Monday, January 25, 2010

அஜீத் பற்றி 50 (முற்றும்)


முதல் 25ஐ படிக்க இங்கே சொடுக்கவும் அஜீத் பற்றி 50 (பகுதி-1)

26) 2001ல் ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படமான தீனா மாபெரும் வெற்றியை பெற்று தந்ததுடன் இவரை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியது.

27) இந்த தீனா படத்திற்கு பிறகுதான் அஜீத் "தல" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட துவங்கிய காலம்

28) இதன் பின் அதே ஆண்டில் அவர் நடித்த சிட்டிசன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் சுமாரான வெற்றியே கிட்டியது.

29) இந்த சிட்டிசனில் முதல் முறை 10 விதமான கெயப்களில் நடித்துள்ளார்.

30) இதே ஆண்டில் அவர் நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் அவருக்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதை பெற்று தந்தது

31) 2001ன் இறுதியில் இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ஷாருக் கானுடன் இணைந்து ஒரு ஹிந்தி படத்தில் வில்லனாக நடித்தார்.

32) 2002ல் இவர் நடித்த ரெட் மற்றும் ராஜா படங்கள் இவருக்கு வெற்றியை தரவில்லை.

33) அதே ஆண்டில் மீண்டும் இரட்டை வேடத்தில் இவர் நடித்த வில்லன் திரைப்படம் வெற்றி பெற்றதுடன், இவரது நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்தது.

34) இந்நிலையில்தான் அவருக்கு கார் ரேசின் மீதிருந்த மோகம் மீண்டும் தலைதூக்க தொடர் தோல்விப் படங்கள் வரத் தொடங்கின.


35) 2003ல் இவர் நடித்த என்னை தாலாட்ட வருவாளா மற்றும் ஆஞ்சனேயா படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தன.

36) ஆஞ்சனேயா படத்தில் ஒரு போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருப்பார்.

37) 2004ல் வெளிவந்த ஜனா படமும் தோல்வியையே சந்தித்தது

38) சரணுடன் இணைந்து மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்த அட்டகாசம் மிகப்பெரும் வெற்றியை மீண்டும் பெற்று தந்தது

39) வெற்றிப்பட இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்த ஜீ திரைப்படம் இவரை மீண்டும் தோல்விக்கு தள்ளியது

40) 2005ல் இவர் நடித்த ஒரே ஒரு திரைப்படம் ஜனா. ஆனால் அப்படமும் தோல்வியையே தழுவியது

41) 2006ல் இவர் மொத்தம் 3 படங்களில் நடித்தார். அதில் பரமசிவன் மற்றும் திருப்பதி படங்கள் படு தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்தது

42) கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் மூன்றாவது படமான வரலாறு ஒரு மாபெரும் வெற்றியை தந்தது. இதில் அஜீத் 3 வேடங்களில் நடித்துள்ளார்

43) 2007ன் துவக்கத்தில் புதுமுக இயக்குனர் செல்லாவின் இயக்கத்தில் இவர் நடித்த ஆழ்வார் படம் மீண்டும் இவரை தோல்விக்கு தள்ளியது

44) இதையடுத்து மளையாளத்தில் தேசிய விருது பெற்ற படத்தின் ரீமேக்கான கிரீடத்தில் இவர் நடித்தார். இந்த படம் இவரை வெற்றியை நோக்கி அழைத்து சென்றாலும் சுமாரான வெற்றியே கிட்டியது

45) 1980ல் ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்ற பில்லா(அமிதாப்பச்சனின் டான் ரீமேக்) திரைப்படம் புதுப்பிக்கப்பட்ட முறையில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் விஷ்னுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து பெரும் வெற்றி பெற்றது

46) மேன் ஹூன் நா என்ற படத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட படம்தான் ஏகன். இதில் அஜீத் நயந்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை

47) தற்பொழுது அஜீத் தனது 49வது படமாக அசலில் பாவனா மற்றும் ஷமீரா ரெட்டியுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரியில் வெளிவருகிறது.

48) இந்நிலையில் அஜீத் தனது அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்திருக்கிறார். இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது

49) இவர் 2003ல் நடைபெற்ற ஃபார்முலா ஆசிய பி.எம்.டபுள்யூ பந்தயத்தில்(2003 Formula Asia BMW Championships) கலந்து கொண்டார்.

50) தலயின் 50வது படம் முடிவாகியுள்ளது. தயாநிதி அழகிரியின் க்ளவுட் னைன் மூவீஸ் இப்படத்தை தயாரிக்க கௌதம் வாசுதேவ மேனன் இயக்கவிருக்கிறார்

ஒரு நடிகரின் வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி குறுக்கிட்டாலும் அவற்றை பெரிதாக எடுத்து கொள்ளாமல் போராடிவரும் தன்னம்பிக்கை மனிதர் அஜீத் பற்றிய 50 விடயப் பகிர்வை இத்துடன் முடிக்கிறேன்


1 comments:

கிட்டிபுல்லு said...

சினிமாவில் இருப்பவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்கள் என்று சொல்ல முடியவில்லை
அதுவும் அஜித் போல மாஸ் ஹீரோக்கு தோல்வி படங்கள் வந்தாலும் படம் வரத்து குறையாது,இரண்டு ஓட வில்லை என்றாலும் ஒன்று ஓடிவிடும்.அதை வைத்து தன்னம்பிக்கையை
அளக்க முடியாது.