும் இவரை தோல்விக்கு தள்ளியது

44) இதையடுத்து மளையாளத்தில் தேசிய விருது பெற்ற படத்தின் ரீமேக்கான கிரீடத்தில் இவர் நடித்தார். இந்த படம் இவரை வெற்றியை நோக்கி அழைத்து சென்றாலும் சுமாரான வெற்றியே கிட்டியது

45) 1980ல் ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்ற பில்லா(அமிதாப்பச்சனின் டான் ரீமேக்) திரைப்படம் புதுப்பிக்கப்பட்ட முறையில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் விஷ்னுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து பெரும் வெற்றி பெற்றது

46) மேன் ஹூன் நா என்ற படத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட படம்தான் ஏகன். இதில் அஜீத் நயந்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை

47) தற்பொழுது அஜீத் தனது 49வது படமாக அசலில் பாவனா மற்றும் ஷமீரா ரெட்டியுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரியில் வெளிவருகிறது.

48) இந்நிலையில் அஜீத் தனது அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்திருக்கிறார். இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது

49) இவர் 2003ல் நடைபெற்ற ஃபார்முலா ஆசிய பி.எம்.டபுள்யூ பந்தயத்தில்(2003 Formula Asia BMW Championships) கலந்து கொண்டார்.

50) தலயின் 50வது படம் முடிவாகியுள்ளது. தயாநிதி அழகிரியின் க்ளவுட் னைன் மூவீஸ் இப்படத்தை தயாரிக்க கௌதம் வாசுதேவ மேனன் இயக்கவிருக்கிறார்

ஒரு நடிகரின் வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி குறுக்கிட்டாலும் அவற்றை பெரிதாக எடுத்து கொள்ளாமல் போராடிவரும் தன்னம்பிக்கை மனிதர் அஜீத் பற்றிய 50 விடயப் பகிர்வை இத்துடன் முடிக்கிறேன்


Sunday, January 24, 2010

அஜீத் பற்றி 50 (பகுதி-1)


1) பிறந்த நாள் - 01-மே-1971

2) பிறந்த இடம் - ஹைதராபாத்

3) தந்தை ஒரு பாலக்காட்டு ஐயர், தாய் ஒரு சிந்தி குடும்பத்தை சேஎர்ந்தவர்

4) சென்னையில் படிப்பை தொடங்கியவர் அதில் நாட்டமில்லாமல் மெக்கானிக்காக வாழ்க்கையை தொடர்ந்தார்

5) பின்னர் ஒரு கார்மென்டில் தன் பணியை தொடர்ந்தார்

6) கார் ரேசில் ஆர்வமாக இருந்த இவரை ஒரு விபத்து திசைதிருப்பி விளம்பரபட நடிகராக்கியது

7) 21 வயதில் 1992ல் "ப்ரேம புஸ்தகம்" என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்

8) 1993 ல் நடித்த முதல் தமிழ்படம் "அமராவதி"

9) 1995 ல் இவர் நாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற "ஆசை" திரைப்படம் இவரது திரையுலக வாழ்க்கைக்கு ஒரு ஊன்றுகோல் அமைத்து கொடுத்தது.

10) அடுத்ததாக இவரது மாபெரும் வெற்றி படமாக அமைந்தது காதல் கோட்டை(1996). அது மட்டுமல்லாமல் இப்படம் தேசிய விருதும் பெற்றது

11) 1997ல் இவர் நடித்த 5 படங்களான நேசம், ரெட்டை ஜடை வயசு, ராசி, உல்லாசம், பகைவன் படங்கள் தோல்வியை தழுவின

12) இவர் நடித்த உல்லாசம் படத்தின் தயாரிப்பாளர் அமிதாப் பச்சன்

13) அதன் பின் அவர் 1998ல் சரண் இயக்கத்தில் காதல் மன்னன் என்ற வெற்றி படத்தின் மூலம் மீண்டும் தன்னை நிலைநாட்டினார்

14) பின்னர் அவருகு அவள் வருவாளா மற்றும் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ஆகியவை சுமாரான வெற்றியை தந்தது

15) அதன் பின் நடித்த உயிரோடு உயிராக, தொடரும் மற்றும் உன்னைத்தேடி படங்களும் சுமாரான வெற்றியையே பெற்று தந்தன



16) 1999ல் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த வாலி திரைப்படம் இவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

17) இவர் இரட்டை வேடங்களில் நடித்த முதல் திரைப்படம் வாலி.

18) இந்த வாலி திரைப்படம் இவருக்கு முதல் ஃபிலிம் ஃபேர் விருதை பெற்று தந்தது.

19) 1999ல் சரண் இயக்கத்தில் இவர் நடித்த அமர்க்களம் படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தந்ததுடன் ரசிகர்கள் கூட்டத்தையும் அதிகப் படுத்தியது.

20) இந்த திரைப்படத்தின் மூலம்தான் அஜீத் மற்றும் ஷாலினி இடையே காதல் மலர்ந்தது.

21) 2000மாவது ஆண்டில் இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முகவரி திரைப்படம் இவருக்கு மேலும் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது

22) அதே ஆண்டில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படமும் வெற்றியை தேடித்தந்தது.

23) 2000ல் நடித்த முதல் இரண்டு படங்களுக்கான ஒற்றுமை என்னவெனில் முகவரியில் இசையமைப்பாளராகவும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இயக்குனராகவும் திரைத்துரை கலைஞனாகவே கதாபாத்திரம் கொண்டிருந்தார் அஜீத்.

24) தொடர்ச்சியான வெற்றி படங்களின் நடுவில் 2000த்தின் இறுதியில் இவர் நடித்த உன்னைகொடு என்னை தருவேன் திரைப்படம் மீண்டும் இவரை தோல்விக்கு தள்ளியது

25) இந்த படத்தில் அஜீத் ஒரு தேசப்பற்றுள்ள இராணுவவீரனாக நடித்திருந்தார்.

