Tuesday, February 2, 2010

கமலஹாசன் -மின்னும் நட்சத்திரம் (1)


நவம்பர் 7, 1954 ல் பரமகுடியில் பிறநதவர் நம் கமல். 1960ல் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். "விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என ஒரு பழமொழி உண்டு. அதற்கு உதாரணம் இப்படத்தில் கமலஹாசனின் நடிப்பு. இப்படத்தில் அவரின் வசனப் பேச்சைக் கண்டு அனைவரும் வியந்திருக்கிறோம். இதன் பின் பல திரையுலக நட்சத்திரங்களுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்தார்.

தனது முதல் தேசிய விருதை தன் 4ம் அகவையில் களத்தூர் கண்ணம்மா என்ற முதல் படத்தில் பெற்றார் (சிறந்த குழந்தை நட்சத்திரம்).அதன் பின் பல படங்களில் துணை நடிகராக நடித்த இவர் 1975ல் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் நாயகனாக மாற்றம் பெற்றார். 1977ல் "அவர்கள்" படத்திற்காக தனது முதல் ஃபிலிம் ஃபேர் விருதை தன் நடிப்பிற்காக பெற்றார்.


பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1982ல் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த "மூன்றம் பிறை" படத்திற்காக ஒரு சிறந்த நடிகருக்கான தனது முதல் தேசிய விருதை பெற்றார். தனது 100வது படமான "ராஜபார்வை" மூலம் தயாரிப்பாளராகவும் தடம் பதிக்கத் தொடங்கினார்.

1987 ல் மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த "நாயகன்" படம் இரண்டாவது தேசிய விருதை பெற்று தந்தது. மேலும் இப்படம் நினைவில் நீங்கா 100படங்களில் டைம்ஸ் பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது(1988). மேலும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியப்படமும் இதுதான்.

இதன்பின் 1996ல் இவர் நடித்த "இந்தியன்" திரைப்படம் இவருக்கு மூன்றாவது தேசிய விருதை பெற்றுத் தந்தது. இப்படம் இது போன்ற சமுதாய சிந்தனைகள் நிறைந்த படங்கள் வர துவக்கமாய் அமைந்தது. குழந்தையாக ஒன்று, நடிகனாக மூன்று என மொத்தம் நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற பெருமை கமலையே சாரும்.



தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்து இப்போதும் தன் திறமையை நிரூபித்துக் கொண்டு திரைத்துரையின் எதிர்காலத்திற்கு முன்னோடியாய் திகழ்கிறார். திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்திருக்கும் இந்த நாயகனை இங்கு முதல் மின்னும் நட்சத்திரமாக எழுதியதில் பெருமை கொள்கிறேன்.

உங்களுக்கு தோன்றும் கருத்துகளையும் பிடித்திருந்தால் வாக்குகளையும் இட்டு செல்லுங்கள். இது உங்கள் இடம்.


Monday, February 1, 2010

அட்டு கோவாவும் ஹிட்டு தமிழ்ப்படமும்

இது இரண்டு படங்கள் பற்றிய விமர்சணம்.


கோவா:

ஏண்டா இந்த படத்துக்கு வந்தோமுன்னு? தியேட்டர்ல இருக்குற அனைத்து ரசிகர்களையும் வருத்தப்பட வைத்திருக்கும் ஒரு மொக்கைப் படம். இரண்டு என்டர்டெய்னர் படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக இருந்த வெங்கட் பிரபு தன் குடும்பப் பெருமைக்காகவும் தம்பிக்காகவும் ஐஸ்வர்யா பணத்தை வீணடித்திருக்கிறார்.

மூன்று இளைஞர்கள் ஊர்க் கட்டுப்பாட்டை மீறி மதுரைக்கு செல்கின்றனர். அங்கு அதில் ஒருவனின் நண்பனுக்கு வெள்ளைக்காரப் பெண்ணுடன் திருமணம் நடப்பதைப் பார்த்து வயிற்றெரிச்சலுடன் விபரம் கேட்க, அவன் கோவாவில் கைடு வேலை பாத்துட்டிருந்தப்ப பிக்கப் பன்னதா சொல்ல, இவனுங்களும் வெள்ளைக்காரிகளை பிக்கப் பன்ன கோவா போறானுங்க.

