Wednesday, January 6, 2010

தலைவர் பேச்சில் அடங்கிய சேரன்


சமீபத்தில் ஜக்குபாய் திரைப்படம் திரைக்கு வராமலே குறுந்தகடிலும் வலையுலகிலும் வெளிவந்திருப்பது வருந்தத் தக்க விடயம். ஆனால் இது பற்றி இயக்குனர் சேரன் பேசுகையில் "ரசிகர்களை விட்டு விசிடி விற்பவர்களை வெட்டணும், ஒழிக்கணும் என்றார்."

என்ன சேரன் ஒரு படம் வெளிவரும் முன் வலையில் வெளி வந்தா அந்த கருப்பு ஆடு நிச்சயம் உங்க திரைத்துரைக்குள்தான் இருக்குன்னு உங்களுக்கு தெரியாதா? முதலில் ஆட்டை கண்டு பிடிங்கப்பு.

இது குறித்து ரஜினி பேசுகையில்:

இந்தப் பிரச்சினை எங்கிருந்து வந்தது?. சினிமாவுக்குள்ளிருந்ததான். யரோ பண்ணலை... இங்க இருக்கிற யாரோதான் இந்த வேலைய செய்றாங்க. அதுக்கு மக்களை ஏன் பிளேம் பண்ணனும்?.

தியேட்டர்லருந்து பிரிண்ட் வெளியில போகுதுன்னு தெரிஞ்சா அந்த தியேட்டரை தடை பண்ணுங்க. ஒரு லேப்லருந்து வெளியில போதுன்னு தெரியுதா... அந்த லேப்பை நிப்பாட்டுங்க. எபெக்ட்ஸிலிருந்து போகுதா... அதையும் கட் பண்ணுங்க. சும்மா யாராவது ஒருத்தர் மேல பழிபோடக் கூடாது.

உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்... படம் நல்லாருந்தாதான் யாரும் பார்ப்பாங்க. நல்லால்லேன்னா, எப்பேர்ப்பட்ட படத்தையும் தூக்கிப் போட்டுடுவாங்க. யார் சொன்னாலும் பார்க்க மாட்டாங்க.

அதனால திருட்டு விசிடி தடுப்பது எப்படின்னு நமக்குள்ள கூடிப் பேசணும். அதுக்கு பிரஸ்ஸை கூப்பிட்டு என்ன பண்ணப் போறீங்க?. எல்லாவற்றையும் ஆலோசனை செய்து தெளிவா முடிச்சிட்டு பிரஸ்ஸுக்கு சொல்லணும்.

அப்புறம் இங்க சேரனும் கமலும் ஒரு விஷயம் சொன்னாங்க. 'எங்களுக்கு சினிமாவை தவிர எதுவும் தெரியாது. இதைவிட்டுட்டு நாங்க எங்க போவோம்னெல்லாம்' சொன்னாங்க ஒருவேளை நான் முன்ன கண்டக்டரா இருந்ததால, திரும்பவும் கண்டக்டர் வேலைக்கே போயிடுவேன்னு நினைச்சிட்டாங்க. இல்ல... எனக்கும் சினிமாதான் எல்லாம்!" என்றார்.

தலைவரு தலைவருதான். சரியா சொன்னீங்க தலைவா. தலைவர் பேசும் முன் கு(கொ)தித்து கொண்டிருந்த சேரன் ரசிகர்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என அவர் சொன்னதைக் கேட்டதும், சத்தமில்லாமல் வெளியேறினாராம்.

4 comments:

சினிமா புலவன் said...
This comment has been removed by the author.
Anonymous said...

thala thala than.........

Anonymous said...

ரசிகர்களை தவறாக பயன்படுத்தும் உரிமை தனக்கு மட்டும் தான் என்பதை தலை தெளிவாக சொல்லியுள்ளது.

சேரன் ஒரு படைப்பாளி, ஆனால் ரஜினி அதில் ஒரு கூலிக்கு மாரடிக்கும் ஒரு நடிகர். நம் தமிழ்நாட்டில் தான் இது மாதிரியெல்லாம் நடக்கும். அது தமிழனின் விதி.

goma said...

டெக்னாலஜி எவ்வளவு வரர்ந்திருக்கிறது ....இந்தத் திருட்டைக் கண்டு பிடிக்க ஒரு யுக்தி இல்லையா