Thursday, February 4, 2010

தமிழ் சினிமா உருவான வரலாறு - 2

தமிழ் சினிமா துவங்கிய முதல் வருடமான 1931-ல் காளிதாஸ் மட்டுமே வெளிவந்தது. அதன் பின் 1932ம் ஆண்டு தமிழில் எடுக்கப்பட்ட படங்கள் மொத்தம் 5.

1932ல் சர்வோட்டம் பதாமி, வடிவேலு நாயக்கர் இயக்கத்தில் சாகர் மூவிடோன்ஸ் தயாரித்த படம் "கலவா". இப்படத்தில் பி.வி.ரங்காச்சாரி, வி.எஸ்.சுந்தரேச ஐயர் மற்றும் டி.ஆர். முத்துலெஷ்மி ஆகியோர் நடித்திருந்தனர்.

1932ன் அடுத்தப் படம் "பாரிஜாத புஷ்பஹாரம்". இப்படத்தை பி.கே ராஜா சேன்டோ இயக்க "இம்பீரியல் ஃபிலிம்" நிறுவனம் தயாரித்தது. இப்படத்தில் நாகேந்திர ராவ், ருக்மணி, லீலா மற்றும் நரசிம்ம ராவ் நடித்திருந்தனர்.
( ராஜா சேண்டோ)

ராஜா சேண்டோ 1894ல் பிறந்தார். 1922ல் தனது திரைத்துரை வாழ்க்கையை ஒரு நடிகனாக "காமா" என்ற ஊமைப்படத்தின் மூலம் தொடங்கினார். ஹிந்தி, தெலுகு, தமிழ் என பல மொழிகளில் நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக இருந்த இவர், தமிழில் முதன் முதல் இயக்கிய படம்தான் இந்த "பாரிஜாத புஷ்பஹாரம்".

இவரது நினைவாக தமிழ்சினிமாவில் சிறந்த பணியற்றுபவர்களுக்கு தமிழக அரசு "ராஜா சாண்டோ நினைவு விருது" வழங்கியதுடன் தபால் தலையும் வெளீயிட்டது.இவர் 1943ல் காலமானார்.

1932ல் அடுத்து "ஈஸ்ட் இந்தியன் ஃபிலிம்" தயாரிப்பில் டி.பி.ராஜலெஷ்மி, டி.எஸ். மணீ நடிப்பில் "ராமாயணம்" வெளிவந்தது.
(டி.பி.ராஜலெஷ்மி)

1932ல் மீண்டும் சர்வோட்டம் பதாமி, வடிவேலு நாயக்கர் இயக்கத்தில் சாகர் ஃபிலிம் நிறுவனம் தயாரிப்பில் "அரிச்சந்திரா" திரைப்படம் வெளிவந்தது. இதில் வி.எஸ்.சுந்தரேச ஐயர் மற்றும் டி.ஆர். முத்துலெஷ்மி நடித்திருந்தனர்.

1932ல்கடைசியாக எடுக்கப்பட்ட திரைப்படம் "தர்மா".

1932ல் வெளீவந்த இந்த படங்கள் தமிழ் சினிமாவின் துவக்கங்களாய் அமைந்ததுடன் அக்கால ரசிகர்கள் மனதிலும் நிறைந்திருந்தது. இந்த கால கட்டத்தில்தான் ஏ.வி.எம் தனது ஸ்டுடியோவை காரைக்குடியில் நிறுவியது.

இந்த ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆரம்பகால வரலாற்றை பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

2 comments:

கலகன் said...

சிறப்பான பதிவு... தொடர்ந்து எழுதவும்...

Unknown said...

pls mail the 3rd part of this history of tamil cinema to my mail id: s.nav2enias@gmail.com . i couldn't load the page because the page directly shifts to some other website........ i am in a trouble . pls mail it to me within a week. pls.............