Saturday, January 23, 2010

இரண்டு தேசிய விருதுகள் பெற்றது நான் கடவுள்


இயக்குனர் பாலா. த்மிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து ஒரு புதிய வழிகாட்டுதலை ஏற்படுத்தியவர். அவர் இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படம் 2008ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளில் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

நான் கடவுள் படத்தின் இயக்கத்திற்காக இயக்குனர் பாலாவுக்கு சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் சிறந்த ஒப்பனை(மேக்கப்) கலைஞருக்கான விருது அதே நான் கடவுள் திரைப்படத்தின் கலைஞர் மூர்த்திக்கு கிடைத்துள்ளது.

இயக்குனர் பாலா சேது படத்தின் மூலம் அற்முகமாகி விக்ரம் என்ற நடிகனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததோடில்லாமல், தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்து வித்தியாசமான படங்கள் வெளிவர ஆரம்பம் அமைத்து கொடுத்தவர்.விக்ரமை அடுத்து நடிகர் சூர்யாவிற்கு திரையுலகில் ஒரு புதிய யுத்தியை அமைத்து கொடுத்து அவரின் நடிப்பு திறமையை வெளிக் கொண்டு வந்தவர்.

இதனையடுத்து பாலாவால் செதுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா.இவரும் நடிகை பூஜாவும் இணைந்து நடித்து வெளிவந்த படம்தான் நான் கடவுள். இப்படத்தின் மூலம் நடிகை பூஜா தேசியவிருது பெறுவார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. இருந்தாலும் இப்படத்திற்கு கிடைத்த இரண்டு விருதுகளும் திறமைக்கு கிடைத்தவை.



இப்படத்தின் நேர்த்தியான மேக்கப் மூர்த்திக்கு இந்த விருதை பெற்றுத் தந்துள்ளது. வாழ்த்துக்கள் பாலா மற்றும் மூர்த்தி.மேலும் 2008ன் சிறந்த தமிழ் படமாக "வாரணம் ஆயிரம்" அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த மூன்று விருதுகளும் தமிழ்திரையுலகினரின் திறமைக்கு கிடைத்தவை.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஆயிரத்தில் ஒருவனும் பிரபல பதிவர்களும்

ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றி பெரும்பாலான விமர்சனங்கள் நம் வலைப்பதிவர்களிடமிருந்து எதிர்ப்பாகத்தான் வந்திருக்கிறது. ஏன் ஒரு புது முயற்சிக்கு இத்தனை எதிர்ப்புகள்? இது போன்று ஒரு படத்தை இது வரை தமிழில் யாரும் எடுத்ததில்லை. செல்வாவின் இந்த முயற்சிக்கு ஆரம்பம் முதல் எவ்வளவு எதிர்ப்புகள்.

நம் வலைப்பதிவர்களில் பலர் சொன்ன குற்றசாட்டு படத்தில் லாஜிக்கே இல்லை என்பதுதான். அவர்கள் சமீபத்தில் பாராட்டிய ஆங்கிலப் படங்களான "2012" மற்றும் "அவதார்" படங்களில் என்ன லாஜிக் இருக்கிறது. அதை பாராட்டி பதிவெழுதிய இவர்கள் ஏன் இந்த படத்தை எதிர்க்க வேண்டும். தமிழில் ஒரு படம் ஹாலிவுட் தரத்திற்கு முயற்சி செய்ய பட்டிருப்பதை இவர்கள் நிச்சயம் ஆதரித்திருக்க வேண்டும்.

தமிழன் எடுத்தால் லாஜிக் இருக்க வேண்டும். வெள்ளைக்காரன் எடுத்தால் அதெல்லாம் வேணாம். என்ன கொடுமை இது. இன்னொரு பதிவர் சொல்லியிருந்தார் "இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இயல்பாக இல்லை" என்று. ஏன் இல்லை? புதைகுழி காட்சிகள், நடராஜர் நிழல் இதெல்லாம் இயல்பாக இல்லை என்று சொன்னால் ஊரே சிரிக்கும். கிராபிக்ஸ் காட்சிகளில் சில தோற்றதுக்கு காரணம் இது 40 கோடி பட்ஜெட் படம். 1200 கோடி இல்லை.

40கோடியில் நம்மை ஹாலிவுட் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த முயற்சி என்னை பொருத்த வரை பாராட்டுக்குரியது. பலர் சொல்லியிருந்தனர், படத்தில் வக்கிர காட்சிகள் இருபதாக. அனைவராலும் மிக பிரம்மாண்ட படமாக ஏற்றுகொள்ளப்பட்ட "டைட்டானிக்கில்" இருந்ததை விட இதில் குறைவுதான். அந்த பதிவர்களால் பாராட்டப்பட்ட ஆங்கில ஹாலிவுட் படங்கள் வக்கிரமில்லாமல் வெளிவந்திருக்கிறதா?

பலர் சொல்லியிருந்தனர் படத்தின் பிற்பகுதி பிடிக்கவில்லை என்று. பிடிக்கவில்லை என்பதை விட அவர்களுக்கு புரியவில்லை என்பதுதான் உண்மை. காரணம் பிற்பகுதியில் பேசப்படும் அக்கால தமிழ். இது புரியவில்லை என சொல்வது தமிழனுக்குதான் அசிங்கம். ஆங்கிலத்தில் படம் பார்த்து பாராட்டுவோருக்கு தமிழ் புரியவில்லையாம்.

இது போன்ற முயற்சிகளுக்கு தடைக்கல்லாக எதிர்ப்பு தெரிவிப்பதை விடுத்து, இவற்றை ஆதரித்தால் தான் தமிழ்படங்கள் அடுத்த நிலைக்கு செல்லும். முளையிலேயே கிள்ளி எறிந்து விடாதீர்கள்.

Friday, January 22, 2010

ரஜினியின் மாப்பிள்ளைக்கு மனீஷா மாமியார்


ரஜினி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் மாப்பிள்ளை என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அதே படம் ரீமேக் செய்யப் படுகிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் தனுஷின் மாமியார் வேடத்திற்கு பல நடிகைகளை தொடர்பு கொண்டனர்.

நதியா போன்ற பல நடிகைகளை முயற்சித்தும் ஒன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் ஸ்ரீதேவி மாமியாராக நடிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கேட்ட கோடி சம்பளம் தயாரிப்பு தரப்பை கலங்கடித்து விட்டது.

