இது இரண்டு படங்கள் பற்றிய விமர்சணம்.
கோவா:
ஏண்டா இந்த படத்துக்கு வந்தோமுன்னு? தியேட்டர்ல இருக்குற அனைத்து ரசிகர்களையும் வருத்தப்பட வைத்திருக்கும் ஒரு மொக்கைப் படம். இரண்டு என்டர்டெய்னர் படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக இருந்த வெங்கட் பிரபு தன் குடும்பப் பெருமைக்காகவும் தம்பிக்காகவும் ஐஸ்வர்யா பணத்தை வீணடித்திருக்கிறார்.
மூன்று இளைஞர்கள் ஊர்க் கட்டுப்பாட்டை மீறி மதுரைக்கு செல்கின்றனர். அங்கு அதில் ஒருவனின் நண்பனுக்கு வெள்ளைக்காரப் பெண்ணுடன் திருமணம் நடப்பதைப் பார்த்து வயிற்றெரிச்சலுடன் விபரம் கேட்க, அவன் கோவாவில் கைடு வேலை பாத்துட்டிருந்தப்ப பிக்கப் பன்னதா சொல்ல, இவனுங்களும் வெள்ளைக்காரிகளை பிக்கப் பன்ன கோவா போறானுங்க.
போன இடத்துல சம்பத்தும் அரவிந்தும் இவனுங்களுக்கு உதவி செய்யுறாங்க. இந்த இரண்டு பேரின் கதா பாத்திரம் அனைத்து ரசிகர்களையும் முகம் சுழிக்க வச்சிருச்சி. இந்த இரண்டு ஆண்களும் ஒருத்தனை ஒருத்தன் காதலிக்கிறானுங்க (தோஸ்த்தனாங்க... )இவர்கள் இருவரின் சென்டிமென்ட் காட்சிகளில் ரசிகர்கள் வெறுப்படைந்து "டேய் படத்த ஆஃப் பன்னுங்கடான்னு" கத்த ஆரம்பிச்சிட்டாங்க.
இடைவேளைக்கு பிறகு சிறிது நேரம் கழித்து திரும்பிப் பாத்தா படம் பாத்துட்டிருந்த பாதி பேரக் காணும். குடுத்த காசுக்கு தலைவலிதான் மிச்சமாச்சு. இவனுங்க பன்னிருக்குற நகைச்சுவையிலயும் ஒன்னும் தேறல. எல்லாம் பழைய தேஞ்சி போன ரிக்கார்டு.
என்ன கொடும சரவணன் இது?
தமிழ்ப்படம்
தமிழில் முழு நீல ஸ்பூஃப் திரைப்படம். சக நடிகர்களை இமிட்டேட் செய்து நகைச்சுவை காண்பிப்பது. சினிமாப்பட்டி என்ற கிராமத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு கள்ளிபால் கொடுத்து கொலை செய்ய வேண்டும் என்பது நாட்டாமையின் தீர்ப்பு. அங்கு பிறக்கும் சிவாவுக்கு பாட்டி கள்ளிப்பால் கொடுக்க போகும் போது துவங்குகிறது படம்.
கள்ளிபால் பிராண்ட் நேமோட வருது பி.எஸ்.கே கள்ளிப்பால் சுத்தமானது சுகாதாரமானது என அட்டைப்பெட்டியை காட்டும் போது ரசிகர்களின் சிரிப்பொலி பெருகத் தொடங்குகிறது.அதன் பின் பறவை முனியம்மாவால் சென்னை எடுத்து சென்று வளர்க்கப்படும் சிவாதான் நாயகன்.
தமிழகத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரையும் இமிடேட் செய்கிறார். நடிகர்கள் மட்டுமல்லாது தமிழ்ப்படங்களின் வழக்கமான காட்சிகளையும் நகைச்சுவையாக கலாய்த்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்கள்.வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்னு ஒர் பழமொழி இருக்கு. அந்த சிரிப்புக்கு இந்தப் படம் 100% உத்திரவாதம்.