போன இடத்துல சம்பத்தும் அரவிந்தும் இவனுங்களுக்கு உதவி செய்யுறாங்க. இந்த இரண்டு பேரின் கதா பாத்திரம் அனைத்து ரசிகர்களையும் முகம் சுழிக்க வச்சிருச்சி. இந்த இரண்டு ஆண்களும் ஒருத்தனை ஒருத்தன் காதலிக்கிறானுங்க (தோஸ்த்தனாங்க... )இவர்கள் இருவரின் சென்டிமென்ட் காட்சிகளில் ரசிகர்கள் வெறுப்படைந்து "டேய் படத்த ஆஃப் பன்னுங்கடான்னு" கத்த ஆரம்பிச்சிட்டாங்க.

இடைவேளைக்கு பிறகு சிறிது நேரம் கழித்து திரும்பிப் பாத்தா படம் பாத்துட்டிருந்த பாதி பேரக் காணும். குடுத்த காசுக்கு தலைவலிதான் மிச்சமாச்சு. இவனுங்க பன்னிருக்குற நகைச்சுவையிலயும் ஒன்னும் தேறல. எல்லாம் பழைய தேஞ்சி போன ரிக்கார்டு.

என்ன கொடும சரவணன் இது?

தமிழ்ப்படம்

தமிழில் முழு நீல ஸ்பூஃப் திரைப்படம். சக நடிகர்களை இமிட்டேட் செய்து நகைச்சுவை காண்பிப்பது. சினிமாப்பட்டி என்ற கிராமத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு கள்ளிபால் கொடுத்து கொலை செய்ய வேண்டும் என்பது நாட்டாமையின் தீர்ப்பு. அங்கு பிறக்கும் சிவாவுக்கு பாட்டி கள்ளிப்பால் கொடுக்க போகும் போது துவங்குகிறது படம்.

கள்ளிபால் பிராண்ட் நேமோட வருது பி.எஸ்.கே கள்ளிப்பால் சுத்தமானது சுகாதாரமானது என அட்டைப்பெட்டியை காட்டும் போது ரசிகர்களின் சிரிப்பொலி பெருகத் தொடங்குகிறது.அதன் பின் பறவை முனியம்மாவால் சென்னை எடுத்து சென்று வளர்க்கப்படும் சிவாதான் நாயகன்.

தமிழகத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரையும் இமிடேட் செய்கிறார். நடிகர்கள் மட்டுமல்லாது தமிழ்ப்படங்களின் வழக்கமான காட்சிகளையும் நகைச்சுவையாக கலாய்த்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்கள்.வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்னு ஒர் பழமொழி இருக்கு. அந்த சிரிப்புக்கு இந்தப் படம் 100% உத்திரவாதம்.

தளபதி மம்முட்டி, சிவாஜி ரஜினி, அந்நியன் படக்காட்சி இவற்றை மிஸ் பன்னாம பாருங்க. பக்கத்து சீட்டுப் பொண்ணு சிரிச்சு சிரிச்சு சீட்டிலிருந்து கீழ விழுந்துருச்சு. படத்தின் காட்சிகளை சொன்னால் சுவாரஸ்யம் குறைந்து போகலாம். அதனால் தான் விமர்சணத்தை இத்துடன் முடித்திருக்கிறேன்.

போய் பாருங்க வயத்து வலி நிச்சயம். ஆங்காங்கே சிறு சிறு இழுவை இருந்தாலும் சுவாரஸ்யம் குறையாத நகைச்சுவை காட்சிகள். எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிறாடை மூர்த்தி மற்றும் மனோபாலா சரிவர உபயோகப் படுத்தப் படவில்லை.