இதையடுத்து தபு போன்ற நடிகைகளை தொடர்பு கொண்டதாம் யூனிட். இறுதியில் மனீசா கொய்ராலாவை தொடர்பு கொள்ள அவர் தனுஷின் புகைப்படத்தை பார்த்துவிட்டு சரி என ஒப்பு கொண்டாராம். சம்பளத்திலும் ஒன்றும் பிரச்சினை இல்லையாம்.

பாபா என்ற மாபெரும் தோல்விப் படத்திற்கு பின் மனீஷா நடிக்க போகும் படம் மாப்பிள்ளை. இதாவது வெற்றி பெறுமா?

ஸ்ரீவித்யா நடித்த இடத்தில் மனீஷா. பூர்த்தி செய்வாரா அந்த பாத்திரத்தை?


Thursday, January 21, 2010

நாணயம் - திரைவிமர்சணம்


ஒரு வங்கியை கொள்ளையடிப்பதை மையப்படுத்தி ஒரு திரைப்படம் இதுவரை தமிழில் எடுக்கப்படவில்லை என்பதால் இந்த படம் ஒரு தரப்பு ரைகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளிவந்திருக்கிறது. தமிழில் இதற்கு முன்னர் ஒரு வங்கியை புத்திசாலித்தனமாகவும் நகைச்சுவையாகவும் கொள்ளையடித்த பெருமை பாக்யராஜ் அவர்களையே சாரும் (படம்: ருத்ரா).

எவராலும் கொள்ளையடிக்க முடியாத வங்கியாக வடிவமைக்கப்பட்ட வன்கியின் ஒரு உயரிய பொறுப்பில் இருப்பவர் பிரசன்னா. அந்த வங்கியை கொள்ளையிடத் திட்டமிடும் வில்லனாக சிபிராஜ். இவர்களை சுற்றியே நகர்கிறது கதை.

முன்னமே திருமணமாகி விவாகரத்தான பெண்ணை காதலிக்கிறார் பிரசன்னா. இருவரும் கடற்கரையில் இருக்கும் போது முன்னாள் கணவன் வந்து தகறாறு செய்கிறான். இருவரும் மயக்கமானது போல் காண்பிக்கப்பட்டு ஒரு வீட்டில் சிபிராஜுடன் பிரசன்னா காண்பிக்கப்படுகிறார்.

காதலியின் முன்னாள் கணவனை பிரசன்னா கொன்றதாகவும் அவனுடன் சண்டையிட்ட போது புகைப்படமெடுத்து வைத்திருப்பதாகவும் கூறி சிபிரஜ் பிரசன்னாவை அவர் வடிவமைத்த வங்கி லாக்கரையே கொள்ளையடிக்கும் திட்டத்திற்கு உடன்படுத்தி கொள்கிறார். இதனிடையில் அவர்களீடமிருந்து தப்பும் முயற்சியும் நடக்கிறது.

இறுதியில் பிரசன்னா காதலியையும் வங்கியையும் காப்பாற்றினாரா? அல்லது சிபிராஜ் திட்டமிட்டபடி வங்கி கொள்ளையடிக்கப்பட்டதா? என்பதை நன்றாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

இருந்தாலும் திரைக்கதையில் பல இடன்களில் சறுக்கல்கள். இந்த நாணயம் A சென்டர் ரசிகர்களை மட்டுமே ஓரளவுக்கு திருப்தி படுத்தியிருக்கிறது. மற்ற சென்டர்களில் நிச்சயம் வெற்றி பெற இயலாது.

சிபிராஜ் வில்லனாக முயற்சித்திருக்கிறார். தந்தை அளவுக்கு நேர்த்தியாக முடியாவிட்டாலும், ஓரளவு பன்னியிருக்கிறார். இனி அவர் வில்லனாகவே முயற்சிக்கலாம்.

நாணயம் தயாரிப்பாளர் எஸ்.பி. சரணுக்கு கிட்டுமா?

Sunday, January 17, 2010

புலவன் புலிகேசியும் நானும்


இன்று முதல் எனது பதிவுகளை மெருகேற்ற என்னுடன் என் நண்பன் புலிகேசியும் இணைகிறார். இருவரும் சந்தித்து பேசியதில் எடுக்கப்பட்டது இந்த முடிவு. இனி வெளிவரும் பதிவுகள் அனைத்தும் புலிகேசியுடன் விவாதித்த பின்னே வெளிவரும். அவர் எனக்கு சொன்ன விடயம் சினிமா பற்றிய பதிவுகள் சொந்த விருப்பமாக இல்லாமல் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதுதான்.

அதோடு இல்லாமல் தமிலிசில் எனது உறுப்பினர் உள்ளீடு அடிக்கடி காணாமற் போவதால் இனி எங்கள் பதிவுகள் புலிகேசி அவர்களால் வெளியிடப்படும் எனவும் தெரிவித்து கொள்கிறேன். இது பற்றி வரும் தரியலில் தெரிவிப்பார் என எண்ணுகிறேன். நான் கேட்டதும் ஒப்பு கொண்டமைக்கு நன்றி புலிகேசி. முதலில் சினிமா குறித்து எழுதுவதில் விருப்பமில்லை என்றார். பின்னர் என் பதிவுக்கு உதவ கேட்டதால் ஒப்புக் கொண்டார்.

நன்றி
சினிமா புலவன்

Saturday, January 16, 2010

ஆயிரத்தில் ஒருவன் - புது முயற்சியின் ஆரம்பம்

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம். இது தமிழ்படம்தானா என அனைவரையும் வியக்க வைக்கும் திரைப்படம். இந்த படத்தின் நாயகன் கார்த்தி என நினைத்து பார்க்க போனால் அனைத்தும் ரீமாசென் தான். கலக்கியிருக்கிறார். அனால் அதிகப்படியான ஆபாசங்கள் குடும்பத்துடம் பார்க்க முடியாத சூழலுக்கு தள்ளிவிடுகிறது.