தளபதி மம்முட்டி, சிவாஜி ரஜினி, அந்நியன் படக்காட்சி இவற்றை மிஸ் பன்னாம பாருங்க. பக்கத்து சீட்டுப் பொண்ணு சிரிச்சு சிரிச்சு சீட்டிலிருந்து கீழ விழுந்துருச்சு. படத்தின் காட்சிகளை சொன்னால் சுவாரஸ்யம் குறைந்து போகலாம். அதனால் தான் விமர்சணத்தை இத்துடன் முடித்திருக்கிறேன்.
போய் பாருங்க வயத்து வலி நிச்சயம். ஆங்காங்கே சிறு சிறு இழுவை இருந்தாலும் சுவாரஸ்யம் குறையாத நகைச்சுவை காட்சிகள். எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிறாடை மூர்த்தி மற்றும் மனோபாலா சரிவர உபயோகப் படுத்தப் படவில்லை.
12 comments:
Thanks for, making me to book for Tamil Padam
Saving me from Goa
Review, though crisp is effective. Good Job
//ஏண்டா இந்த படத்துக்கு வந்தோமுன்னு? தியேட்டர்ல இருக்குற அனைத்து ரசிகர்களையும் வருத்தப்பட வைத்திருக்கும் ஒரு மொக்கைப் படம்//
நான் நேத்து தன படம் பாத்தேன் .
நல்ல தான் இருக்கு பாஸ் . நீங்க சொல்லுற அளவுக்கு மோசம் இல்ல .
நாங்க 7 பேரு படம் பாத்தோம் .படம் ஜாலியா தன போனது .
அதுவும் புலி உறுமுது பாட்டுக்கு தியட்டர் அலறிச்சு .
Thoongamma Padatha Vimarchanam Pannunga
Correct ana review boss goa friday first show family oda poi ayyo kodumai venkatprabhuka poi eppadi enna da thalaivar panathai kali panitanga nu thonuchu sema mokkai except few scenes, enna solla vararu youngster ellam homo kathaiya kanpichu nu theriyala..
Evening show tamilpadam parthom sema comedy worth .. kodutha kasuku mela kuvitanga sema jolly a sirichi sirichu
tamilpadathi pathavathu enni varun tamil padathi thayavuseithu teruthunga!! ennakku therinji ithu oru nalla message !!!! oruthan aducha kezathan vizuvan !! anna avan karnatakavula vizamattan!!!! keta avan herovan nalla semma otu otirukanga!! padam super o super chinna chinna viciam koda rasikkavaikuthu!i love siva!! avaru action super!!!ella comadian polla illama avarukkunu thani bannaya kadipidichirukkaru!!!claimax super
அப்போ கோவா பார்க்க வேண்டாம்னு சொல்றிங்க.. ஓகே. ரைட்டு..
தமிழ் படம் பார்த்தாச்சி.. நல்ல ஜோக் தான்.. last-ல Mr. D அ காட்டினதும் தியேட்டர்ல எல்லாரும் எழுந்து போய்ட்டாங்க.. அவ்ளோ மொக்கை..
திரை விமர்சனம் எழுதும் அதிமேதாவிகளின் கவனத்துக்கு:
ஒரு காரியத்தை ரொம்ப சிரத்தையா செய்து வரும் நீங்கள், அந்த காரியம் நன்றாக
முடியும் என்ற நம்பிக்கையில் தானே செய்கிறீர்கள்? அது போல தான் படம்
எடுக்குறதும். வெறும் 50 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி படம் பார்க்கும்
நீங்கள் இவ்வளவு யோசிக்கும் போது, படம் தயாரிப்பாளர் எவ்வளவு
யோசிச்சிருப்பாரு? அப்போதைக்கு அவர் சரின்னு நினைக்கும் படத்துக்கு தான்
பணம் கொடுப்பாரு அது சரியா தப்பான்னு அவர் தான் பீல் பண்ணனும் ஏன்ன்னா அது
அவரு பணம்.
