Sunday, February 7, 2010

கலைவாணர் என்.எஸ்.கே - நகைச்சுவை நாயகன் (2)

முதல் பகுதியை படிக்க கலைவாணர் என்.எஸ்.கே - நகைச்சுவை நாயகன் (1)




திரைத்துரையில் தடம் பதித்த இவர் நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். தனக்கான திரைக்கதை, வசனங்களை தானே எழுதினார். நகைச்சுவையோடு மட்டுமில்லாமல் இவர் ஒரு சிறந்த பாடகராகவும் விளங்கினார்.

1935ல் மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துரையில் நுழைந்தார் நம் கலைவாணர். இப்படத்தில் அவர் டி.கே.சண்முகத்துடன் இணைந்திருந்தார்.

திரையுலகில் கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்து மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர். ஆம் இவரது நகைச்சுவைகள் சிரிக்க மட்டுமல்ல சிந்தனையைத் தூண்டவும்தான். மேலும் இவர் 1950களில் சில படங்களின் இயக்குனராகவும் விளங்கினார்.

டி.ஏ. மதுரத்துடன் இணைந்து திரையுலகை கலக்கத் தொடங்கினார் என்.எஸ்.கே. இவரது தனித்துவம், கொள்கை மற்றும் திறமையை கண்டு மதுரம் இவரைக் காதலிக்கத் தொடங்கினார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் மதுரம் முழு சுதந்திரத்துடன் வாழ்ந்தார்.

மதுரம் ஒரு நல்ல பாடகி. இவரும் என்.எஸ்.கே வும் இணைந்து பாடிய பாடல்கள் இன்றும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்றால் மிகையாகாது. இப்படி ஆனந்தம் பொங்க நகைச்சுவையோடு கலந்த இவர்களின் வாழ்வில் 1940ம் ஆண்டு "லக்ஷ்மி காந்தன்" கொலைவழக்கு பெரும் சோகத்தை உண்டு பண்ணியது.

ஆம் இந்த லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கில் நமது என்.எஸ்.கே வும் எம்.கே.டி யும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். நாடகம் மற்றும் திரைத்துரையில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இந்த இருவருக்கும் இந்த கொலைவழக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த லக்ஷ்மி காந்தன் கொலைவழக்கு பற்றிய விபரங்களை அடுத்த வாரம் விபரமாகப் பார்க்கலாம்.

(தொடரும்)

1 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

ம்.ம்...இன்னும் ஒரு வாரம் காத்து இருக்கனுமா.