சோழர் பாண்டியர் பிரச்சினையை எடுத்து கொண்டு ஒரு கற்பனை கதையை ஆங்கில படத்துக்கு நிகராக சொல்லியிருக்கிறார் செல்வா. என்ன ஒரு குறை என்றால் பாண்டியர்களை ஏன் இவ்வளவு கேவலமானவர்களாக காட்ட வேண்டும் என்பதுதான் புரியவில்லை. இருந்தாலும் படம் எடுத்திருக்கும் விதை அந்த லாஜிக்கை எல்லாம் மறக்கடித்து விடுகிறது.

ரீமா ஒரு ராணுவ அதிகாரி, நம்ம ஆண்ட்ரியா ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர். அவர் தந்தை காணாமற்போக அவரை தேடி காட்டுக்குள் ரீமாவுடன் இராணுவத்தை அழைத்து கொண்டு செல்லும் பொது, கார்த்தி ஒரு கூலியாக உடன் வருகிறார். இவ்வாறாக தொடங்கும் கதை அந்த சோழர் கிராமம் சென்றடைய ௭ ஆபத்துக்களை கடக்க வேண்டும் என்பதாக சென்று, ஒரு சோழர் கூட்டம் ஆதிவாசியாக பஞ்சத்தில் கிடந்து அவர்களின் இடத்தை பாதுகாப்பதாக சென்று அவர்கள் அனைவரும் ரீமாவால் ஏமாற்றப்பட்டு கொல்லப்படுகின்றனர்.

ரீமாவின் பிளாஸ்பேக் எதிர்பாராத ஒன்று. அதை தியேட்டரில் சென்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த கதையில் இரண்டு நாயகிகள் ஒரு நாயகன் என்றாலும் ரீமா பெயரை தட்டி செல்கிறார். ஒரு வருந்த தக்க விடயம் என்னவென்றால் இந்த படம் உயர் ரக ரசிகர்களை மட்டுமே திருப்தி படுத்தும். ௪௦ கூடி சித செலவை எடுக்க முடியுமா என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த படம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.

பி.கு:படத்தின் பின்பாதி ஈழத்தமிழர் படுகொலையை நினைவுபடுத்துகிறது.

வாழ்த்துக்கள் செல்வா...

Wednesday, January 13, 2010

தடைகளை தாண்டி தடைகளுடன் வெளிவருது ஆயிரத்தில் ஒருவன்


ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு சிட்டி சிவில் கோர்ட் விதித்த இடைக்காலத் தடை விலக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் செலம் சந்திரசேகர் தொடுத்திருந்த வழக்கை அவரது தரப்பில்வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி கிருபாநிதி வழக்கை தள்ளுபடி செய்து இடைக்கால தடையையும் நீக்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் திட்டமிட்டப்படி பொங்கலுக்கு ரிலீசாகிறது.

தயாரிப்பாளர் சங்கப் பஞ்சாயத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் மனு விலக்கிக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஒரு பிரச்சினை:

இந்தப் படத்தில் நடித்த துணை நடிகர்கள், தங்களது சம்பள பாக்கி ரூ 7 லட்சத்தை பெற்றுத் தருமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தந்துள்ளனர்.

புகார் விபரம்:

"ஆயிரத்தில் ஒருவன் படத்தில் துணை நடிகர்-நடிகைகள் 100 பேர் நடித்தோம். ஐதராபாத், புதுச்சேரி, குற்றாலம், கோவூர் ஆகிய இடங்களுக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். ஆனால் எங்களுக்கு சேரவேண்டிய ரூ.7 லட்சம் சம்பள பாக்கி இதுவரை கிடைக்கவில்லை. அந்த சம்பள பாக்கியை வசூலித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்", என்று கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் ராஜேந்திரன், துணை நடிகர்களிடம் தெரிவித்தார். பிறகுதான் அனைவரும் கலைந்து சென்றனர்.

செல்வா படம்னாலே பிரச்சினைதானா?

Tuesday, January 12, 2010

வந்தே மாதரத்தை தொடர்ந்து தமிழுக்கும் இசைப்புயலின் பாடல்


வந்தே மாதரம் பாடல் இந்திய மக்கள் அனைவரின் உணர்வில் முன்பெப்போதும் இல்லாத அளவில் பதியவைத்த நம்ம ஏ.ஆர். ரகுமான், இப்போது தமிழுக்காக அப்படி ஒரு பாடலை அமைத்து கொடுக்க போகிறார்.

உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்காகவும், அதன் பிறகு அனைத்து தமிழ் மேடைகளிலும் ஒலிப்பதற்காகவும் ஒரு புதிய தமிழ் வாழ்த்துப் பாடலை உருவாக்குகிறது தமிழக அரசு.

இந்தப் பாடலுக்கு இசையமைப்பவர் நம்ம இசைப்புயல் ரஹ்மான்தான். பாடலை உருவாக்கும் பொறுப்பு பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.

முன்னதாக இப்படியொரு யோசனையை தமிழக முதல்வருக்குச் சொன்னவர் சன் நெட்வொர்க் அதிபர் கலாநிதி மாறன்தானாம். இதனை உடனே ஒப்புக் கொண்ட முதல்வர், யாரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கலாம் என யோசித்தபோது, மணிரத்னம் அல்லது ஷங்கர் என்று பதில் வந்ததாம்.

இசைக்கு இளையராஜா அல்லது ரஹ்மான் என்ற யோசனை சொல்லப்பட, கலாநிதி மாறன்தான் ஷங்கர்- ரஹ்மான் காம்பினேஷன்தான் பெஸ்ட் சாய்ஸ் என்று கூறி சம்மதிக்க வைத்தாராம்.

பல கோடி செலவில் உருவாகும் இந்தப் பாடலுக்கு கவிதை எழுதித் தருபவர் வேறு யாருமல்ல... முதல்வர் கருணாநிதிதான்!!.


Monday, January 11, 2010

ஆயிரத்தில் ஒருவன் பொங்கலுக்கு இல்லை


கடும் பிரச்சினைகளுக்கு பின் பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் இப்போது வர்ப்போவதில்லை. செல்வராகவனால் ஏற்பட்ட தலைவலிதான் இது. ஆனால் திரையரங்குகளில் முன்பதிவு திறக்கப்பட்டு பதிவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத்தடை இரண்டு நட்களில் நீக்கப்படுமா? என்பது சந்தேகமே.