படம் பாத்து மக்களுக்கு புடிக்கலைன்னா அத மக்கள் சொல்லணும் அதவிட்டு நீங்க
என்னமோ அவதாரம் எடுத்து வந்த மாதிரி விமர்சணம் எழுதுறது! தெரியாம தான்
கேக்குறேன் மக்களோட கண்ணோட்டமும் உங்களோட கண்ணோட்டமும் ஒரே மாதிரியா
இருக்கும்? ஒரு சப்ப கதையா கூட இருக்கட்டும் உனக்கு புடிக்காதது
அடுத்தவனுக்கும் கண்டிப்பா புடிக்கும் சாமி!
படம் பாக்க போறவனைக்கூட விமர்சணம்ங்குற பேர்றல உங்களோட கண்ணோட்டத்தை எழுதி போக விடாம பண்றது என்ன
நியாயம் பாஸ்? அடுத்தவன் சோத்துல மண்ணவாரி போடுறது நமக்கு தான் கை வந்த
கலையாச்சே! படம் விமர்சனம் பண்ணுறவனுங்க எல்லாம் சேந்து ஒரு படம் எடுங்க
நல்லா ஓடுதான்னு பாப்போம் ?
உங்களுக்கு புடிக்கலைன்னா நீங்க போயி பாக்காதீங்க, அத விட்டுட்டு அடுத்தவனை
பாக்காதன்னு சொல்ற மாதிரி ஏன் எழுதுறீங்க. நீங்க ஒரு படம் எடுத்து அது
மொக்கையானா உங்களுக்கு என்ன மாதிரி பீலிங்ஸ் இருக்குமோ அது போல தான்
தயாரிப்பாள்ரும். அவரும் மனுசன் தான்யா. எப்படி அவரு உங்க வியாபாரத்தில்
தலையிடுவதில்லையோ அது போல நீங்களு அவருடைய வியாபாரத்தை விமர்சனம் செய்வது
கூடாது.. ஒரு படம்ங்குறது உங்களுக்கு மட்டும் தான் 2 1/2 மணி நேர கேளிக்கை
ஆணா இதுதான் பல பேருக்கு வாழக்கை. அடுத்தவனை எப்போதும் உங்க கண்ணோடத்தில
பாக்காதீங்க பாஸ் !
மிஸ்டர் தர்மா பணம் இருக்குறவன் எதை வேணா எடுக்கலாமுன்னா பாத்து ஏமாற மக்கள் என்ன முட்டாளா? நாங்கல்லாம் பாமர மக்கள் ஒரு படத்துக்கு போவனும்னா அதுக்கு கூட பல தடவ யோசிச்சி பட்ஜட் போட்டு தான் போவோம். அப்புடி போறப்ப படம் இப்புடி இருந்துதுன்னா கொதிக்கத்தான்யா செய்வோம். அதிமேதாவித்தனமா கமெண்ட் போட்டுருக்கீங்க. 50ரூன்றது என்ன சாதரணமா வந்துருமா?
ஒருவர் பணம் கோடிகள் இட்டு படம் எடுக்கும் போது அதை விமர்சனம் செய்வது சரியில்லை என நண்பர் தர்மா தனது கருத்தை சொல்லியிருக்கிறார் அது நிச்சியம் தவறான கருத்துதான் காரணம்கோடிகள் இட்டு படம் எடுத்து அவர் வீட்டிற்குள்ளேய பார்ப்பாரனால் அதை பற்றி விமர்சனம் செய்வது சரியில்லை அது அவர் சொந்த விசயம் அதே நேரத்தில் அந்த படத்தை பொதுமக்கள் பார்வைக்கு அதுவும் நம்மிடம் பணம் பெற்றுக்கொண்டு நமக்கு திரையிடும் போது நாம் ஒரு விதத்தில நுகர்வோர் ஆகிறோம் நாம் பணம் கொடுத்து வாங்கிய பொருள் சரியில்லை என்றால் அதை நாம் ஏற்றுக்கொள்வோமா ஏற்றுக்கொள்ளமாட்டோம்தானே? இப்பொழுது கூட நண்பர் தர்மா http://cinemapulavan.blogspot.com தளத்தின் வாசகர் என்ற முறையில் தானே அவர் தனது கருத்தை பதிந்திருக்கிறார் அதற்காக சினிமா புலவன் அவர்களும் கோபப்படுவதில் நியாமில்லையே!