இந்த பிரச்சினை குறித்த விபரம் இதோ

சந்திரசேகரன் தயாரிப்பில் "காசிமேடு" என்ற படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் செல்வராகவன். 2கோடிசம்பளமும் பேசப்பட்டிருந்தது.2007ல் இதற்காக 90லட்சமும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்திற்கான எந்த முயற்சியும் செல்வா செய்யவில்லை. கடுப்பாகிப் போன சந்திரசேகரன் பிரச்சினையை தயாரிப்பாளர் சன்கத்திற்கு எடுத்து சென்றார்.

90 லட்சம் திருப்பி கொடுக்கப்பட்ட நிலையில் மீதத் தொகை 1.10 கோடியை ஆயிரத்தில் ஒருவன் வெளியீட்டுக்கு முன் தருவதாக கூறியவர் அதை கொடுக்காமலே ஏமாற்றி படத்தை வெளியிடும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில் தொடரப்பட்ட இவ்வழக்கில் 20ம் தேதி வரை இபடத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிது நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன் பதிவு செய்ய விழைவோர் யோசித்து செய்யவும்.

அன்பே சிவமும் கடவுள் நம்பிக்கையும் (இறுதி)


முந்தைய பகுதிகள்

"அன்பே சிவம்" - ஒரு வரலாறு -1

"அன்பே சிவம்" - ஒரு வரலாறு-2

விளக்கம் - 4

திருமண மண்டபத்தில் கமலை பார்த்த நாசர் இழுத்து செல்வார்.

அப்போது கமல்

"நீங்க என்னைக்காவது க்யூல நின்னு சாமி கும்புட்டுருக்கீங்களா?
இருக்குற க்யூவல்லாம் நிக்க வசிட்டு தனியா பர்சனல் தரிசனம் பன்றவராச்சே நீங்க.
செய்யற தப்பெல்லாம் பன்னிபுட்டு உண்டியல்ல காச போட்டுருவீங்க. உங்க பாவத்தை எல்லாம் மன்னிச்சி கடவுள் காப்பாத்துவாரு இல்ல.
அப்புடி காப்பாத்துற கடவுள் கடவுளே இல்ல கூலி. ஏண்ணா அவரும் காசு வாங்கிட்டு தான வேல செய்யுறாரு"

என்பார். என்ன ஒரு அருமையான விளக்கம்.

விளக்கம் - 5

இறுதியில் சந்தானபாரதி அரிவாளுடன் கமலை கொலை செய்ய வந்து மனதை மாற்றி கொள்ளும் போது,

"எனக்கு கடவுள் நம்ம்பிக்கை இருக்கு தம்பி. உங்களூக்கு எப்புடியோ?" என்பார்.

அதற்கு கமல் "எனக்கும் இருக்கு" என்பார்.

"யார் அந்த கடவுள்?" என்றதும் சந்தான பாரதியை காட்டி "ஒருத்தர கொலை பன்ன வந்துட்டு மனச மாத்ஹ்டி கிட்டு மன்னிப்பு கேக்குற மனசு இருக்கு பாருங்க அதுதான் கடவுள்" என்பார்.

"மனச மாத்திக் கிட்டேன் அதுக்காக நான் கடவுள்லாம் இல்ல தம்பி" என்பார்.

"அப்புடில்லாம் நம்பிக்கை இல்லாம நாத்திகம் பேசதீங்க. இந்த மாதிரி கடவுள் உலகம் பூரா இருக்கு நாமதான் பாக்குறதில்ல" என்பார்.


என்னை மெய்சிலிர்க்க வைத்த காட்சி இது. என் விருப்ப படமான அன்பே சிவத்தை பற்றியும் அதனற்புத காட்சியை பற்றியும் விளக்கியதில் பெருமிதம் கொள்கிறேன். உங்களுக்கு பிடித்த காட்சியை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

பிடித்திருந்தால் அப்படியே தமிலிசிலும் தமிழ்மணத்திலும் வாக்களித்து செல்லுங்கள்.

Sunday, January 10, 2010

தமிழ் சினிமா விருதுகள் 2009 (முதல் பகுதி)

2009ன் திரையுலக விருதுகள் வழங்கலாம் என முடிவெடுத்து ரசிகர்களிடம்(வேற யாரு நம்ம நட்பு வட்டாரத்துல ஒரு 15 பேரு) வாக்கெடுப்பு நடத்தியதில் வழங்கபட்ட விருதுகள் (விருது பெற்றவர்கள் காசோ கோப்பையோ கேட்கக்கூடாது).

சிறந்த இயக்குனர்: பாண்டிராஜ்

தனது "பசங்க" மூலம் தமிழ் நட்டு மக்களை திரும்பிப் பார்க்க வைத்து அதே படத்திற்காக விருது பெற்ற பாண்டிராஜ் இந்த வருடத்தின் சிறந்த இயக்குனர். தொடர்ந்து இதே போல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை வழங்குங்கள் பாண்டிராஜ்.

சிறந்த இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

சென்ற வருடம் வாரணம் ஆயிரம் மூலம் விருது பெற்ற இவரின் இந்த வருட அயன் பாடல்கள் இந்த வ்ருதை பெற்று தந்துள்ளது. வாழ்த்துக்கள் ஹாரிஸ். 20010 லும் நல்ல இசையை கொடுங்கள் (கொஞ்சம் காப்பி இசையை கைவிடுங்கள்).

சிறந்த பாடலாசிரியர்: தாமரை

தாமரை வரிகள் என்றால் கேட்கவா வேண்டும். சென்ற ஆண்டின் வாரணம் ஆயிரம் வரிகள் இன்னும் மனதை விட்டு நீங்காத நிலையில் இவரது "ஒரு வெட்கம் வருதே" என்ற பசங்க பாடல் 2009ன் சிறந்த பாடல் வரிகள் இந்த விருதை பெற்று தந்துள்ளது.

சிறந்த நகைச்சுவை நடிகர்: சந்தானம்

இந்த 2009ன் சிறந்த ந்கைச்சுவை நடிகர் சந்தானம். சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவுடன் இவர் அடித்த கூத்துகள் இவருக்கு இந்த விருதை பெற்று தந்துள்ளது.