(வாக்குவாதம் வேண்டாம் இது வெறும் கருத்து மட்டுமே)
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
என்னை நண்பனாக ஏற்றுக்கொண்ட ஜிஎஸ்ஆர் அவர்களுக்கு நன்றி....
நண்பர் சினிமா புலவன் அவர்களே..
நீங்கள் "சினிமா புலவன்" என்ற பெயர் வைத்திருப்பதை பார்த்து சாதரணமாக எனோ தானோ என்று திரை விமர்சனம் எழுதும் நபர் நீங்கள் இல்லை என எண்ணியே உங்கள் விமர்சனத்தை படித்தேன். ஆனால் உங்கள் விமர்சனமும் இப்படி இருப்பது சக நண்பன் என்ற முறையில் கஷ்டமாக இருக்கிறது...
//கோவா:
ஏண்டா இந்த படத்துக்கு வந்தோமுன்னு? தியேட்டர்ல இருக்குற அனைத்து ரசிகர்களையும் வருத்தப்பட வைத்திருக்கும் ஒரு மொக்கைப் படம். //
என்ற முதல் வரியிலேயே நியாயம் இருக்கிறதா? நீங்களே சொல்லுங்கள்..
"அனைத்து ரசிகர்களையும்" என்ற வார்த்தையை சொல்ல காரணம் என்ன? (படம் முடிந்து ஒவ்வருவராக கருத்து கேட்டீர்களோ? )
மக்களோட கண்ணோட்டமும் உங்களோட கண்ணோட்டமும் ஒரே மாதிரியா இருக்கும்?
பல கோடி செலவு செய்த படம் உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் ஒரு ரெண்டு வாரம் அமைதியாக இருக்கலாமே, உங்களுக்கு பிடிக்காத படம் மற்றவர்களுக்கும் பிடிக்கலாம். ஆனா இவங்க படம் வெளியான முதல் நாள் முதல் ஷோ பாத்துட்டு படம் கடி, தாங்க முடியல, ஊத்திகிச்சு, தலை வச்சு படுக்காதீங்கன்னு சொல்லவேண்டாம்னு தோணுது பாஸ்...
//நீங்கள் "சினிமா புலவன்" என்ற பெயர் வைத்திருப்பதை பார்த்து சாதரணமாக எனோ தானோ என்று திரை விமர்சனம் எழுதும் நபர் நீங்கள் இல்லை என எண்ணியே உங்கள் விமர்சனத்தை படித்தேன். ஆனால் உங்கள் விமர்சனமும் இப்படி இருப்பது சக நண்பன் என்ற முறையில் கஷ்டமாக இருக்கிறது...//
நண்பரே...படம் பிடிக்கவில்லை. எனக்கு மட்டுமல்ல என்னுடன் திரையரங்கில் இருந்த பலருக்கு. அதனால்தான் எழுதினேன். உங்களுக்கு பிடித்திருந்தால் பிடிச்சிருக்குன்னு எழுதுங்க. மக்கள் ஏமாறக் கூடாதுங்கறது என் கருத்து. நல்ல படங்கள் நிச்சயம் ஆதரிக்கப் படும்.
goa padam kuppai
tamilpadam " advanced version of vijay tv lollu shaba
Post a Comment