சிறந்த நடிகை: பூஜா

நான் கடவுள் படத்தில் இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை வியக்க செய்தது. கண் தெரியாத குருடியாக அப்படத்தில் வாழ்ந்து காட்டிய பூஜாவுக்கு இந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருது.

சிறந்த நடிகர்: ஆர்யா

பல வருடம் சிரமப்பட்டு தன் உருவம் மாற்றி தலைகீழ் நின்று தன் திறமையை நிரூபித்த ஆர்யா இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை நான் கடவுள் படத்தின் மூலம் பெறுகிறார்.

சிறந்த படம்: பசங்க


சிறுவர்களை வைத்து துவங்கி இறுதி வரை அவர்களோடே பயனிக்கும் இத்திரைப்படம் தமிழ்சினிமாவில் ஒரு புது முயற்சி. அனைவரையும் கட்டி போட்டு ரசிக்க வைத்த பசங்க இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம்.

இது முதல் பகுதிதான். இரண்டாம் அகுதியில் திரைக்குப் பின்னால் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப் படும்.

Saturday, January 9, 2010

ரசிகர்களுக்கும் அசல் தயாரிப்பு நிறுவனத்திற்கும் அஜீத் கடிதம்


தனக்குத்தானே பட்டப்பெயர் வைத்து கொண்டு திரியும் நடிகர்களுக்கு மத்தியில் நம்ம தல ஒரு அற்புதமான முடிவை எடுத்துள்ளார். நாம் அதனை ஏற்று கொள்வோம் என்ற நம்பிக்கையில்.

அதனை எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்பது நாம் அவருக்கு செய்யும் மரியாதை. அது நம் கடமையும் கூட.

அந்த கடிதத்தில் நம்ம தல சொன்னது:

இனி என் பெயருக்கு முன்னால் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் வேண்டாம். படத்திலோ அதன் விளம்பரங்களிலோ தன் பெயரைப் போட வேண்டாம். இதற்குக் காரணம் தமிழ்சினிமாவின் இன்றைய மாற்றம்தான்.

என் போன்ற நடிகர்களையும், ரசிகர்களையும் பொதுமக்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு, இந்த முடிவை நான் எடுத்து இருக்கிறேன்.

என் ரசிகர்கள் கண்ணியமானவர்கள் என்ற கருத்து எப்போதும் பொதுமக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்... புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓபனிங் பாடல் வேண்டாம், அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம் என சினிமா நாயகர்களில் முன்னோடியாக திகழும் அஜீத்தை என்னவென்று சொல்வது.

"அன்பே சிவம்" - ஒரு வரலாறு-2


யார் கடவுள்? என்ற வினாவிற்கு தெளிவாக பல இடங்களில் பதில் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம். அந்த விளக்கங்களை இப்போது பார்க்கலாம்.

விளக்கம்-1

கமல் பேருந்து விபத்திலிருந்து மீட்கப்பட்டு மருத்துவ்சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வந்து மலை மீது இருக்கும் ஒரு பெட்டிக் கடையில் அமர்ந்திருக்கும் பொழுது அக்கடையின் உரிமையாளரான ஒரு பெண் சொல்லுவார்

"இப்புடி பொழச்சி வந்தவங்களை நாங்க கடவுளுக்கு சமானம்னு சொல்லுவோம். நீங்க கடவுள்" என கமலைப் பார்த்து சொல்லுவாள்.

அதற்கு கமல்

"நீங்களும்தான் கடவுள்தான். இப்புடி அன்பு காட்டுறவங்கள நாங்க கடவுள்னு சொல்லுவோம்னு சொல்லுவாரு"

விளக்கம்- 2

புகைவண்டி விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒரு சிறுவ்னுக்கு மாதவன் ரத்தம் கொடுத்து காப்பற்றுவார். ஆனால் அவசர ஊர்தியில் செல்லும் வழியில் அந்த சிறுவன் இறந்து போவான். அப்போது நடக்கும் உரையாடல்

மாதவன்: "என்ன மாதிரி கடவுள் இது. இந்த மாதிரி சமயத்துலதான் கடவுள் இருக்காராங்கற ந்ம்பிக்கையே போய்டுது. இல்ல எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு. நான் உங்கள மாதிரி இல்ல"

கமல்: "எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லன்னு யார் சொன்னா?"

மாதவன்: "ஓ திடீர்னு உங்களுக்கு கடவுள் நம்பிக்கை வந்துருச்சா? யார் அந்த கடவுள்?"

அதற்கு பதிலாய் கமல் மாதவனை கைகாட்டி சொல்லுவார் "யாருன்னே தெரியாத ஒருத்தனுக்காக வருத்தப் படுற மனசு இருக்கு பாருங்க அதுதான் உண்மையான கடவுள்" என்பார்.

விளக்கம்- 3

மாதவன் கமலை தன்னுடன் அழைக்கும் போது கமல் வர மறுக்கும் போது, கமலின் நாய் சங்கு தவ்வி வாகனத்தில் ஏற மாதவன் கேட்பார் "அந்த dog க்கு புரிஞ்சது கூட உங்களுக்கு புரியலையா?" என்பார்.அதற்கு கமல் dog அ திருப்பி போட்டா god வருதே என்பார். நகைச்சுவையாக இருந்தலும் அந்த நாயின் குணத்திலும் கடவுள் வெளிப் பட்டிருக்கிறார். கடவுள் என்ற குணம் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உள்ளது.

விளக்கங்கள் தொடரும்.....

Friday, January 8, 2010

"அன்பே சிவம்" - ஒரு வரலாறு -1


இது வரை நான் பார்த்த படங்களில் என் மனதிலிருந்து நீங்காத இடம் பிடித்த திரைப்படம் "அன்பே சிவம்". இந்த படம் வெளியான முதல் நாள் முதல் கட்சி எங்கள் ஊர் ரெத்னா திரையரங்கில் பார்த்தேன். நாங்கள் மொத்தம் 10பேர் போயிருந்தோம். ஆனால் இத்திரைப்படம் பிடித்தது எங்களில் இருவருக்கு மட்டும்தான்.

மற்றவர்களுக்கு பிடிக்கலவில்லை என்று சொல்வதை விட புரியவில்லை என்று சொல்வதுதான் உண்மை. ஆனால் அன்று பிடிக்கவில்லை என்று சொன்ன அவர்களுக்கு இன்று பிடித்த படம் அதே அன்பே சிவம் தான். என்ன செய்வது நல்ல படங்கள் வெற்றியடைய எத்தனை வருடம் தேவைப் படுகிறது.

இப்படி பட்ட சிறந்த படத்தின் கதையில் கடவுள் பற்றிய விளக்கங்கள் கொண்ட காட்சிகளை ஒரு வரலாறாக சொல்லலாம். அதன் ஆரம்பம் தான் இந்த பதிவு. மொத்தம் மூன்று பதிவுகள். இந்த முதல் பதிவில் கதை சுருக்கத்தையும் ஆரம்பக் காட்சியையும் விவரிக்க போகிறேன்.

ஒரு வரியில் சொன்னால் "கடவுள் என்றால் என்ன?" இதுதான் படத்தின் கதை. அதற்கான விள்க்கம் தான் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பதிய பட்டிருக்கிறது. புவனேஷ்வர் ரயில் நிலையத்தில் ஆஅரம்பமாகும் கதையில் மாதவன் ஒரு பணக்கார வீட்டு பையன் மட்டுமல்லாது விளம்பரப் படம் எடுப்பவர்.

தன் திருமணத்திற்கு சென்னை செல்ல வந்தவர் மழைக்காரணமாக புவனேஷ்வரில் மாட்டி கொண்டிருக்கும் போது கமலின் விகார முகத்தை பார்த்து அவரை தீவிரவாதி என நினைத்ஹ்டு கவல் துறைக்கு தகவல் கொடுத்து பின் கமலிடம் இது என் தப்பில்லை உங்களை பார்த்தா அப்புடி தெரியுது அதான்னு சொன்னதும் கமல் "ஒரு தீவிரவாதி என்னை மாதிரி அசிங்கமா இருக்கனும்னு இல்ல. கோட் சூட்லாம் போட்டு உங்கள மாதிரி கூட இருக்கலாம்னு சொல்வார்".

இப்படி இருவருக்குமான வாக்குவாதத்தில் தொடங்கும் கதையில் கமலின் இந்த வாக்குவாதங்கள் மாதவனுக்கு பிடிக்காமல் போக கமலையும் பிடிக்காமல் போகிறது. கமலின் ஒவ்வொரு செயலும் மாதவனை ஏதாவது ஒரு விதத்தில் பாதித்து விடும். கண்ணில் மிளகாய் பொடி, லாட்ஜில் கதவு திறப்பது என்று.

கடவுள் காட்சிகள் அடுத்த பதிவிலிருந்து.

அன்பே சிவம் படம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் இங்கே தெரிவியுங்கள். விருப்பமிருந்தால் வாக்களித்து செல்லுங்கள்.



Thursday, January 7, 2010

அஜீத்தின் 50 -கௌதம், தமண்னா,ஏ.ஆர்.ரகுமான்


தல ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இது. தலயோட 50வது படத்தை இயக்கப் போவது வெங்கட் பிரபுவா? விஷ்னுவர்தனா? கௌதமா? என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில் இப்போது ஒரு முடிவு வரு நிலை நெருங்கியிருக்கிறது.

அஜீத்தின் 50ஐ இயக்கப் போவது கௌதம் என்பது உறுதியாகியிருக்கிறது. இந்த படத்தை தயாரிக்க போவது தயாநிதி அழகிரியின் "Cloud Nine Movies". நடிகைக்கான பேச்சுவர்த்தையில் தமண்ணாவை கேட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தின் தயாரிப்புக்கு முதலில் அவர்கள் அனுகியது இளையதிலகம் பிரபுவைத்தான். ஆனால் அவர் முடியது என சொன்னதால் தயாநிதி அழகிரியை கேட்டிருக்கிறார் கௌதம். வாரணம் ஆயிரம் வெற்றி காரணமாக எந்த மறுப்பும் சொல்லாமல் ஒத்து கொண்டிருக்கிறார் தயாநிதி அழகிரி.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இப்படத்தின் இசைக்கு அவர்கள் அனுகியிருப்பது ஏ.ஆர்.ரகுமானை. இன்னும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இப்படம் ஒரு த்ரில்லர் படமாக எடுக்க முடிவெடுத்திருக்கிறார் கௌதம் வாசுதேவ மேனன். இந்த கூட்டனி மட்டும் முழுமையாக உறுதி செய்யப் பட்டால் நம்ம தலயோட 50 நிச்சயம் வெற்றிப் படம்தான்.

தமிழில் 3idiots மாதவன், சூர்யா, கணேஷ் வெங்கட்ராமன்


3idiots ஒரு நல்ல கருத்தை நகைச்சுவையாகவும் ஆழமாகவும் பதிவு செய்திருக்கும் ஒரு அருமையான படம். ஹிந்தி தெரியலைன்னாலும் ஆங்கில sub title இருக்கு தவறாம பாருங்க. அமீர்கான் இந்த வயதிலும் கல்லூரி மாணவன் வேடத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்.

All is Well என்ற வாக்கியம் மனிதனின் தன்னம்பிக்கையின் ஊன்றுகோலாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இதை அமீர்கான் உபயோகிக்கும் போதெல்லாம் கைத்தட்டல் பெறுகிறார். அதிலும் ஒரு பெண்ணிற்கு ஆண்லைனில் பிரசவம் பார்த்து குழந்தையை காப்பாற்றும் காட்சியில் மெய் சிலிர்க்க வைத்துள்ளனர்.

பாடத்திட்ட முறையை எதிர்த்து பேசும் காட்சிகளில் நகைச்சுவையாக இருந்தாலும் ரசிகர்கள் அதன் கருத்தாழம் புரிந்து கைத்தட்டுகிறார்கள்.மொழி பாரபட்சமின்றி அனைவரும் பார்த்து பாரட்ட வேண்டிய ஒரு திரைப்படம் இந்த 3idiots. தலைமறைவான ஒரு நண்பனைத் தேடி இரண்டு நண்பர்கள் அலைவதில் தொடங்கி அவர்களின் நினைவலைகளுக்குள் நம்மை அழைத்து சென்று ஒரு அற்புதமான கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

நடிகர்கள் அமீர்கான், மாதவன் மற்றும் ஜோசி மூவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். பிள்ளைகளின் ஆசை என்ன என்று தெரியாமல் தங்கள் விருப்பத்திற்கு பிள்ளைகளின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பெற்றோர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல பாடம்.

அது மட்டுமல்ல நம் கல்விமுறையின் குறைபாடுகளும் ஆசிரியர்களும், மாணவர்களும் அதற்கு அடிமையாகியிருப்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார். இந்த படம் நிச்சயம் தமிழில் மறுபதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் நம் தமிழ் சினிமாவில் மூன்று நடிகர்கள் ஒரே படத்தில் நடிப்ப்தென்பது கடினமான விடயமாக உள்ளது.


இந்த படம் தமிழில் எடுக்கப் பட்டால் இந்த மூன்று நாயகர்களும் பொருத்தமாக இருப்பார்கள்:

சூர்யா - அமீர்கான் பாத்திரம்
மாதவன் - மாதவன் பாத்திரம்
கணேஷ் வெங்கட்ராமன் - ஜோசி பாத்திரம்

கரீனாவுக்கு அந்த அளவு முக்கியத்துவமில்லாததால் ஏதாவது ஒரு நடிகையை கதாநாயகியாக்கி படம் எடுக்கலாம். இந்த மூன்று நடிகர்களும் தங்களின் நடிப்புத் திறமைய நிரூபித்தவர்கள். இந்த 3idiots ஐ தமிழில் மறுபதிவு செய்து வெளிவரும் நாளுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்.

Wednesday, January 6, 2010

இசைப்புயலுக்கு பிறந்தநாள் - வாழ்த்தலாம் வாங்க


இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். தமிழ் திரை இசைக்கு இளையராஜாவுக்கு அடுத்து ஆள் இல்லை என்றிருந்த காலத்தில் தமிழில் தன் முதல் படமான ரோஜா மூலம் மிக குறைந்த வயதில் அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே அனைத்து தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார்.

பின் ஹிந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழி மக்களின் மனதில் இடம் பிடித்து உலக அரங்கில் இந்திய இசையை எடுத்து சென்று இரண்டு ஆஸ்கர்கள் பெற்று பேசும் போது கூட நம் தமிழ் மொழியில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என முழங்கிய அந்த தமிழனை வாழ்த்த வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது.

இவ்வளவு புகழ் பெற்றும் இன்றும் ஒரு சாதாரன மனிதனாக எவ்வித கர்வமோ, ஆணவமோ இன்றி இயங்கி வரும் அந்த இசைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரகுமான் (திலீப்).

தலைவர் பேச்சில் அடங்கிய சேரன்


சமீபத்தில் ஜக்குபாய் திரைப்படம் திரைக்கு வராமலே குறுந்தகடிலும் வலையுலகிலும் வெளிவந்திருப்பது வருந்தத் தக்க விடயம். ஆனால் இது பற்றி இயக்குனர் சேரன் பேசுகையில் "ரசிகர்களை விட்டு விசிடி விற்பவர்களை வெட்டணும், ஒழிக்கணும் என்றார்."

என்ன சேரன் ஒரு படம் வெளிவரும் முன் வலையில் வெளி வந்தா அந்த கருப்பு ஆடு நிச்சயம் உங்க திரைத்துரைக்குள்தான் இருக்குன்னு உங்களுக்கு தெரியாதா? முதலில் ஆட்டை கண்டு பிடிங்கப்பு.

இது குறித்து ரஜினி பேசுகையில்:

இந்தப் பிரச்சினை எங்கிருந்து வந்தது?. சினிமாவுக்குள்ளிருந்ததான். யரோ பண்ணலை... இங்க இருக்கிற யாரோதான் இந்த வேலைய செய்றாங்க. அதுக்கு மக்களை ஏன் பிளேம் பண்ணனும்?.

தியேட்டர்லருந்து பிரிண்ட் வெளியில போகுதுன்னு தெரிஞ்சா அந்த தியேட்டரை தடை பண்ணுங்க. ஒரு லேப்லருந்து வெளியில போதுன்னு தெரியுதா... அந்த லேப்பை நிப்பாட்டுங்க. எபெக்ட்ஸிலிருந்து போகுதா... அதையும் கட் பண்ணுங்க. சும்மா யாராவது ஒருத்தர் மேல பழிபோடக் கூடாது.

உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்... படம் நல்லாருந்தாதான் யாரும் பார்ப்பாங்க. நல்லால்லேன்னா, எப்பேர்ப்பட்ட படத்தையும் தூக்கிப் போட்டுடுவாங்க. யார் சொன்னாலும் பார்க்க மாட்டாங்க.

அதனால திருட்டு விசிடி தடுப்பது எப்படின்னு நமக்குள்ள கூடிப் பேசணும். அதுக்கு பிரஸ்ஸை கூப்பிட்டு என்ன பண்ணப் போறீங்க?. எல்லாவற்றையும் ஆலோசனை செய்து தெளிவா முடிச்சிட்டு பிரஸ்ஸுக்கு சொல்லணும்.

அப்புறம் இங்க சேரனும் கமலும் ஒரு விஷயம் சொன்னாங்க. 'எங்களுக்கு சினிமாவை தவிர எதுவும் தெரியாது. இதைவிட்டுட்டு நாங்க எங்க போவோம்னெல்லாம்' சொன்னாங்க ஒருவேளை நான் முன்ன கண்டக்டரா இருந்ததால, திரும்பவும் கண்டக்டர் வேலைக்கே போயிடுவேன்னு நினைச்சிட்டாங்க. இல்ல... எனக்கும் சினிமாதான் எல்லாம்!" என்றார்.

தலைவரு தலைவருதான். சரியா சொன்னீங்க தலைவா. தலைவர் பேசும் முன் கு(கொ)தித்து கொண்டிருந்த சேரன் ரசிகர்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என அவர் சொன்னதைக் கேட்டதும், சத்தமில்லாமல் வெளியேறினாராம்.